இலக்கியம்
முதுமைக் காதல்
மெருகூட்டும் உன் கன்னங்கள் மருவற்ற முகத்திற்கு அழகு சேர்க்க!! மொழிபேசும் உன் இதழை மெய்மறந்து நான் பார்த்திருக்க வளையோசை கேட்டுக்கொண்டே மடிமீது தலை சாய்க்க!! அசைந்தாடும் கூந்தல்; அதில் அலைபாயும் காற்று இசையாவும் உந்தன் கால்கொலுசில் விளையாடும் அழகே!! கதைபேசும் கவிதையே கைகோர்க்கும் தாரகையே விலைபேசும் உன் கண்ணோடு உரையாடல் நான் தொடங்க! வார்த்தைகள் தடுமாறி குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின! எதைச் சொல்லி மறைப்பேன் – நான் உன் சிரிப்பொலியில் […]
நி(தி)றம்படப் பழகு
ஏனோ இந்தக் கேள்வி இப்போதெல்லாம் சுஜாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்குப் பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் அவளிடம் “ சுஜா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள […]
இணையத்தில் இனிமையாக இருந்து கொளல் எப்படி?
நாளாந்த நடத்தைகள் பற்றி இணையத்தில் துச்சமான, துக்கமானச் செய்திகள், அறிக்கைகள் வருகினும் அவற்றை முற்றிலும் உண்மையென நம்பி நாம் எடுத்துக் கொள்ளலாகாது. மனிதாபிமானம் என்பது இலத்திரனியல் நூற்றாண்டிலும் தொன்மையானது . இது நாம் நாளாந்தம் மற்றவருடன் பேணக் கூடியது, பேணவேண்டியது. இதே மனிதாபிமானத்தை நாம் நாளாந்தம் உபயோகிக்கும் இணையத்திலும் கடைபிடிக்கவேண்டும், இணையத்தில் தொடர்பு நன்னெறிகளைப் பேணல் மற்றவர்கள் நுகர்வுக்கு ஒரு கருத்தை எழுதும் போதும் சற்றுச் சிந்தித்து எழுதுவதும் , சித்தரிப்புக்களைப் பகிர்வதும் நலம். நாம் பரிமாறும் […]
புன்னகை
வரிகள் இல்லாத பொது மொழி வார்த்தைகள் சேராத வாய்மொழி உதடுகளின் விரிப்பில் மனதை மயக்கிய மாய மருந்து… சில காலடித் தூர நடை ஒரு சிறு சுவர் தாண்டல் உதிர்த்த சிறு புன்னகை பகை மறந்த கை குலுக்கல் ஒற்றை மரம் நடுதல் சுயம் இழக்காத உறவாடல் அத்தனையும் சேர்ந்து அறுத்ததெறிந்தது ஆறாப் பகையை தியா –
கவித்துளிகள் சில…
அம்மாவின் ஓயாத இருமல் கண்ணீராய் வெளிவரும் ஆண்டுகள் கடந்த தாய்ப்பால் ***** கோடை வெயில் நிழலை அழித்தது திடீர் மழை ***** தப்பித்த சிறு பூச்சி பேருருவாய் மேல் விழுந்தது மின்விளக்கின் மேல் தஞ்சம் ***** தென்றலின் இனிமைப் பேச்சு விழுந்து சிரிக்கும் சருகுகள் அச்சத்தோடு மனிதன் ***** அகன்ற கருப்புத்தாள் கண்மூடி எழுதுகிறேன் இரவுக் கவிதை சா. கா. பாரதி ராஜா
ஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்?
ஸ்டெர்லைட் நிறுவனம் 1993 இல் தாமிர உற்பத்தி தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்த சமயத்திலிருந்தே, தூத்துக்குடியில் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. அச்சமயத்தில் தூத்துக்குடியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்கள் தொடர் பேரணி போன்ற போராட்டங்களில் கலந்துகொண்டோம். உள்ளூர் பொதுமக்களின் சம்மதம் இல்லாமல், மாநில அரசின் ஆதரவைப் பெற்று 1996இல், மக்களின் பாதுகாப்பை மண்ணுக்குள் புதைத்துவிட்டு, தனது உற்பத்தியைத் தொடங்கியது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. இன்று இந்தியாவின் முன்னணி தாமிரத்தொழிற்சாலை என்ற நிலையில், ராட்சத உற்பத்தியைக் கொட்டிக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதன் […]
அம்மா
தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]
சிலுவையின் காதல் கடிதம்
அன்புள்ள நித்ரா, என்றும் உன் நலன் விரும்பும் சிலுவை எழுதுவது. நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்தக் காலத்தில் கடிதம் எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். இப்போது கூட நீ இதை ஒரு சின்ன சிரிப்போடு தான் படித்துக்கொண்டிருப்பாய். இதை படித்து முடிக்கும் போது உன் கருத்து மாற வாய்ப்பிருக்கிறது புகைப்படம் போல கடிதமும் காலத்தின் ஆவணம். அன்பின் வார்த்தைகளை, பிரியங்களை, அக்கறை கலந்த கண்டிப்புகளைத் தாங்கி வரும் கடிதங்கள் எந்தக் காலத்திலும் தொலையப்போவதில்லை இல்லையா? நமக்கு மிகப் […]
விடியல் ..
ஒவ்வொரு காலையும் இதழோடு முட்டிக் கொண்டதன் ஈரம் காணாத சூடான கதகதப்பில் குடுவையில் அடைத்த தேன் துளிகள் போல பருகப் பருக இன்பமாய் முகரும் மூக்கின் நுனியில் வாசம் படர்ந்திடும் இயற்கையின் விடியலாய் ஒவ்வொரு முறையும் பருகுகையில் விழிகள் அழகாய் விழித்திடும் தூக்கத்திலிருந்து! நானருந்தும் தேநீர்! – ந. ஜெகதீஸ்வரன்
தேனீ அறியாத தேன்
அமெரிக்க ஊத்தப்பமான பேன் கேக்கில் (Pan Cake) தொட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் பயன்படுத்துவது மேப்பிள் சிரப் (Maple Syrup) எனப்படும் ஒரு தேன் போன்ற சமாச்சாரத்தை. சுவையாக, தேன் போன்ற தித்திப்புடன் இருக்கும். இது தேனீயிடம் இருந்து பிடுங்கிய தேன் இல்லை. மேப்பிள் என்ற மரத்திடமிருந்து எடுக்கும் தேன். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மேப்பிள் மரத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். மிகவும் அழகாக இலைகளைக் கொண்ட மரம். கனடா நாட்டின் சின்னமாக, அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக மட்டுமில்லாமல், கனடா நாட்டின் […]