இலக்கியம்
நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் (RBG)
இந்தியாவில் பாலின வேறுபாடுகள் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலத்தில் பெண் ஆணுக்குச் சமம், சமூகத்தில் பெண்கள் ஆணுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்ற புரட்சியை எழுப்பி, அஞ்சா நெஞ்சத்துடன் அதற்குத் தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றும் பெண்ணுரிமைக்கான அடையாளமாகத் திகழ்பவர்களில் முக்கிய இடம் பெறுபவர் மருத்துவர் முத்துலட்சுமி. உலகெங்கும் ஆண், பெண் இன பேதங்கள் அகற்றப்பட வேண்டுமென்ற குரல்கள் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும் கூட ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒலித்து வந்த வலுவான குரலொன்று […]
தீபச்செல்வனின் ‘நடுகல்’ பின் குறிப்புக்கள்
இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து […]
விவசாயி
ஏர்பூட்டி வயலுழுதான் ஏழைமகன் விவசாயி முத்துமணி வியர்வை முத்தாய் நிலத்தில் சிந்த அல்லும் பகலும் அயராது பாடுபட்டு நிலத்தை பண்படுத்தி விதைத்தான் நெல்லதனை விதைத்த நெல் மழையில் மூழ்க –அவன் விழியில் கண்ணீர் கடலாய் பெருகியது கண்ணீர்க் கடலைத் துடைக்க கடவுள் கருணை கொண்டார் நின்றது மழை! வழிந்தோடியது வெள்ளம்! செந்நெல் செழித்தது – காற்றில் கதிர் ஓசை ஒலித்தது விவசாயி நெஞ்சில் ஆனந்த மழை பொழிந்தது கால நேரம் பார்த்து கதிரை அறுவடை செய்து காற்றில் […]
கவிதை காணவில்லை
கவிதையைக் காணவில்லை! தேடி கொடுப்பீர்களா? பாதித்த சொற்களைக் காப்பாற்றி எழுதி வைத்திருந்தேன் நெஞ்சாங்கூட்டில் மீண்டும் மீண்டும் தியானித்தேன் தனிமையில் உலாவினேன். கால்வாறும் மக்கள் சந்தையில் சிக்கல் பொருட்களின் பரிமாற்றத்தில் கவிதையைக் காணவில்லை தேடி கொடுப்பீர்களா? அங்கெங்கோ கேட்டது போலிருந்தது என் சொந்த கவிதை வரிகள் யாரோ எழுதிய பாட்டின் இரு புறத்திலும் அய்யகோ! சினம் கொண்டதோ கவிதை இல்லை திருடிவிட்டாரோ யாராவது அடடா புரிந்தது இப்போது சிறையிலிட்டிருந்தேன் நானே ஆணவத்தின் சிறைச்சாலையில் அதற்காகத்தான் எட்டிப் பார்க்கின்றன […]
பாலு ஒரு நிலா
“ஏன்னா…. என்ன பண்ணிண்ட்ருக்கேள்? டி.வி.மாட்டுக்கு ஓடிண்டு இருக்கு” புடவையின் முந்தானையால் நெற்றியில் மெலிதாய்த் தோன்றியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே, கணவனைக் கேட்டுக் கொண்டு, அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. “ஏண்டி… ஏன்… என்ன கேக்குற?“… ஒன்றும் புரியாதவனாய்த் தலையை உயர்த்தி, சற்றே சாய்த்து, ரீடிங்க் க்ளாஸ் மேல் கண்களை ஓட்டி, மனைவியைப் பார்த்தபடி கேட்டான் கணேஷ் ..டி.வி.யில் அன்றைய தினத் தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்க, அவனோ சோஃபாவில் அமர்ந்து லேப் டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தான். தலையை […]
காமன் டிபி கலாச்சாரம்
கடந்த சில ஆண்டுகளாகக் காமன்டிபி (Common DP) கலாச்சாரம் என்று ஒன்று தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இருக்கும் பயனர் புகைப்படத்தை (Display Picture) சுருக்கமாக டிபி (DP) என்கிறார்கள். ஏதேனும் ஒரே நிகழ்வை ஒட்டி, பெரும்பாலோர் அந்த நிகழ்வு சம்பந்தமான ஒரு புகைப்படத்தைத் தங்களது பயனர் படமாக வைத்துக்கொள்ளும்போது, அது நல்லதொரு கவனத்தைப் பெறும் என்பதால், அதற்கான புகைப்படத்தை நன்றாக வடிவமைத்து அனைவரிடமும் பகிர்ந்து, […]
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சேலத்திலிருந்து வந்த தனியார் பேருந்து பழனி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கிய பிறகு, இராஜமாணிக்கமும் கதிர்வேலனும் இறங்கினர். இருவர் தோள்களிலும் முதுகு பை மற்றும் கைகளில் ஒரு பயணப்பை. இருவருக்கும் ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். “என்னடா கதிர், நம்ப சேலம் பஸ் ஸ்டாண்ட் பரவாயில்ல போல! ஓரே குப்பையா இருக்கு பழனி பஸ் ஸ்டாண்டு!” “இறங்கி இன்னும் இரண்டு அடிக்கூட எடுத்து வைக்கல! அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சுட்டாயா? ஒரு நாளைக்கு பல ஆயிரம் […]
சூடு
புகழினி கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். அடுத்து அவளுக்கு ஒரு நல்ல வரனைத் தேடி கல்யாணத்தை முடித்து, தனது கடமையை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாய் இறங்கி இருந்தார் அவளது தந்தை சாமிநாதன். தினமும் தரகர்கள் தன் பையில் சில ஜாதகக் கட்டுகளைச் சுமந்து கொண்டு அவள் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்தனர். மறுபக்கம் மகளுக்கு வாழ்க்கை துணையாக நல்ல குணம் படைத்த ஒருவன் அமைந்து விட வேண்டுமென்ற ஆதங்கத்தில் அவள் […]
எரிந்த பனைகள்
‘அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது? வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு ‘இல்ல… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென […]