இலக்கியம்
கூகுளுக்கு எதிரான நம்பிக்கையின்மை சட்டத்தாக்குதல்
அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை கூகுள் தாபனமானது பாரிய பல நம்பிக்கையற்ற குயுக்திகளை உபயோகித்து மின்வலய தேடுதல்,விளம்பரம் போன்றவற்றில் மற்றைய போட்டி வர்த்தகங்களை மடக்கி கட்டுப்படுத்தி அதே சமயம் நுகர்வோருக்கும் பாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டி, இது தொடர்பான சட்ட நடவடிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் உதவி அட்டர்னி ஜெனரல் திரு. ஜெஃப் ரோசன் கூறுகையில், கூகிள் ஈ-காமர்ஸின் மிகப்பெரிய நுகர்வோர் தேடல் அடிப்படையிலான விளம்பரம் மற்றும் ஈ-காமர்ஸின் நுழைவாயிலாக மாறி வருகிறது. இந்தக் […]
ஆங்கிள் மினசோட்டா மக்கள் நாட்டிலிருந்து துண்டிப்பு
மினசோட்டா மாநிலத்தின் வடக்கு உச்சியில் ‘நார்த்வெஸ்ட் ஆங்கி’ (Northwest Angle) எனப்படும் சிற்றூர் உள்ளது. அமெரிக்காவின் எல்லைக்குட்பட்டதாக இருந்தாலும் கனேடிய எல்லைக்குள் புகுந்து மட்டுமே இந்த அமெரிக்கப் பிரதேசத்திற்குள் போக முடியும். ஆங்கிள் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஊரில் 120 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்காவின் மிகத் தொலைவான பகுதிகளில் ஒன்றாகும். கொரொனா தொற்று நோயின் பரவல் காரணமாக கனேடிய, அமெரிக்க எல்லைகள் பூட்டப்பட்டு இந்த ஊர் தற்போது தனித்து விடப்பட்டு, சுயமாக இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. […]
கேத்தியோ ஸ்டேட் பார்க் (Kathio State Park)
மினசோட்டாவில் பத்தாயிரம் ஏரிகள் இருப்பது தெரியும். ஆனால், அதில் ஒரு ஏரி ஆயிரம் ஏரிகளுக்குச் சமமாக இருப்பது தெரியுமா? மில் லாக்ஸ் (Mille Lacs) ஏரிதான் அது. ஆயிரம் ஏரிகள் என்பதைத் தான் மில் லாக்ஸ் என்கிறார்கள். ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, மினியாபொலிஸ் – செயிண்ட் பால் நகர்பகுதியில் இருந்து சுமார் 100மைல் தொலைவில் உள்ளது. மினசோட்டாவில் நிலப்பரப்பிற்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும் இது. கரையில் […]
ஒத்தையடி பாதையிலே : ஃப்ராண்டனக் ஸ்டேட் பார்க்
மினசோட்டாவில் ஏராளமான ஏரிகள் இருப்பது போல் ‘ஸ்டேட் பார்க்’ எனப்படும் மாநிலப் பூங்காக்கள் பல இங்கு உள்ளன. இவை மாநில அரசால் பராமரிக்கப்படும் இயற்கை வளம் ததும்பும் இடங்களாகும். ஒரு இடத்தின் இயற்கை அழகை, வரலாற்றுத்தன்மையைப் பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இவ்விடங்கள் மாநில அரசால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. மினசோட்டாவில் இவ்வகைப் பூங்காக்கள் மொத்தமாக 66 இருக்கின்றன. நாம் இப்போது காணப்போகும் இந்த ஃப்ராண்டனக் பூங்கா (Frontenac State Park) 1957ஆம் ஆண்டு முதல் மினசோட்டா அரசால் […]
மேப்பிள் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?
வட அமெரிக்கா முழுதும் குளிர் பிரதேசங்களில் வளரும் மரங்களிலொன்று மேப்பிள் மரம். குறிப்பாக மினசோட்டாவில் பல வகையான மேப்பிள் மரங்கள் இருப்பினும் இளவேனில் காலத்தில் இனிய பாகு தரும் சர்க்கரை மேப்பிள் (Sugar Maple) எமக்குப் பிடித்த மரம். இதன் கிளைகள் பொதுவாக இளம் மண்ணிறத்தில் தொடங்கி, வளர்ந்த பின்னர் கடும் மண்ணிறமாக மாறும். மேப்பிள் மர இலைகள், தனித்துவமான 5 சற்றுக் கூரான பிரிவுறும் சோணைகளைக் விசிறி போல் கொண்டவை. இது கனேடிய நாட்டின் தேசிய […]
நேர்ஸ்ராண்ட பெருமரக்காடு
எமது மாநிலத்தில் வாழும் அனைவரும் அனுபவித்து மகிழக்கூடிய பெரும் விடயம் இந்நிலத்தின் எழில்மிகு இயற்கை வளமே. பன்னிரண்டு மாதங்களும், பருவகாலங்கள் நான்கு பவனி வந்து இவ்வியற்கை எழிலுக்கு வர்ணம் பூசி மெருகூட்டுகின்றன. இதில் இலையுதிர் காலம் நம்மில் பலர் பார்த்து பழகிப் போன பச்சை பசேல் ஒவியம் போல் அல்லாமல் கோலாகலமாக, பல வண்ணக் கோலமாக நிறம் மாறுகிறது மினசோட்டா மாநிலம். இதில் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு பண்டைய காட்டு நிலம். நேர்ஸ்ராண்ட பெருங்காட்டு […]
ஓக் மரத்தை அடையாளம் காண்பது எப்படி?
வட அமெரிக்காவின், பெரிய மரங்களில் ஒன்று ஓக் மரம். இது வருடம் முழுதும் தனியாக அடையாளம் காணக்கூடியது. ஓக் மரம், கிளைகள் பருத்தும், பரந்தும் வளரும் தன்மை மிக்கது. அதாவது தக்க காலநிலை சூழலில் ஓங்கி உயரமாகவும், அதே சமயம் உச்சியில் பல பருத்த கிளைகளையும் கொண்டு காணப்படும். இதன் கிளைகள் பொதுவாக நேரே வளராமல் பல அரும்புகளையும் உருவாக்கியவாறுள்ளது. இரண்டு கிளைகள் ஒரு போதும் பக்கத்துப் பக்கம் இரணை அரும்புகளிலிருந்து வளராது. மேலும் ஓக் மரப்பட்டை […]
வாபி-சாபி அழகியல் மூலம் சூழலை உணருதல்
நவீன உலகின் பொருள், பண்டங்கள் யாதும் பூரணத் திருத்தம் அடைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பேராவல் காணப்படும் தருணத்தில் பாலைவனச் சோலை போன்று வரும் சிந்தனையே யப்பானிய வாபி-சாபி (侘寂) . இது இயல்பாக காணப்பெறும் குறியீடுகளை அவதானித்து அவற்றிலும் உட்பொருள் அறிந்து, அனுசரித்து அவற்றின் தனித்துவமான அழகினை அனுபவித்தல் எனலாம். வாசகர்க்கு ஒரு சிறிய வேண்டுகோள். சமூகத்தில் சிலர், குறிப்பாக யப்பான் நாடு போய் வந்த மேல் நாட்டவர் தவறாக வாபி-சாபி என்றால் அழகற்றதில் […]
கோவிட் சம்மர்
ஒவ்வொரு வருடமும் சம்மர் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த வருடம் ‘ஒரு மாதிரி’யாகப் போய்விட்டது. அமெரிக்காவில் சம்மர் வருவதற்கு முன்பு, கோவிட்-19 வந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கோவிட்-19 என்றால் அது எங்கோ சீனா பக்கம், கொரியா பக்கம் நடக்கும் விஷயம் என்பது போல் அமெரிக்காவில் இருந்தார்கள். பின்பு நோய்த்தொற்றின் வீரியம் புரிந்து மெதுவாக மார்ச்சில் லாக்டவுன் என்பது போல் ஒன்றை அறிவிக்கும் போது, அமெரிக்கா கொரோனா புள்ளியியல் வரைபடத்தில் வீறுநடை போட்டு முன்னணிக்குச் சென்றுவிட்டிருந்தது. பள்ளிகளுக்கு வசந்தகால […]