இலக்கியம்
அமெரிக்கக் குடியுரிமை பிறப்புரிமையா?
மண்ணின் மைந்தர் அடிப்படையில் குடியுரிமை சரிதானா என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. பிற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வட அமெரிக்காவில் புகலிடம் கொண்டவர்களால் இந்தக் கருத்து பல திருத்தங்களுடன், புதிய கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடியுரிமைக் கணக்கெடுப்புப்படி, இந்த நாட்டில் வாழும் 40 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 13 சதவீதம் மக்கள் வெளிநாட்டில் பிறந்தவர்கள். அதே சமயம் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படும் அமெரிக்க நாட்டில், சுமார் 20 மில்லியன் மக்கள் […]
மை பூச ….
அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி…… கொஞ்சிப் பேசித் தலையாட்டி வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி…… கையக் காலைப் புடிச்சுத்தான் பொய்யப் புளுகைச் சொல்வாண்டி செய்ய முடியாச் செயலெல்லாம் மெய்யா நடக்கும்னு விடுவாண்டி …… மானங் கெட்ட பொழப்பாலே போன வருசம் அடிச்ச கொள்ளை தானப் பிரபுவாத் தான் மாறி வானம் வழியாக் கொடுப்பாண்டி …. தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க பண்ணி வைச்ச புழுவதுடி….. கண்ணி வச்சு மான் புடிக்க பின்னிப் பிணைஞ்ச வலையதுடி […]
பெப்பா பிக் பார்க்கலாமா?
இந்தத் தலைமுறை சிறு குழந்தைகளின் ஆதர்சமாக இருக்கும் கார்ட்டூன் கேரக்டர், பெப்பா பிக் (Peppa pig). இங்கிலாந்து தொலைக் காட்சியில் அறிமுகமான இந்தச் செல்லப் பன்றிக் குட்டி, இன்று உலகமெங்கும் ஒளி பரப்பப்பட்டு, சிறு குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பெப்பா பிக் படம் போட்ட ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பெருமளவு விற்பனை ஆகி வருகின்றன. பெப்பா பிக் தீம் பார்க்குகள் இங்கிலாத்திலும், சீனாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் பட்டியலில் […]
தேர்தல் 2019
சுதந்திரமடைந்து எழுபத்தியிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்தியா 17ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொண்டு, நடத்தி வருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களில் இத்தேர்தல் நடைபெறும். இருபத்தியொன்பது மாநிலங்கள், ஏழு ஒன்றியப் பகுதிகளிலிருந்து, பதினெட்டு வயதை அடைந்து விட்ட ஏறத்தாழ 90 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். இதில் சற்றேறக்குறைய 1.50 கோடி பேர் முதன்முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ள இள வயதினர். தகுந்த […]
பாரீஸ் நாட்ரடாம் புராதன தேவாலயம் (Paris Notre Dame Cathedral)
ஏப்ரல் 15ம், திகதி 2019, ஃபிரஞ்சு மக்கள் சரித்திர அத்தியாயத்தில் இருண்ட பக்கம். கலாச்சார துக்க தினத்தில் ஒன்று என்று கூறலாம். ஐரோப்பிய கலாச்சாரத்தின் எழில் சின்னங்களில் ஒன்றான நாட்ரடாம் புராதன தேவாலயம் அதன் சீரமைப்பு வேலைகளின் போது தீக்கிரையானது. ஃபிரஞ்சு மக்கள் சனநாயகத்தை வெகுவாகக் கடைப்பிடிக்கும் மக்கள். சகல சிந்தனைகளையும், கலைஞர்களையும், புத்தி ஜீவிகளையும் வரவேற்கும் அதே சமயம் ஃபிரஞ்சு மக்கள் ஆன்மீக சிந்தனை கத்தோலிக்கமாகவும் ஆயிரம் ஆண்டுகளிற்கும் மேலாகவும் உள்ளதை நாம் அவதானிக்கலாம். நாட்ரடாம் […]
கயமைக்குக் கல்லடி
கடவுளரைப் பழித்திடும் கருங்காலிக் கூட்டமது கண்ணியம் இன்றியே குரைப்பதும் தொடர்ந்திடுது கைகளில் ஒலிப்பெருக்கி கைதட்டச் சிறுகூட்டம் கண்ணனின் லீலைகளைக் காலித்தனமாய்ப் பேசியது! கருத்துத் தெளிவாய்க் கைகுவித்துக் கேட்டிட்டால் கருணை பலகொண்டு கனிவாய் விளக்கிட கடுந்தவம் புரிந்து கைங்கரியம் பலசெய்த கடவுள்நிகர்ப் பெரியோர் கண்டம் முழுதுமுண்டு!! கலகம் விளைவித்தால் கல்லா நிறையுமென்றும் கண்மூடித் தாக்கிட்டால் கனகம் கிடைக்குமென்றும் கடவுளரை ஏசிட்டால் கணக்கின்றிக் கொட்டுமென்றும் காசொன்றே குறிக்கோளான கயவர்களை நிராகரிப்போம்! கயவான சொல்லதற்குக் கருத்தாய் மறுப்புண்டோ கதிகலங்கி நின்று கண்ணீர்விடும் […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
ஐந்தாறு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்பும், அபரிமிதமாகத் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இன்றைய நவீன யுகத்திலும் நம் மனதை விட்டு அகலாத, ஏதோவொரு வகையில் நம்மில் பிரமிப்பை ஏற்படுத்தி நிற்கும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக வரிகளில் வினாக்களை தொடுத்து, நேர்மறையாகவோ மறைமுகமாகவோ விடையளிக்கும் பாடல்களைக் கடந்த பகுதிகளில் கண்டோம். எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி போல பொக்கிஷங்களைத் தந்துவிட்டு சென்ற படைப்பாளிகளின் மேலும் சில படைப்புகளைத் தொடர்ந்து பார்ப்போம். திரைத்துறைக்குள் நுழைந்த […]
ஸ்னோ அள்ளிப் போட வா!!
மினசோட்டாவில் தனி வீட்டில் வசிப்பவர்களுக்கு, குளிர்காலத்தில் பனி அள்ளிப் போடும் பணியானது, சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்குப் பிறகான முக்கிய அன்றாடப் பணியாகும். அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர்களுக்கும், டவுண்ஹோம் என்றழைக்கப்படும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த அரும்பணி ஆற்ற வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் நிர்வகித்துக்கொள்ளும். தனி வீட்டு மஹாராஜாக்களுக்கு மட்டுமே இந்த மண்ணள்ளி, மன்னிக்கவும், பனியள்ளிப் போடும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கட்டாயம் என்றில்லை. காசு கொடுத்தால், மலையையே குடைந்து அள்ளிச் சென்று விடுவதற்குக் காண்ட்ராக்ட் இருக்கும் போது, […]
நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்
ஏதோ ஒரு நிறுவனத்தின் இலவசப் பரிசாக அவனிடம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் ! புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் ! எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு ! ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை ! அன்றாடமில்லை என்றாலும் என்றோ சில நாட்களில் எழுத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் […]