இலக்கியம்
சூதாட்டம்
காசாசைச் சூதாட்டம் காலத்தை வீணாக்கும் நாசமாக்கும் வாழ்வை நாளும் சிதைக்கும் பேராசை என்றுமே பேரழிவைத் தரும் ஏசப்படாமல் வாழ்வதே ஏற்றத்தைத் தரும் நாசம் விளைவிக்கும் நஞ்சுச் செயல்களை வீசி எறிந்துவிடு விவேகத்தோடு வாழ்ந்திடு அசலாகி வாழ்தலே ஆக்கம் அளிக்கும் நிசமான உழைப்பே நன்மை செய்யும் அறிவாய் இருத்தல் அனைவருக்கு மழகே – சரஸ்வதி ராசேந்திரன்
வானத்தின் நாணம்
கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில் காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி நாணத்தினால் மதிவதனம் சிவந்தது போல், அந்தி மயங்கும் நேரத்திலே ஆதவனின் பொற்கரங்கள் அன்பு கொண்டு தழுவியதால் அந்தி வானம் சிவந்ததுவோ!. சித்தினியின் சித்தமது சிறகடிக்க வஞ்சியவள் நெஞ்சமது துடிதுடிக்க காரிகையின் கண்ணிரண்டும் படபடக்க கைகளினால் முகம் மறைத்த காதலி போல், கடல் அன்னை அலை எழுப்பிப் பரிகசிக்க வான் பறவை கானம் பாடி வாழ்த்துக் கூற வான் மகளும் நாணத்தினால் முகம் சிவக்க […]
அழகிய ஐரோப்பா – 1
உல்லாச உலா அமெரிக்காவில் பனியும் பணியுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பூட்டிய அறைகளிலேயே பிள்ளைகள் நாளாந்த வாழ்க்கையைக் கடந்து போகிறார்கள். பிள்ளைகளின் மகிழ்வுக்காகச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியூர் பயணம் மேற்கொள்வது என்பதை ஒரு நோக்கமாக வைத்துள்ளோம். நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தோம். அமெரிக்கா வந்தபின் சென்ற முதல் வெளிநாட்டு பயணம் அது என்பதால் மறக்கமுடியாத நினைவாக இன்றும் இருக்கிறது. இரண்டு வருடம் முன்பு துபாய் மற்றும் இலங்கை சென்றிருந்தோம். இவ்வருடம் ஐரோப்பா போவதென முடிவெடுத்திருந்தோம். […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது பிறந்த தினத்தையொட்டி பனிப்பூக்கள் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்து, ரசித்த சில நண்பர்கள் கண்ணதாசன், விஸ்வநாதன்–ராமமூர்த்தி கூட்டணியில் வந்த, சுவாரசியமான பாடல்களைப் பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்கள். இக்கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் தனித்துவமானவை என்றாலும் கூட சில பாடல்களில் ஒளிந்திருக்கும் நுட்பம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு. அவற்றில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பொதுவாக காதல் […]
பூப்பனை என்றாகி..
நான் பூப்பனையானேன் பூத்துக்கொண்டே வளர்கிறேன் எனது பூவில் அழகில்லை எனது பூவில் இனிமை இல்லை எனது பூவில் ஒரு கனவும் இல்லை கடல் ஓரத்து மணல் வெளியில் உயர்ந்து நிற்கிறேன் கடற் காற்றின் தடவுதலில் நான் வளர்ந்து போகிறேன். எனது முகத்தில் உதயசூரியன் உப்பு நீரைத் தெளித்துவிடுவான் உப்புக் காற்றைச் சாமரத்தோடு கலப்பான் கானலை விசிறுவான் போதையோடு சரிந்துகிடக்கும் மனிதக் கட்டைகள் என்னைத் தூரமாய்ப் பார்த்து உரையாடுவர். நான் பூப்பனையானேன் எள்ளிநகைக்கும் தூக்கணாங்குருவிகள் என்னில் கூடுகளுக்குச் சொருகும் […]
கனவுகள்
ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும், நிகழ்வுகளும் நினைவுகளும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களின் வண்ணங்களும் கற்பனையின் சிற்பங்களும் அசைந்தெழுந்து மலர்ந்திடுமே ஆழ்ந்துறங்கும் நித்திரையில், கனவுகளாய்! மனங்களுக்கு மகிழ்வு தரும் கனவுகள் உண்டு மனங்களையே கலங்க வைக்கும் கனவுகளும் உண்டு கடமைகளை உணர வைக்கும் கனவுகள் உண்டு – மன குழப்பத்திற்குத் தீர்வு தரும் கனவுகளும் உண்டு வீரதீரச் செயல் புரியும் கனவுகள் உண்டு வீறிட்டுக் கதற வைக்கும் கனவுகளும் உண்டு கனவுகளில்….. இன்பங்களில் திளைக்கலாம் நினைத்ததெல்லாம் அடையலாம் […]
பரதேசிகள்
நாற்றங்காலில் புற்களுக்கிடையில் முளைத்திருக்கும் நாற்றுகளைத் தப்பாமல் எடுத்து முடிபோடுவார் தாத்தா நடவுநட்டு மீந்த நாற்றுகளை யாருக்காவது தானமளிப்பர் விவசாயிகள் நெற்கட்டுகளைத் தூக்க இன்னும்நாங்கள் வளராததால் தப்புகதிர்களைப் பொறுக்கும் வேலை எங்களுக்கு களத்துமேட்டில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை ஒன்றுவிடாமல் பொறுக்கிடுவாள் பாட்டி கமிட்டியில் அநியாய விலைக்கு எடுத்தாலும் எடைபோட்டப்பிறகும் இனி நமக்கென்ன லாபம் என்றெண்ணாமல் கொட்டிக்கிடக்கும் நெற்களை அள்ளி மூட்டையில் போட்டுவிட்டு வெளியேறுவார் அப்பா குழந்தை சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் தம் உணவோடு சேர்த்துத்திண்பாள் தாய் பட்டினிச்சாவறியா பரதேசிகள் கை […]
வீட்டுத் தரகர்
புகையிலைத்தரகர் , மாட்டுத் தரகர் , வெங்காயத் தரகர் , கலியாணத் தரகர் , காணித்தரகர் என்று பல தரகர் தொழில் புரிவோரைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இத்தொழில்களில் வீடு வாங்கி விற்கும் தரகர் தொழிலானது அதிக இலாபத்தைத் தரக்கூடிய தொழிலாகும். குறைந்த அளவில், மூன்று சதவிதம் கொமிஷன் கிடைத்தால் கூட அதே ஒரு பெரிய வருமானமாகும். வீட்டுத் தரகர் கட்டிடக் கலையை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தால் மட்டும் போதாது, சட்ட நுணுக்கங்களையும் , எவ்விதம் வங்கியில் […]
அலை பாயும் மனதினிலே !
சிற்பி கையிலே சிற்றுளி செதுக்க முடியாமல் சிலையாக நின்றான் அலைபாயும் மனதோடு ! அவன் வசிப்பது வசந்த மாளிகை புசிப்பது அறுசுவை உணவு துயில்வது பஞ்சு மெத்தை துக்கம் மனதோடு தழுவி தூக்கம் கண்களைத் தழுவாமல் தூங்காமல் அலை பாய்கிறதே! அவன் பொய் முகத்தை மெய் முகமெனக் காட்டி பணம் பதவி புகழ் நாட்டி பசித்தவன் போல் மன நிம்மதி தேடி கடல் அலைகள்போல் கவலையில் அலைகின்றானே ! உலகில் காதலே அலைபோலே […]
உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி
எப்போதுமான முகாந்திரமற்ற இலையுதிர்தல் தொடர்கிறது வீதியின் விளிம்புகளில்….. வசந்தத்தை ஒரு வாளியில் மொள்ளுகிறது ஆளும் அரசுகள். ஆங்காங்கே உடைந்துக்கிடக்கின்றன செத்துப்போன இந்திய நாணயங்கள் காலாற நடந்த வீதியின் வீச்சை கணத்த இதயத்தோடு பார்க்கும் நடுத்தரவர்க்க நாய்கள் அவ்வப்போது முளைக்கும் இலவச எலும்புத்துண்டுகள் கூப்பாடு போடலாமென்று கூடிமுடிவெடுத்தது வாலாட்டிக்கூட்டங்கள். நிமிர்த்தவா முடியும்? எப்போதும்போல் வந்தது ஐந்தாண்டுக்கொருமுறை நாடகம். கிடைத்தன எலும்புத்துண்டுகள் ஜனநாயகத்தின் வாய்மூடிவிட்டது. ஜனங்களின் வயிறுகள் காலிக்குடுவைகள். மக்களுக்கான சவப்பெட்டியை மக்களே சுமந்தனர் மடிநிறைய. பெட்டிநிறைய வழிந்தது மக்களாட்சி… […]