\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3

Filed in கதை by on August 9, 2021 1 Comment
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 3

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2   குருசாமி,  ராஜீவ் மற்றும் ராஜேந்திரன் போலீஸ் ஜீப்பில், சுந்தரின் பழைய அலுவலகத்தை நோக்கி பயணித்தனர்.  ராஜீவ் குருசாமியிடம் நடந்த விஷயங்கள் ஒன்று விடாமல் விவரித்தார்.  “சார்,  மாணிக்கம் நாம போற இடத்தைச் சொன்னவுடனே குஷியாகிட்டான் சார்!”  என்று சற்று நக்கலாகச் சொன்னார் ராஜேந்திரன். “என்னையா, எப்பவும்   வீட்டுக்கு போற  நேரத்தில,  வெளியே போக சொன்னா, சின்னப் பசங்க மாதிரி  மூஞ்சிய தூக்கி வச்சுப்ப. என்ன […]

Continue Reading »

ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி

ஒற்றைக் கட்சி – ஒற்றை ஆட்சி

பண்டைய காலங்களில் கிழக்காசியப் பகுதியான சீனா, நாகரிகமடைந்த, பொருளாதாரத்தில் ‘பெருஞ்சக்தி’ பெற்ற நாடாக விளங்கியது. சியா வம்சம் தொடங்கி, வழிவழியாக வந்த சீன அரசகுல மன்னர்கள் கடற்பயனங்கள் மேற்கொண்டு, பல பகுதிகளை தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனர். திசைகாட்டி, காகிதம், அச்சுக்கலை என பலவற்றை உருவாக்கிய பெருமையும் சீனர்களுக்கே உண்டு. சீனாவுடன், அதன் அண்டை நாடான இந்தியாவின் வளங்களும் இணைந்து உலக வர்த்தகச் சந்தையின் மையமாக விளங்கியது இந்த ஆசியப்பகுதி.  மன்னராட்சி பதினெட்டாம் நூற்றாண்டு இறுதியில் அமெரிக்கா […]

Continue Reading »

மெய்நிகர் செலாவணி

மெய்நிகர் செலாவணி

உலகப் பொருளாதாரத்தை நகர்த்திச் செல்லும் ‘கரென்சி’ எனும் செலாவணி பண்டைய காலந்தொட்டு பல மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. பண்டமாற்று முறை, தோல் நாணயங்கள், உலோக நாணயம், காகித பத்திரங்கள், நோட்டுகள், காசோலைகள் என பல்வேறு வகைகளில் செலாவணி, வர்த்தகத்தை இயக்கி வந்தது. இந்த வகை செலாவணிகள் யாவும், தருபவர்-பெறுபவர் இருவராலும் தொட்டு உணரத்தக்க வடிவில், புலப்படும் உருப்படியாக இருந்து வந்தன. நவீன உலகின் அசுரத்தனமான தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் செலாவணி, ‘டிஜிட்டல்’ எனப்படும் எண்ணியல் அல்லது இலக்கமுறை வடிவமெடுத்துள்ளது.  […]

Continue Reading »

நம்பிக்கையெனும் சிறை

நம்பிக்கையெனும் சிறை

“75 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பிரபஞ்சத்தில் 76 கிரகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கிரகத்தின் அரசனாக இருந்தவன் ஜீனு எனும் கொடுங்கோலன். தன் கிரகத்தில் கோடிக்கணக்கில் தீயவர்கள் அதிகரித்து வருவதைக் கண்ட ஜீனு, அவர்களை அழிக்க முற்பட்டான். தீட்டன் என அழைக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் DC-8 போன்ற விமானங்களில் ஏற்றி பூமிக்கு அனுப்பி, பல்லாயிரம் எரிமலைகளுக்கு அடியில் அவர்களைப் புதைத்துவிட்டான். பின்னர் அந்த எரிமலைகள் மீது அணுகுண்டுகளை வீசி வெடிக்கச் செய்தான். அப்பொழுது தீட்டன்களின் உடல்கள் வெடித்து […]

Continue Reading »

காட்டுத்தீயின் வடு

காட்டுத்தீயின் வடு

சமீபத்தில் மினசோட்டாவின் வடக்கே உள்ள வனப்பகுதிக்குள் சென்று திரும்பி கொண்டிருந்தபோது, மழை நன்றாகப் பிடித்துக்கொள்ள, மழைக்கு ஒதுங்க இடம் தேடி, ஹிங்க்லே (Hinckley) என்ற ஊரில் உள்ள ஃபயர் மியூசியத்திற்குள் நுழைந்தோம். ஃபயர் மியூசியம் என்றவுடன் முதலில் ஏதோ தீயணைப்பு நிலையம் பற்றிய மியூசியம் என்று தான் நினைத்தேன். பிறகு அங்குச் சென்றபின்பு தான் தெரிந்தது, 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரைச் சூறையாடி சென்ற காட்டுத்தீயின் நினைவுகளைப் பதிவு செய்து வைத்திருக்கும் காலப் பெட்டகம் என்று. […]

Continue Reading »

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2

Filed in கதை, வார வெளியீடு by on July 12, 2021 3 Comments
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 2

ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1 இரண்டு வாரங்கள் ஓடியது.   ராஜீவ் மற்றுமொரு ஹை ஃப்ரொபைல் வழக்கைப் பார்த்து கொண்டிருந்தாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், சுந்தர் வழக்கில் தனது விசாரணையைத் தொடர்ந்தார்.   குருசாமி விசாரித்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தார். சுந்தரின் அலுவலகத்துக்குச் சென்று அவனது நண்பர்கள், அவனது மூத்த அதிகாரிகள்  என்று ஒருவரைக் கூட விடாமல் விசாரித்தார்.  ராஜேந்திரன் அந்த ஏரியாவில் உள்ள ரவுடி, மற்றும் சில சந்தேகப் பேர்வழிகளிடமும் விசாரணை […]

Continue Reading »

அதிகாலையில் பூமியில் ஒரு சொர்க்கம்….

அதிகாலையில் பூமியில் ஒரு சொர்க்கம்….

  அதிகாலையில்  நடைப்பயிற்சிக்காக சென்ற போது ஏற்பட்ட ஒரு ஆனந்தமான அனுபவம். நடக்க ஆரம்பித்ததும், காற்று இதமாய்த் தழுவி உற்சாகப்படுத்தியது. அவ்வளவாக மனித நடமாட்டமோ, வண்டிகளின் சத்தமோ இல்லாததால், சின்னஞ்சிறிய உயிர்களின் ஓசைகளைக் கூட கேட்க முடிந்தது. விதவிதமான பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் ஆச்சரியப்படுத்தியது. உற்றுக் கவனித்ததில் அவைகளுக்குள் ஏதோ தகவல் பரிமாற்றம் நடப்பது போல் தோன்றியது. தலையிலும், வாலிலும் மட்டும் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு கருங்குருவியின் கூவலுக்கு, சில விநாடிகள் கழித்து, அதே போன்று […]

Continue Reading »

கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை

Filed in கதை, வார வெளியீடு by on July 12, 2021 0 Comments
கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை

‘கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை’, இது என்னப்பா பேர் புதுசா இருக்கேன்னு தோணுதுல்ல? எனக்கும் அந்த டவுட் வந்தது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நகரில் ஜவுளிக்கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. சிறிய கடைகள் முதல் பிரமாண்டமான பல அடுக்கு மாளிகைகளை உள்ளடக்கிய ஜவுளிக்கடைகள் இந்த நகரில் நிரம்பி வழியும். அதிலும் சென்னை தியாகராயநகரில் அமைந்திருக்கும் ரங்கநாதன் தெரு இதற்கு மிகப் பிரசித்தம். ரங்கநாதன் தெருவுக்குப் போட்டிப் போடுவது என்று சொன்னால் புரசைவாக்கம் தான். வேறு எங்கிலும் மக்கள் கூட்டத்தை […]

Continue Reading »

2021 உழவர் சந்தை

2021 உழவர் சந்தை

மீண்டும் கோடைக்கால உழவர் சந்தை மினசோட்டாவில் தொடங்கிவிட்டது. உள்ளூரில் விளைந்த காய்கறிகள், பழங்கள், செடிகள் வாங்க பல நகரங்களிலும் இச்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. இதோ உங்கள் அருகாமையில் உள்ள உள்ளூர் விவசாயச் சந்தைகள் கூடுமிடம், நாள், நேரம் குறித்த பட்டியல். நகரம் நாள் நேரம் இடம் Bloomington சனி 8-1 Bloomington Civic Center Burnsville வியாழன் 11:30-4:30 Mary, Mother of the Church/3333 Cliff Rd Chanhassen சனி 9-1 City Center Park Hopkins […]

Continue Reading »

கதை சொல்லும் ஓவியங்கள்

கதை சொல்லும் ஓவியங்கள்

  © Copyright 2021 https://wooarts.com/elayaraja-swaminathan/  இளையராஜா சுவாமிநாதன், இந்தியாவில் யதார்த்த பாணி உருவப் பட ஓவியங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். ஓவியங்களின் உணர்வுகளை ஓளிகீற்றுகளால் வெளிக் கொணர்ந்து உயிரூட்டியவர்; தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இவரது ஓவியங்களைப் பார்ப்பவர்கள் இது புகைப்படமா, ஓவியமா எனக் குழம்பும் வண்ணம் மிகத் தத்ரூபமான படைப்புகளை வழங்கியவர் – உலகரங்கில் பாராட்டுகளைப் பெற்று தனக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட இந்தக் கலைஞன் தனது 43 […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad