இலக்கியம்
விளம்பரக்கார உலகமடா
பக்கத்து வீட்டு கிட்டு மாமாவைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அடையாறு , மத்ய கைலாஷ், வட பழனி ஏரியாக்களில் ரொம்ப பிரபலம் அவர். ஏதோ அரசியல் பிரமுகரோ , சினிமா பிரபலமோ, எழுத்தாளரோ இல்லை. ஆனாலும். பழக்கடை வியாபாரி முதல், பெட்டிக் கடை முதலாளிகள், தள்ளு வண்டி விற்பனையார்கள் , இப்படி எல்லோருக்கும் அவர் பரிச்சயம். அவர் என்ன வேலை செய்கிறார்னு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் மத்ய கைலாஷ் கோயிலைப் பெருக்கிக் கொண்டு இருப்பார் […]
ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ
சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]
ஜிடிபிஆருக்கு தயாரா?
தகவல் தொழில்நுட்பம் பல்வேறு காலக்கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. எந்தளவுக்குப் பயன்களைத் தருகிறதோ, அதே சமயம் இன்னொரு பக்கம் பிரச்சினைகளையும் உருவாக்கி வருகிறது. இன்றைய காலத்தில் வேண்டியோ வேண்டாமலோ நம்மைக் குறித்த தகவல்களை இணையத்தில் பல்வேறு இடங்களில் பதிய வேண்டியுள்ளது. நாம் அறிந்தோ அறியாமலோ இந்தத் தகவல்கள் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் அனைத்தும் ஒருவருடைய அந்தரங்கம் சார்ந்தது மட்டும் அல்ல. அது ஒரு நிறுவனத்திற்குப் பொருள் ஈட்டும் பயனைத் தரும் நிலையில் இருப்பதால், அது அவருடைய தகவல் […]
மன்மதனே …!!
தாவணிக் கனவுகளில் மனதில் நுழைந்தவனே தலையிலே பூச்சூட்டி எனையாட் கொண்டவனே தனிமையில் தளர்ந்த தருணத்தில் உயிர்த்தவனே தந்திரத்தால் மனதில் தஞ்சம் அடைந்தவனே..! மேகக் கூந்தலில் விரலால் கோதியவனே மேனியில் வேதியியல் மாற்றம் செய்தவனே வேதனையின் வேஷம் தனைக் களைத்து வேந்தனாய் மாறி எனை ஆள்பவனே …! வயக்காட்டில் வம்பு செய்த மன்னவனே வரப்பில் அத்துமீறி வரம்பு மீறியவனே வயலில் செங்கமலமாய்ப் பூத்தவளை வஞ்சனையால் மயக்கி மஞ்சத்தில் சாய்த்தவனே…! காதலில் எனைக் […]
நினைவின் மொழி
“மனோ, நியூ இயர் அன்னைக்கு நம்ம வீட்ல தான் சாப்பாடு. அவசியம் வந்துரணும், கடைசி நேரத்துல வேற எதுவும் காரணம் சொல்ல கூடாது” “சேச்சே.. கண்டிப்பா வரேன், நண்பா. நமக்கு சோறு தான் முக்கியம்.” அன்பான உபசரிப்பும், ருசியான உணவும் கொண்ட விருந்தை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருதோம். அவர்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில், புளோரிடா, நெவாடா, லாஸ் வேகாஸ், நியூ யார்க் என ஒட்டியிருந்த காந்த பட்டைகளைப் பற்றி விசாரித்தேன். இது எல்லாம் அந்தந்த ஊருக்கு சென்று வருகையில் […]
சூப்பர் போல் லைவ்
மின்னியாபொலிஸில் ஃபிப்ரவரி 4ஆம் தேதியன்று சூப்பர் போல் ஃபுட்பால் இறுதிப் போட்டி டௌன்டவுனில் இருக்கும் யூ.எஸ். பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறுவதையொட்டி, சூப்பர் போல் ரசிகர்களுக்காக டௌன்டவுன் நிக்கலட் மால் சாலையில் ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு “சூப்பர் போல் லைவ்“ என்னும் கண் கவர் கொண்டாட்ட நிகழ்வை மினசோட்டா சூப்பர் போல் பொறுப்பு அமைப்பின் நடத்துகின்றனர். தினமும் இசை நிகழ்ச்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுகள், ஜஸ் கட்டிச் சிலைகள், பல வகை உணவுகள் […]
எதிர்பாராதது…!? (பாகம் 10)
( * பாகம் 9 * ) பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. சனங்களை ஒதுக்குவதே பிரயத்தனமாய் இருந்தது. எந்தக் காலத்திலும் சினிமா என்றால் இடம் மாறினாலும், தனிப் பிரேமைதான் மக்களுக்கு. பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான். உள்ளுக்குள் மெலிசாக உதறல். ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் […]
அந்த வாரம்
ஞாயிறு காலை பத்து மணியில் இருந்தே சங்கீதா பரபரவென அலைந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் ‘To-Do-’ லிஸ்ட். எல்லா நினைவுகளும் வரும் சனியன்று நடக்கப் போகும் தனது நண்பி கவுசி வீட்டு கிரகப்பிரவேசம் ஃபங்ஷன் போவது பற்றிதான். சங்கீதாவும், கவுசியும் நான்கு வருடங்களாக நெருங்கி பழகி வரும் ஃப்ரண்ட்ஸ். இருவர் குடும்பமும் ப்ளைமவுத் மற்று மேப்பில் க்ரோவ்வில் இருப்பதால் அடிக்கடி குடும்பத்தோடு சந்தித்து வாரயிறுதியில் நாட்களைக் கழிப்பார்கள். இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள். ஒத்த வயது […]
நீரைத் தழுவும் காற்றின் சுகம்
நீரைத் தழுவும் காற்றின் சுகம் நெடுங்கோண இதழ்களால் சுட்டி நிற்கும் பிஞ்சுக் குழந்தையின் சிற்றொலி… இலவம் பாதம் நெகிழும் காற்றின் புல்வெளி … காலசைத்த புது உயிரின் விட்டம் பார்க்கும் சுட்டுவிழி…. எல்லாமாய் இயங்கும் புதிய சூரியனை கரங்களில் ஏந்துதல் உலகின் அப்பாக்களுக்கு நீரைத் தழுவும் காற்றின் சுகம். – முனைவர் சு.விமல்ராஜ்