இலக்கியம்
வாடிக்கை மறந்ததும் ஏனோ…!
சட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற […]
சர்ப்ரைஸ் கிஃட்
“ஏன்னா.. வேலண்டைன்ஸ் டே வர்ரதே, என்ன கிஃப்ட் தரப் போறேள்”, ஞாயிற்றுக் கிழமை மாலை வேறேதும் வேலையில்லையென ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக் கொண்டிருந்த கணேஷின் அருகில் வந்தமர்ந்து கேட்டாள் லக்ஷ்மி. நாற்பதுகளில் இருப்பினும், இளமையும் காதல் உணர்வும் சற்றும் குறையாத தம்பதி. “என்னடி பெரிய வேலண்டைன்ஸ் டே, அது கிதுன்னு…” அவள் அளவு அதிகமாக வெளிப்படுத்தாத அவனின் பதில். “நேக்குத் தெரியாதா, இப்படித்தான் சொல்வேள், ஆனா எதாவது சர்ப்ரைஸ் வெச்சிருப்பேளே” என்றவளை உடனடியாக நிறுத்தி, […]
ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி – நூல் நயம்
கவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றி சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்க வைக்கும் வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டி, சத்தமே இல்லாமல் எம்மிடம் ஒருவகையான சலனத்தை அல்லது கிளர்ச்சியை உண்டாக்கி விடுகிறது. 2009 இல் எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வின் ஒரு பகுதியாக புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை ஆய்வு செய்திருந்தேன். பெரும்பாலும் தாய்நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த நிலத்தை விட்டுப் புலத்துக்குப் பெயர்பவர்கள் தங்கள் நிலம் சார்ந்து எழுதுவதைக் காட்டிலும் புலத்தில் சந்திக்கும் அல்லது […]
மினியாபொலிஸில் ஒரு காதல் கதை
‘கூதலான மார்கழி.., நீளமான ராத்திரி..நீ வந்து ஆதரி.!!! இது மௌனமான நேரம், இள மனதில் என்ன பாரம்..’ என்ற ஜானகியின் கொஞ்சலை ரிமோட் கொண்டு நிறுத்திய பிரியா, படுக்கை அறைக்குள் நுழைந்துகொண்டே கேட்டாள். “கார்த்திக், ஹீட்டர்ல 72 வைக்கவா..? ரொம்பக் குளுருது டா.” “நோ .. 68 இருக்கட்டும். உன் குளிருக்கு நான் ஒரு வைத்தியம் சொல்றேன். இங்க வா”, என மெத்தையில் படுத்துக்கொண்டு அழைத்தான் கார்த்திக். “வேணாம்பா.. வேணாம்.. நான் போர்வையே போத்திக்குறேன்.” “ஹீட்டரையும், […]
கொடூர கொரோனா
யுஹான் ஊர்காரர்களுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த பெருமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த ஊர், சீனாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றும் ஊர். சீனாவின் சிகாகோ என்று அழைக்கப்படும் ஊர் இது. உலகின் மிகப் பெரிய மின் நிலையம் கொண்ட ஊர். சீனாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் கொண்ட ஊர். அதனால் இவ்வூர்க்காரர்களுக்குச் சீனாவில் நல்ல மரியாதை உண்டு. இது எல்லாம் கடந்த டிசம்பர் மாதம் வரை தான். 2020 […]
பெயல் நீர் சாரல் – நூல் நயம்
ஒரு நல்ல கவிதைக்கு உடல், உயிர், உள்ளம், உயிர்த்துடிப்பு எல்லாமே இருக்கிறது. உள்ளடக்கத்துக்கு தகுந்த வடிவமும் (form) வடிவத்துக்கு தகுந்த உள்ளடக்கமும் (content) பொருத்தமுற அமைந்து விட்டால் அது சிறந்த கவிதையாக அமைந்துவிடும். இந்த வகையில் 42 தனிக் கவிதைகளைக் கொண்டு தொகுத்த கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்களின் “பெயல் நீர் சாரல்” கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதும் அருவியாக விழுகிறது. எனக்கு தமிழ்க்கவி பிரமிள் அவர்களை மிகவும் பிடிக்கும். `காவியம்’ என்ற தலைப்பில் பிரமிள் […]
அமெரிக்கன் கனவும் தற்போதய நனவும்
நீங்கள் இன்று பணக்காரப் பெற்றார்களுக்கு அமெரிக்காவில் பிறந்து இருந்தீர்களே ஆயின் உங்கள் வாழ்வு மீதி மக்களிலும் திடகாத்திரமானது. அதாவது உங்கள் வாழ்வில் முன்னேற அதிக சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் சாதகமாக உண்டு என்கிறது அண்மையில் வெளியான “The global social mobility report 2020” புதிய அறிக்கை. வளர்முக நாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய தமிழருக்கு இதில் என்ன புதிய செய்தி இருக்க முடியும் என்று சிந்தித்துக் கொள்ளலாம். ஆயினும் இது அமெரிக்க ஐதீகத்திற்குச் சவலான ஆதாரங்களுடனான […]
புத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம்
சென்பாலனின் முன்னைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களம்; ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில் தமிழகத்திற்குக் கடத்தப்படும் 40 கிலோ தங்கம் அங்கு விற்கப்பட்டு அந்தப் பணம் அன்று வெளிநாட்டிலிருந்த இயக்கப் பொறுப்பாளருக்கு மாற்றப்படுகிறது. அவர் அந்தப் பணத்தினை “பிட் கொயினாக” மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினைத் திறப்பதற்கான குறிச்சொல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் தெரியும்; அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன். அவரை நம்ப வைத்து […]
புத்தகத் திறனாய்வு – பெர்முடா
பெர்முடா முக்கோணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பக்கத்தில போனவன் எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்திடும்; காரணமே புரியாமல் காணாமல் போனவர்கள் அதிகம் பேர். அப்படிப்பட்ட ஒரு கதைக்களம் தான் இது. “பெர்முடா” – இதுதான் கதைத் தலைப்பு. களம் என்று பார்த்தால் பொருந்தாக் காமம்; மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமம் இதுதான் கதையின் கரு. சில புத்தகங்களைப் படிக்கும் போது, ஏன்தான் இதைப் படித்தோம் என்று தோன்றும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அப்படித் தான் தோன்றியது. […]
இதுவா வாழ்க்கை?
தொலைக்காட்சிப் பெட்டிநம்மின் வீட்டிற் குள்ளே தொகைகொடுக்க வந்தபின்னே புத்த கங்கள் விலைகொடுத்து வாங்குவதை நிறுத்தி விட்டோம் வீற்றிருந்து படிப்பதையும் விட்டு விட்டோம் ! அலைபேசி நம்கைக்கு வந்த பின்போ அழகான கையெழுத்தில் நலங்கள் கேட்டுக் கலையாக எழுதிவந்த கடித மெல்லாம் காணாமல் போனதுவே கையை விட்டே ! பொன்னாக மேசையின்மேல் கணினி வந்தே பொலிவாக […]