இலக்கியம்
இங்கேயும் … இப்போதும் ….
“டேய்… உங்க பாண்டிச்சேரியில தெருவுக்கு நாலு ஆஸ்பிட்டல் கூட இருக்கலாம். ஆனா… அங்க எத்தன ஆஸ்பிட்டல் இருந்தாலும், பெரியப் பெரிய சர்ஜெரிக்கெல்லாம் அங்க இருந்து பெரும்பாலானவங்க சென்னைக்குத்தாண்டா வராங்க. மாஸ்டர் செக்-அப் செஞ்சிக்கப்போறேன்னு சொல்ற…. பேசாம கெளம்பி இங்க வாடா. ஒரே நாள் தான். எட்டு ரூவால இருந்து பத்து ரூவாக்குள்ள முடிஞ்சிடும். ” குமரேசன், சந்தானத்திடம் வம்படித்தான். “குமரேசா… நீ சொல்றதெல்லாம் சரிதான். இங்கியே கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, சென்னைல போய் செய்துக்கிட்டா… […]
நிழல் படங்களும்…. நிஜ ஜடங்களும்….!
இந்தச் சிறுகதையானது, தமிழர் வாழ்வியலில், வசதி – வாய்ப்புக்களின் அடிப்படையால், தோன்றும் போலித்தனமான ஏற்றத்தாழ்வு மனப்பான்மையானது, ஆங்கே கீழ்மட்ட நிலை சார்ந்தோரை, உண்மையிலேயே எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும்….. ஆங்காங்கே, பரவலாகப் பட்டுக்கொண்ட – கேள்விப்பட்ட – சொரியலான அனுபவங்கள், ஆகியன உள்ளத்தில் தோற்றுவித்த வலிகளின் உந்துதலாலும், பிறந்த கற்பனையாகும். “பாரும்மா…. இன்னைக்கு நாங்க உமேசுவீட்டுக்கு வெளையாடப் போனோமா, அப்போ என்னையும் தம்பிப் பயலையும் பாத்து பசங்க எல்லாரும் , “கிழிஞ்ச சட்டை…. கிழிஞ்ச சட்டை”ன்னு சொன்னாங்கம்மா….” ஏழுவயசுக் […]
அப்பா…
டெஸ்பாட்ச் சுந்தரம் தான் அப்பா ரிசப்ஷனில் வந்து காத்திருக்கிற விஷயம் சொன்னான். அப்பா எப்போதாவது இப்படி ரிசப்ஷனில் வந்து உட்காருபவர் தான். பெரும்பாலும் அம்மாவோடு சண்டை போட்ட நாட்களாக அவை இருக்கும். சண்டை என்றால், அம்மா பாட்டுக்கு பேசிக்கொண்டே போவாள். அப்பா மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். பொறுக்க முடியாது போகிற சில நாட்களில் மட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு இப்படி ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து கொள்வார். அதைப் போன்ற சமயங்களில் அப்பாவைப் பார்ப்பதற்கு ரொம்பப் பாவமாக இருக்கும். அவன் […]
சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு
நூற்றாண்டைக் கடந்து உலகளாவிய நிலையில் சரித்திரம் படைத்த நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்றாகும். இந்நூலகமானது பல்துறை சார்ந்த ஓலைச்சுவடிகளின் கருவூலமாகத் திகழ்கிறது. எண்ணற்ற மருத்துவச் சுவடிகளைக் கொண்டுள்ளது. அவை நம் பழந்தமிழரின் இயற்கை மருத்துவ அறிவையும் நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற தமிழ் மருத்துவ முறைகள் எனும் நூலினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. நூல் உருவாக்கம் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, […]
என்னால் சுவாசிக்க முடியவில்லை
“அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ” அமெரிக்க நாட்டுப் போர் வீரர் நினைவு நாளான மே மாதம் 25 ஆம் நாள், மினியாபொலிஸ் நகரின், நிழற் சாலையில் ஒலித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் ஓலக் குரல் பலரது மனங்களில் ஆழப் பதிந்து அமெரிக்கா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. செய்தித் தாள், சமூக ஊடகங்கள் முழுதும் இந்த மனிதரின் முகம் வியாபித்து உலக மக்கள் பலருக்கும் இந்த மனிதரின் முகம் பரிச்சயமாகிப் போனது. இந்தளவுக்குப் பிரபலமடைய ஜார்ஜ் […]
கம்பனடிப்பொடி
கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க………. கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க…… கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க……… தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என […]
தண்டனை
இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!! நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்! சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !! யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க! கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ? அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!! எடுக்கட்டும் கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!! கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]
நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை
உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]
இலட்சியப்பெண்
மனிதஇனம்பிறந்தது அதில்பெண்ணினமும்கலந்தது! தாயின்கருவில்இருந்தபோது அடைந்திராததுன்பமுண்டோ? அதையும்வென்றுஜனித்துவிட்டாள் பூமிதனில்இலட்சியப்பெண்!! வறுமைஎன்னும்காரிருள் தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து வீறுநடைகொண்டாள்தன்இலக்கில்!! எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண்!! காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது! உறவுஎன்னும்ஓடம்கரைசேர துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை!! – சிவராசாஓசாநிதி
ஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்
1962 டிசம்பர்2ம் தியதி. புது டில்லி ரயில்வே ஸ்டேஷன். ஃப்ளாட்ஃபாம் நம்பர்1. மதியம் பகல்11 மணி. புது டில்லியிலிருந்து இடார்சி நாகபூர், காஜீபேட் விஜயவாடா வழியாக மதராஸ் செல்லும் “கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்” இன்னும் சில நிமிடங்களில் புறப்பட இருக்கிறது என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறைகுறை தமிழிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. சுந்தர் ராமன் தன்னுடய மனைவி ராதையுடன் போர்ட்டரை விரட்டிக்கொண்டு அவசர அவசரமாக4 வது பெட்டியில் ஏறினார்கள். ஒரு சீட் கூட காலியில்லை. போர்ட்டர் உள்ளே சென்று […]