இலக்கியம்
அழகிய ஐரோப்பா – 8
(அழகிய ஐரோப்பா – 6/அழகோ அழகு) சிங்கார நதி மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகியிருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளங் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மின்ஸ்டர் பிரிட்ஜ் என்ற இந்தப் பாலம். லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான […]
அழகிய ஐரோப்பா – 7
(அழகிய ஐரோப்பா – 6/பயணங்கள் முடிவதில்லை) அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. சிறு நடைப்பயணத்துக்குப் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்குப் பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை […]
பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்
”ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான் ……. […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
எப்பேர்ப்பட்ட கவிஞனுக்கும் சில சமயங்களில் சொற்பஞ்சம் ஏற்படுவதுண்டு. எதுகை, மோனை, இயைபு நயங்களுக்காகச் சொற்கள் திணிக்கப்பட்டிருப்பதைப் பல கவிதைகளில் காணலாம். இவ்விதச் சொற்கள் வரிகளில் துருத்திக்கொண்டு நின்று அழகையும், கருத்தையும் கெடுத்துவிடும். சினிமாப் பாடல்களில் இந்தக் குறையற்ற கவிநயத்தைப் பலரும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சொற்கள், தேர்ந்த சேவகன் ஒருவன் சிந்தாமல் சிதறாமால் தேனைக் கோப்பையில் ஊற்றினால் அந்தத் தேன் எப்படி கோப்பையின் வடிவத்துக்கேற்ப பரவி நிற்குமோ அது போல வரிகளில் அழகாகப் பொருந்தி அடைக்கலமாகும். […]
காமம்!!
சந்திர மண்டலம் சடுதியில் செல்பவரும் இந்திரிய இன்பத்திற்காகத் திரும்ப வந்திடுவர்! மந்திரம் மாயமென கபடம் பேசுபவரும் தந்திரம் செய்தாவது திரைமறை சுகித்திடுவர்! இயந்திர கதியில் இல்வாழ்வு நடத்துபவரும் இதந்தர வேண்டி இரவினில் கூடிடுவர்! மதந்தரு போதனைகள் மாண்புடன் கற்றவரோ பயன்தரு வகையினிலே பண்புடனே கடன்புரிவர்! இச்சையாய்ச் சேருவதே இறைவனின் படைப்பென்றால் கொச்சையாய் அதனையும் கூவிடுவது எதனால்? சர்ச்சையாய் ஒருவரின் இணக்கமும் இன்றியே பச்சையாய்ப் புணர்ந்திட முயல்வதொன்றே பாவம்! இருவரும் வளர்ந்து வயதிற்கு வந்தவரெனின் இருவரின் ஒப்புதலும் இனிதே […]
யூ-ட்யூப் பிரபலங்கள்
சமூக வலைத்தளங்கள் நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பலரது வாழ்வை மாற்றிப் போட்டுள்ளன. எல்லோரையும் போல் சராசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பலரை செலிப்பிரட்டிகளாக ஆக்கியுள்ளன. அவ்வாறு பிரபலமானவர்களைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பே இது. குறிப்பாக, யூட்யூப் மூலம் தமிழில் பிரபலமானவர்களை இக்கட்டுரையில் காணலாம். சினிமா, அரசியல், சமையல், அறிவியல் எனப் பல துறைகளில் தங்கள் பதிவுகளை யூ-ட்யூப்பில் அளித்துப் பிரபலமானவர்கள் இவர்கள். ப்ளூ சட்டை மாறன் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரது யூ-ட்யூப் சானலான ‘தமிழ் டாக்கீஸ்’க்கு […]
அழகிய ஐரோப்பா – 6
(அழகிய ஐரோப்பா – 5/படகுச் சவாரி) பயணங்கள் முடிவதில்லை லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். … நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் […]
பட்டாசில்லா தீபாவளி!!
பஞ்சணையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே! பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே! பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்! – வெ. மதுசூதனன்
அழகிய ஐரோப்பா – 5
(அழகிய ஐரோப்பா – 4/முதலிரவு) படகுச் சவாரி இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன். மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் […]
ஒரு நாள் இரவு ..
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை. சுழன்று, சுழன்று அடித்த காற்று ஜன்னல் கண்ணாடியைச் சடசடவென அதிரச் செய்தது. தெருவோர மஞ்சள் விளக்கில் நாலாபுறமும் பறந்த பனித்துகள்களுடன், ஏற்கனவே தரையில் விழுந்திருந்த பனியும் கிளம்பி பெரிய பனிப்படலத்தை உருவாக்கியிருந்தது தெரிந்தது. இதுவரையில் ஏழெட்டு அங்குல பனி விழுந்திருக்கலாம். நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும், மேலும் சுமார் ஒண்ணரை அடிக்கான பனிப்பொழிவு தொடருமெனவும் ரேடியோவில் சொன்னார்கள். டேபிளிலிருந்த […]