இலக்கியம்
நினைப்பதெல்லாம் நடப்பதில்லை…
வெள்ளைத் தொப்பியணிந்து வியர்வையால் ஆடையெல்லாம் நிறம்மாறி அதிகரித்த வெயிலில் துவிச்சக்கரவண்டியை தனது சக்திக்கும்மீறி செலுத்தினான் ராசன். ”என்ன இது சைக்கிள் இண்டைக்கு ஓடுதில்ல பதினொரு மணிக்குள்ள மில்வோட்டுக்குப் போகலெண்ணா பாலும் திரண்டுறும்” என நினைத்துக்கொண்டு சைக்கிளின் வேகத்தை அதிகரித்தான். ஒவ்வொரு நாளும் பத்து மணிக்கெல்லாம் பெருமாவெளிக்கு வந்து குமரகுருவின் தேநீர்க் கடையில் தேநீரும் வடையும் உண்ணுவது ராசனின் வழக்கமான செயலாகும். ஆனால் அன்றைய தினம் உடலின் களைப்பு உற்சாகத்தைக் குறைக்க நேரத்திற்கு அவ்விடம் செல்ல முடியவில்லை. பதினொரு […]
இப்போது வேண்டுவதெல்லாம்
பனி விலகி வசந்த காலம் வந்தது தொட்டுவிடும் தூரத்தில் கோடை எட்டிப் பார்க்கிறது! காட்டாற்றின் கரையதனில் கதையளந்த காலம் போய் கையறு நிலையில்மனிதர்கள் நாம் சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும் மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய் கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில் பல்லாயிரம் உயிர் தின்றும் அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய் இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது இந்தக் கொடூர கொரோனா!! உலக மீட்பர்கள் தாங்கள் என்று தமக்குத் தாமே […]
ஜெயகாந்தன் நினைவு உரையாடல் – திரு. மதுசூதனன்
திரு. மதுசூதனன் உடனான எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய நினைவு உரையாடல். உரையாடியவர் – திரு. சரவணகுமரன்.
அடி முதல்
“என்னடா எல்லாத்தையும் வித்துட்டயா?” கேள்வி இவனிடம் கேட்கப்பட்டாலும் பார்வை அவன் மனைவி பார்வதி மேல்தான் இருந்தது. உங்களை மாதிரி ஆளுங்க இருந்தா எங்களை மாதிரி ஏழைகள் பிழைக்க முடியுமா? இதை மனதுக்குள் நினைத்தாலும், “இல்லைங்க ஏட்டய்யா?இன்னும் நிறைய மீந்து கிடக்குது.,” மெல்ல சொன்னான் பரமன். “மணி இப்பவே ஒன்பதாயிருக்குமேடா?” இப்பொழுதும் பார்வை பார்வதியை மேய்வதில்தான் இருந்தது ஏட்டையாவுக்கு. தூத்தேறி என்று வசவை விசிறிய பார்வதி சட்டென திரும்பி எச்சிலை துப்புவது போல திரும்பித் துப்பினாள். போலீஸ்காரன் சட்டென […]
வளரும் வணிகங்கள்
உலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் […]
சாபம் பொய்யாகட்டும் ….
மகா அசுரன் கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும் இனிய பல சம்பவங்கள் நிஜமாய் நிகழும்போது,,,, கல்மனம் கொண்ட மனிதனே உதவும் உள்ளங்களாக உலவும் போது,,,, கடவுளே கதவைச் சாத்திக்கொண்டபோதும், எமனே அஞ்சி ஒதுங்கிட, மருத்துவர்களோ…. கொரோனாவையும் நோயாளியையும் சவாலோடு சந்திக்கும்போது…. (சில )மனிதனே உன் இதயத்தில் இன்னுமா இரக்கம் பிறக்கவில்லை??? நீ காட்டுவாசியானதேனோ? மிருகத்தனமாய் தாக்குதல் தொடுத்து மருத்துவரின் மரண உடலையே கதறவைத்தாயே… சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே அதிர்ந்து போனதே… நீ , கொரோனாவை […]
உலக புத்தக தினம் – திருமதி. பிரசன்னாவுடன் உரையாடல்
உலக புத்தக தினத்தையெட்டி திருமதி. பிரசன்னா அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்.
முற்பகல் செய்யின்….
“நாராயண….. நாராயண….” சப்ளாக் கட்டையை இடது கையில் அசைத்துக் கொண்டு, இடது தோளிலிருந்து குறுக்குவாட்டாகத் தொங்கிக் கொண்டிருந்த தம்பூராவை வலது கையால் இசைத்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார் நாரதர். நாரதர் என்றவுடன் ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். வேதங்கள் நான்கினையும், உபநிஷத்துகள் நூற்றுப் பதினெட்டையும், வியாகரணங்கள் பலவற்றையும், புராணங்களையும், இதிகாசங்களையும், இன்னும் பல நீதி நூற்களையும் கற்றறிந்த தேஜஸ்வியான நாரதர், சிவாஜியின் தேஜஸுக்குச் சற்றும் ஈடு […]
நாகரீகம்..!!!
“இந்தியாவிடம் மருந்து அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுள்ளோம். அவர்கள் தரவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம்.. There may be a retaliation, why wouldn’t there be?” – உலகத்தின் வளர்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் மேதகு டிரம்ப் அவர்கள். — ஆகா என்ன ஒரு நாகரீகம், நட்புணர்வு, தலைவனுக்கான பேச்சு பாருங்கள். ஊரில் பொறுக்கித் தனம் செய்து கொண்டு திரியும் மூன்றாந்தர குடிமகனைப் போல பேசியுள்ளார் .. இந்தப் பைத்தியக்காரப் […]