இலக்கியம்
ஆமென்!
”ஏண்டி லக்ஷ்மி…. நியூஸ் கேட்டியா?”, மூச்சிறைக்க பேஸ்மெண்டிலிருந்து மேலேயிருக்கும் சமையலறைக்கு ஓடி வந்தான் கணேஷ். அப்பொழுதுதான் ஃபோன் பேசி முடித்து, அந்த ஃபோனையும் கையிலேயே எடுத்துக் கொண்டு வந்திருந்தான்… “என்னன்னா, என்ன நியூஸ், யாரு ஃபோன்ல?”. வழக்கமாக அவ்வளவாகப் பதற்றமடையாத கணவன் பதறுகிறானே என்று அவளுக்குப் பதற்றம். இந்தியாவிலிருந்த வயது முதிர்ந்தவர்களெல்லாம் ஒரு முறை அவளது மனக்கண் முன்னே வந்து சென்றனர். ”யாருக்கும் எதுவும் ஆகியிருக்கக்கூடாது ராகவேந்திரா” என்று தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டாள். ”ஜோஸஃப் ஃபோன் […]
முயன்றிடு …
செயலைச் செய்யும் முன் முயன்று தான் பார்ப்போமோ என்று முனைப்பதல்ல முயற்சி எண்ணங்கள் கூட செயல்களும் செம்மையாய்ச் செய்தல் வேண்டும் விளைவுகள் எண்ணாது விடியலைப் படைத்திட வேண்டும் பலவித முயற்சிகள் வரையற்ற தோல்விகள் காயங்களில் படர்ந்த அனுபவங்கள் இவையெல்லாம் ஒரு நாள் மலரும் வெற்றி என்ற கனியாய் … ச.கிருத்திகா
அமெரிக்க இடைத்தேர்தல் 2018
ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும். (Special elections) இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான (House Representative)பிர தேர்தல் அதிபர் […]
அழகிய ஐரோப்பா – 4
(அழகிய ஐரோப்பா – 3/அந்த ஏழு நாட்கள்) முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் […]
ரோஜா
பலர் உன்னைப் பார்த்து புகழ்ந்தார்கள் அவர்களுக்கு உன் அழகு மட்டுமே தெரிந்தது! உன்னை உன் தாயிடமிருத்து பிரித்தவர்களென அவர்களை நீ வெறுக்கவில்லை! இப்போது உணர்ந்தேன் உனது அழகு – உன் தியாகம் மட்டுமே! ச.கிருத்திகா பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி கோபி.
அழகிய ஐரோப்பா – 3
அந்த ஏழு நாட்கள் (அழகிய ஐரோப்பா – 2/அவளும் நானும்) “ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள் “சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன். வளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள். “குழந்தைகளின் வரிசை” என்று அவள் சொன்னதும் என்னிடம் […]
விடியாத இரவென்று எதுவுமில்லை
செப்டம்பர் மாத மாலை நேர வெயில் அந்த இடத்தைச் செம்மஞ்சளில் முக்கி எடுத்தது போல் மாற்றியிருந்தது. மினசோட்டாப் பனியை நன்கறிந்த வாத்துகள் கூட்டமாகப் பறக்கப் பழகிக் கொண்டிருந்தன. எட்டுக்குப் பனிரெண்டு அளவிலிருந்த அபார்ட்மென்ட் பால்கனியில் அமர்ந்திருந்தனர் சத்யனும் நர்மதாவும். தூரத்தில் ராச்சஸ்டர் கேஸ்கேட் ஏரியில் ஒற்றையாக அலைந்து கொண்டிருந்த படகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நர்மதா. அவள் கையிலிருந்த காஃபி இந்நேரம் ஆறிப் போயிருக்கும். லேசான குளிருக்குப் பயந்து பால்கனியின் பக்கவாட்டு சுவர் மறைப்பில் அவள் உட்கார்ந்திருந்தாலும், […]
இதுவும் கடந்து போம்
மனதிற்கு இனிய மழலையாய் வந்துதித்தேன்.. மழலையும் மெதுவாய்க் கடந்தே போனது…… கொள்ளை அழகுக் குழந்தையாய்த் தவழ்ந்திருந்தேன் கொடுத்ததை எடுத்ததுபோல் கடந்தே போனது…. படிப்பதில் பிடிப்பால் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.. பள்ளிப் பருவமதுவும் கடந்தே போனது.. கட்டிளங் காளையாய்க் கல்லூரியை வலம்வந்தேன்.. கல்லூரி நாட்களும் கடந்தே போனது… காளைப் பருவத்தில் காதலிக்காகத் தவமிருந்தேன் காதலும் மறைந்து கடந்தே போனது.. துயரத்தின் மத்தியில் தொழில்பல புரிந்திருந்தேன் துயரமும் கூட கடந்தே போனது…. மனையாளின் சுகமதை மலரென நுகர்ந்திருந்தேன் மனத்தாங்கலால் சுகமது கடந்தே […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2
பாகம் 1 சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா?’, […]
அழகிய ஐரோப்பா – 2
முதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு… அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன். “நேரம் […]