இலக்கியம்
இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து உலகெங்கும் பல உயிர்கள் இந்த நோய்க்குப் பலியாகின. உயிர்ச் சேதங்கள் மட்டுமின்றி பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாயின. குறிப்பாக அன்னியச் செலாவணி, சுற்றுலா வருவாய்களைப் பிரதானமாகக் கொண்ட நாடுகளின் பொருளாதார நிலை முற்றிலுமாக நசிந்து விட்டது என்பதே உண்மை. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ஸ்திரமற்ற அரசுகள் என பல இன்னல்களைச் சந்திந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்த நாடு, […]
மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை
மதம் எனும் கட்டமைப்பு அல்லது முறைமை எப்போது தோன்றியது என்பது புதிராகவே உள்ளது. வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஞானிகள், குருமார்கள் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை, இலக்கணத்தை வரையறுத்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர, மதம் எனும் மூல நம்பிக்கை உருவானது எப்போது என்பது தெரியவில்லை. மனிதன் தோன்றிய நாள் முதலே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். இக்கருத்துக்கு ஆதரவாகவோ, முரணாகவோ அழுத்தமான ஆதாரங்களை இவர்களால் தர முடியவில்லை என்பதால் இன்றும் […]
வெள்ளை நிறத்தொரு பூனை
எப்பொழுதும் கடும் வெயிலில் வாடும் சென்னை மாநகரம் அன்று மார்கழி மாதக் குளிரில் சற்றே நடுங்கி கொண்டிருந்தது . விடியற்காலை மணி 6:30. பல்லாவரம் பெருமாள் கோவில் வாசலில் ஆண்டாளின் திருப்பாவையை, சில பக்தர்கள் பாடிக் கொண்டிருந்தனர். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! பெருமாள் கோவில் பொங்கலுக்காக ஒரு கும்பல் காத்திருந்தது. பாடுபவர்கள் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை!! பொங்கலுக்காக நிற்கும் கும்பல் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை!! மாரிமுத்து இதைக் கவனித்தவாறே, தனது […]
இலங்கையின் பொருளாதாரம் நொடிக்கும் குண்டு
இலங்கை பொருளாதாரம், ஏற்கனவே அவ்விட விலைவாசி உயர்வாலும், வெளிநாட்டு வர்த்தகப் பரிமாற்றங்களுக்கும் பணப் புழக்கம் இல்லாதிருந்த நிலையில் கொரோணாவின் பாதிப்புகளால் மேலும் நொடிக்கும் குண்டாக மாறியுள்ளது. நாட்டின் மத்திய வங்கி வருமானம் வராதிருப்பினும் 2021 ஆக்டோபர் மாதம் மாத்திரம் $640 மில்லியனுக்கு ஈடான இலங்கை ரூபாய் 130 பில்லியன் ரூபாய்க்கு நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இது அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையின் மிகச் சிறிய பகுதி மாத்திரமே. டிசம்பர் 2019 இல் இருந்து ஆகஸ்ட் 2021 வரை, […]
காற்றில் உலவும் கீதங்கள்
ரொம்பக் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு ‘காற்றில் உலவும் கீதங்கள்’ பகுதியுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. 2020 மார்ச் மாதம் இதன் சென்ற பகுதி வெளிவந்தது. கொரோனா அறிமுகமாகி எல்லோருக்கும் பீதியைக் கிளப்பி, மொத்த ஊரையும் மூடத் தொடங்கிய சமயம் அது. அதன் பிறகு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்கள், பாடல்கள் வெளியாகாமல் மூடங்கிப்போனது. ‘பாக்கு வெத்தல’ திரையரங்குகள் மூடத் தொடங்கிய அந்த இறுதி வாரத்தில் ‘தாராள பிரபு’ வெளியாகி இருந்தது. வெளிவந்த வேகத்தில் தியேட்டர்கள் […]
LED LIGHTS
நிலவைக் கண்காணிக்க சூரியன் நியமித்த சீலிப்பர் செல்கள்! இரவில் ஒமிழும் வெளிச்ச கூடுகள்! வண்ணத்துப்பூச்சிகளும் தேனிக்களும் சீருடை அணிந்து இரவு வேலைக்குத் தயாராகின்றன மதி குழம்பி!! பூக்கள் மொட்டு மலர தயக்கம் காட்டி மவுனம் காக்கின்றன!! நிலவு அவசரமாய் அறிவிக்க போகிறது இனி பகலிலும் தடை இன்றி ஒளிருவதாய்!’ மனிதர்கள் இரவைப் பகலாக்கி இன்பம் காண்பதாய் நினைத்து கொண்டு – உறவை வீணாக்கித் துன்பம் காண்கிறார்களோ இச்செயற்கை ஒளியில்? – இளங்கோ சித்தன்
வீரபத்திரர் மடை
அறுபத்தைந்து வயதுக் கட்டைப் பிரமச்சாரி அவர். அழுக்குப் படிந்த வெற்றுத் தேகம், இறுக்கக் கட்டிய சாரம் கழுத்தில் ஒரு அழுக்குப் படிந்த துவாய், ஏறிய நெற்றி, நரைத்துப் போன பரட்டைத் தலை, சற்றுக் குழி விழுந்த கன்னங்கள், விசுக்கு விசுக்கென்று கைகளை வீசியபடி நடக்கும் வேக நடை, இதுவே இவரின் இன்றைய அடையாளங்கள். மூன்றாவது தடவையாகவும் அவர் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னதும் தங்கத்தின் கண்களில் இருந்து நீர் முட்டிமோதி வெளியே வந்தது. இந்த அறுபது ஆண்டுகளில் […]
சபிக்கப்பட்டவர்களின் கனவு!
எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்படுகின்றன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த ஒரு பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் […]
சந்தியாகாலம்
🌿 அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்தபடி படுத்திருந்த அகரனைத் தொலைபேசி அடித்து விழிக்கச்செய்தது. “கொழும்பிலிருந்து ஃபோன்கோல்” என்றதும் மருண்டு கலவரப்பட்டான். அநேகமாக அதிகாலைகளில் நல்லசெய்திகள் வருவதில்லை. யாராவது பணம் தேவையென்று குடைவார்கள், அல்லது குண்டுவீச்சில் எவருடையதாவது வீடு உடைந்துபோனதாயிருக்கும், அல்லது எவருடையதும் இழப்பாகவிருக்கும். அவன் பதட்டத்துடன் ரிசீவரைப் பிடித்திருக்கவும் மறுமுனையில் இருந்த சித்தார்த்தன் ” அடேய்………. நம்ம சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம் ” என்றான். “அப்படியா சந்தோஷம் . . . . ! ” “என்னடா […]
நூறுரூபாய் தாள்
“இன்னைக்கு சண்டே. இருந்த ஆயிரம் ரூபாயும் காலியாகிடுச்சு. கையில ஒரு பைசா கூட இல்லை. திடீர்ன்னு சொந்தக்காரனுங்க எவனாவது வந்துட்டாங்கன்னா, அவ்வளவு தான் என்னோட நிலைமை. உடனே என்னோட பொண்டாட்டி போய் கறி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிப்புடுவா… காசு இல்லன்னு சொன்னேன்; என்னை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவா… அப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்குச் சாகலாம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவா. அடேய்… சொந்தக்காரனுங்களா… தயவு செய்து எவனும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்கடா… யாரும் வரதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். […]