இலக்கியம்
அமெரிக்க அதிபர் தேர்தல் – 2020
‘தூங்கு மூஞ்சி ஜோ’, ‘குட்டி மைக்’, ‘கிறுக்கு பெர்னி’, ‘போக்கொஹாண்டஸ் வாரன்’, ‘பூட்டட்ஜீட்ஜ்’ – இவையெல்லாம் எதோ சிறுவர் காமிக் புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல. வல்லரசு நாடான அமெரிக்காவின், வருங்கால அதிபராக வர ஆசைப்படும், ஆசைப்பட்ட எதிர்க்கட்சியினருக்குத் தற்போதைய அதிபர் திருவாளர் ட்ரம்ப் வைத்த செல்லப் பெயர்கள். ‘பத்துப் பேர் ஒண்ணாச் சேந்து, ஒருத்தர எதுக்கறாங்கன்னா, அந்தப் பத்து பேர் பலசாலியா இல்ல அவங்க எதிர்க்குற அந்த ஒருத்தர் பலசாலியான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கறளவுக்கு’ அமெரிக்க […]
அம்மா வருவாயா? – நூல் விமர்சனம்
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து வரும் ராஜி ராமச்சந்திரன், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “அம்மா வருவாயா” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பயண அனுபவம், செய்தி கட்டுரை, வாழ்க்கை அனுபவங்கள் என வெவ்வேறு வகையான 12 கட்டுரைகள், நூறு பக்களுக்குக் குறைவான இப்புத்தகத்தில் நிறைந்திருக்கிறது. கட்டுரையின் அளவும், அமைப்பும் தலைப்பையொட்டி வேறுபடுகின்றன. அதனால் இப்புத்தகத்தை ஒரே அமர்வில் வாசித்தாகிவிட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பயணங்கள் மீதான ஆர்வம் காரணமாக, காசுமெல் தீவுக்கு […]
மினசோட்டா ஹோர்மல் SPAM கதை
நாம் வாழும் செழிப்பான மாநிலம் மினசோட்டாவானது இன்று அமெரிக்காவின் மூன்றாவது செல்வந்த மாநிலம் சென்று கருதப்படுகிறது. இதன் காரணம் எமது மாநில மக்கள் அவர்கள் மேல் ஐரோப்பிய சமநல மனப்பாடும், அவர்கள் இட்ட அத்திவாரமுமே காரணி எனலாம். இந்த அத்திவரத்தை இட்டுத் தந்த மினசோட்டா தொழிலதிபர்கள் பலரின் கதையும் சுவரஸ்யமானவையே. இந்தக் கதைகளில் ஒன்று தான் ஜே கர்த்தர்வுட் ஹோர்மல் Jay Catherwood Hormel கதை. இரண்டாம் தலைமுறை தொழிலதிபர் ஜே ஹோர்மல் அவர்கள் செம்டெம்பர் […]
நல்லெண்ணங்கள் நாற்பது
“கடுகு சிறிதானாலும் காரம் பெரிது” என்றொரு பழமொழி உண்டு. பிரபா அனந்த் அவர்களின் “நல்லெண்ணங்கள் நாற்பது” என்ற கைக்குள் அடக்கமான மிகச் சிறிய நூல் நிறைந்த கருத்துக்களுடன் ஒரு “கையேடு” போலத் திகழ்கின்றது. ஒரு நூல் நயம் அல்லது திறனாய்வு என்றால் அந்த நூல் பற்றிய சில பல விளக்கங்களுடன் ஒரு சில எடுத்துக்காட்டுகளையும் தர வேண்டும். திருக்குறள் போல , ஒரு துளிக் (ஹைக்கூ) கவிதை போல நல்லெண்ணங்கள் நாற்பதில் எதைத் தொடுவது எதை விடுவது […]
உலகம் உன் பக்கம்
அடுத்த வகுப்புக்குக் கணக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சீட்டில் உட்கார்ந்து அன்று பாடம் எடுக்கப் போகும் கணக்குகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிரேசன். அப்பொழுது உள்ளே வந்த தாளாளரின் அலுவலக உதிவியாள் தாளாளர் அவனை அழைப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். கதிரேசனுக்கு அப்படியே ஜில் என்று பயம் வந்து ஒட்டிக் கொண்டது. தாளாளர் எதற்குத் தன்னை வரச் சொல்லுகிறார்?. எப்பொழுதும் பிரின்ஸ்பால்தான் கூப்பிட்டுப் பேசுவார். இன்று அதிசயமாய் இவர் கூப்பிட்டிருக்கிறாரே, நினைக்கும்போதே பயம் வந்தது. என்ன […]
கடலலை
இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை, ”நேரமாகி விட்டது” என்று குழந்தைகளையும், தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள், வியப்பாய்ப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். ஒரு சிலர் பாவம் என்ற தோரணையில் கூடப் பார்த்துச் சென்றிருக்கலாம். மனிதக்கூட்டங்கள் தன்னை அதிசயமாய்ப் பார்த்துச் செல்வதையோ, இல்லை பாவமாய்ப் பார்த்துச் செல்வதையோ கண்டு கொள்ளும் மனோ நிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக்காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் […]
சைக்கிள்
இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய்ப் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு, போக வர வழியில்லாமல்..மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடி வந்தேன். என்ன கமலா ஏன் இப்படிக் கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னைப் பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதை வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. […]
உழவுத் தொழில்
காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும் செய்திடுவோம்! கதிரவன் கொடுத்த உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின் செயல்தானே! வஞ்சனை செய்து வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில் நாம்தானே! உழவுத்தொழிலை உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது நாடன்றோ! உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும் செயலன்றோ! பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத் தடுத்திடுவோம்! பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப் […]
புதர்க் காடு
பரந்து விரிந்த இந்த இடத்தைக் காடு என்றும் சொல்லலாம், ஆனால் காடு என்று சொன்னாலும் பெரிய பெரிய மரங்கள் எதுவும் இல்லை. புதர்களும், புற்களுமே அதிகமாகக் காணப்பட்டன. புதர்க்காடு என்று சொல்லிக்கொள்ளலாம். புதர்கள் என்றால் அப்படி ஒரு இறுக்கமான காடுகள் கொண்டது. அடர்த்தியான புதர்கள், செடிகள் இணைந்து அதன் மேல் கொடிகள் படர்ந்து பொதுவாக உள்ளே நுழைவது என்பது சிரமப்படக்கூடிய விசயம்தான். காலை ஆறு மணி இருக்கலாம். அந்த இடத்தின் மண்மேட்டில் காணப்பட்ட பொந்து ஒன்றிலிருந்து மெல்ல […]
சாகித்ய அகாடமி
கண்ணபிரான் காலை பத்து மணிக்குள் ஐந்தாறு முறை வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்துச் சென்று விட்டார், தபால் இன்னும் வரவில்லை. ஆனால் செய்தி வந்து விட்டது. இன்று தபாலில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியிருந்தார்கள். இவரின் நண்பர்கள் அதற்குள் செய்தியைக் கேள்விப்பட்டு செல்ஃபோனில் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர் தபாலில் அதைப் பார்த்து உறுதி செய்த பின்தான் மேற்கொண்டு உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லி விட்டார். இருந்தாலும், மனதின் பரபரப்பை அவரால் கூட அடக்க முடியவில்லை. அங்கிருந்த நாற்காலி […]