இலக்கியம்
இதயத்தில் முள் தோட்டம்
தென்னை மரங்களைத் தழுவியபடி கடலிலுருந்து சுகமான காற்று வீசியது. காலைப் பதினோரு மணி. இது அரையாண்டு பள்ளி விடுமுறை நேரம். முட்டுக்காடு ‘பேக்வாட்டர்ஸில்’ சுற்றுலாப் படகுகளுக்கு நடுவே கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது என்று கூடச் சொல்லலாம். குற்றப்பிரிவு சி.ஐ.டி. பிரிவைச் சேர்ந்த போலீஸ் ஜீப் சுழலும் விளக்குகளைப் போட்டபடி வேகமாக முட்டுக்காடு பாலத்தைத் தாண்டிச் சென்றது. மக்கள் அதை ஒரு பொருட்டாக மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் போலீஸ் ஜீப்பை விட வேகமாகப் பயணிக்கவே முயற்சித்தனர். துணை போலீஸ் […]
அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை
அமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரம் உள் நாட்டு சனநாயக மறுமலர்ச்சியைப் பொறுத்தே அமையும் என்று சொல்லியிருக்கிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபர் ஜோ பைடன்.. சென்ற சனவரி 6ம் திகதி வாஷிங்டன் டிசி யில் நடைபெற்ற விடயம் அமெரிக்கப் பொதுமக்களும், உலகும் இதுவரை காணாத, அதீத கற்பனையில் உருவாக்கப்பட்ட சினிமாப் படம் போன்று, அறநெறிக்கு மாறான, குரோதம் மிகுந்த வெறியாட்டம் போன்று காணப்பட்டது. அமெரிக்க சனநாயத்தின் தேவாலயம் போன்றது ‘கேப்பிட்டல்’ எனப்படும் அமெரிக்க மத்திய […]
சாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1
எல்லோரா குடைவரைக் குகைகள் சிறு வயதில் வரலாற்றுப் பாடத்தில் குடைவரைக் கோயில்கள் பற்றிப் படித்ததுண்டு. அவற்றில் முக்கியமானவைகளாக, உலகப் பிரசித்தி பெற்ற அஜந்தா மற்றும் எல்லோராக் குகைகளைப் படித்ததுண்டு. அவற்றை நேரில் பார்த்து மகிழும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த அனுபவம் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக! மஹாராஷ்ட்டிர மாநிலத்தில், ஔரங்காபாத் நகரம் ஓரளவுக்குப் பிரபலமானது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம், இந்தியாவில் அதிவேகமாக வளரும் இரண்டாம் / மூன்றாம் ரக நகரங்களில் ஒன்றாகும். 1610 ஆம் […]
ஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம்
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெறும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாகப்’ பிரகடனப்படுத்தி தமிழ் மொழியின் தொன்மை, செழுமை, கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது மினசோட்டா மாநில அரசாங்கம். இதைப் பிரகடனப்படுத்தி, அறிவித்த ஆளுநர் திரு. டிம் வால்ட்ஸ் அவர்களுக்கு தமிழ்ச் சமூகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது பனிப்பூக்கள். ஆளுநரது அறிவிப்பின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. உலகில் 2600 ஆண்டுகளை விஞ்சியிருக்கும் வரலாற்றைக் கொண்டிருக்கும் தொன்மையான செம்மொழியாகத் […]
வர்ணத்தில் கிறிஸ்துமஸ்
இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் […]
எரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும்
மினியாபொலிஸ் நகரிலிருந்து இரண்டு மணித்தியாலம் வடக்கு நோக்கிப் பயணம் செய்தால் வரும் ஒரு சிறிய ஊர் பலிசேட் (pallisade). இதன் அருகில் உக்கிரமாக ஓடுகிறது இளம் மிஸிஸிப்பி ஆறு. இந்த ஊரில் தான் என்ப்ரிட்ஜ் லைன்3 (‘Enbridge line 3 pipeline’) எரிகுழாய் திட்டத்துக்கு எதிராகப் பூர்வீக வாசிகளும், சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எதிர்ப்பாளர்களும் போராடுகிறார்கள். இந்த பலிசேட் ஊரில் ‘சாபொண்டவான்’ (Zhaabondawan எனும் பூர்வீக வாசிகளின் புனிதச்சாவடி மிஸிஸிப்பி ஆற்றோரமாக அமைந்திருக்கிறது. முதியோர்கள் அடக்கம் செய்யப்பட்ட […]
தார் மணலில் இருந்து எரிபொருள்
தார் மணலில் இருந்து எரிபொருள் நாம் வாகனங்களில் உபயோகிக்கும் பெற்றோலியம், கனேடிய தார் மணலில் இருந்து எவ்வாறு வருகிறது என்று பார்க்கலாம். தார் மணலில் இருந்து எரிபொருள் பிரிப்பது நிலத்தடி எண்ணெய் எடுப்பதை விட அதிக செலவுள்ளது. சுற்றுச்சூழலிற்கும் அதிக மாசு படுத்தும் செயலாகும் இது. தார் மணல் அகழ்வு இரு வகையில் நடைபெறலாம். மேற்தரை மணல் அகழ்வு. இது பாரிய பிரதேசத்தைப் பெரும் குழிகாளாக விட்டுச் செல்லும். இரண்டாவது முறை ஆழ் கிணறுகள் துளைத்து […]
உடல் மாறிய உறவுகள்
நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த பைலட்டின் குரல் தட்டியெழுப்பியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி. “மாமா, இன்னும் ஒரு மணி நேரத்துல லேண்ட் ஆகும் போல இருக்கு. நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க” “ஐ அம் ஃபைன், நீ போகணுமா?” “இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” […]
இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல்
பல கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாகப் பெரும் தென்னிந்தியத் தமிழ் நடிகர் ரஜனிகாந்த் அரசியலில் இறுதியாக உள்ளிடவிருக்கிறார். இவர் சனவரி மாதம் புதியதொரு கட்சியை ஆரம்பிக்கவுள்ளார், என்று டிசம்பர் 2020 ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இந்தியத் தென்மாநிலமான தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்காக இன்னும் சில மாதங்களில் வாக்களிக்கவிருக்கும் நிலையில், இப்போது நடக்காவிட்டால் எப்போதும் நடக்காது என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு தற்பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியால் ஆளப்பட்டு வருகிறது. இந்தக் […]