இலக்கியம்
சூப்பர் பவுல் ஜோரில் மினசோட்டா
“ட்வின் சிட்டீஸில்” கண்கூடாகத் தெரிகிறது. மைனஸ் டிகிரி குளிரால், ஒரு பக்கம் வைரஸ் ஜூரம் இன்னொரு புறம் சூப்பர் பவுல் எனப்படும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஜுரம். ஃபிப்ரவரி நான்காம் தேதியன்று நடக்கவிருக்கும் ஃபைனல் போட்டிக்காக இப்பொழுதே திருவிழாக் கோலமாகி விட்டது மின்னியாபொலிஸ் நகரம். பேருதான் அமெரிக்கக் கால்பந்து. ஆனால், அந்தப் பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடுவது கைகளால். என்ன தான் ஓடுவதற்குக் கால்கள் பயன்படுகிறது என்றாலும் இதைக் கால்பந்து என்று அழைப்பது வாழையடி வாழையாக அமெரிக்காவில் […]
எதிர்பாராதது…!? (பாகம் 9)
( * பாகம் 8 * ) ‘கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்…’ -அந்த நள்ளிரவில் சவமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நந்தினி பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது. வாட்ச்மேனை அழைக்க நினைத்தாள். மனைவிக்கு உடம்பு சரியில்லையென்று அவன் போயிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இப்போது கதவைத் திறப்பதா வேண்டாமா? வாழ்க்கையே தனிமைதான். அதுவாகவே அப்படி அமைந்து போனதும் இப்போது பழகிப் போய்த்தான் கிடக்கிறது. […]
2018 – நுகர்வோர் நம்பிக்கையும் சில்லறை வர்த்தகமும்
அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி , அமெரிக்க விடுமுறைக் கால விற்பனை, சென்ற ஆண்டைக் காட்டிலும் 4.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்ற ஆண்டின் “வருடாந்திர வளர்ச்சி” (Year over year sales) கணிசமாக உயர்ந்துள்ளது. ‘ஆ !! சூப்பர், இனிமே பொருளாதாரப் பிரச்சனை எதுவுமில்லை’ என நினைத்து மகிழ்ந்து சுயநினைவுக்கு வருவதற்குள் ‘பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த வளர்ச்சியை விட இது சற்றுக் குறைவு.’ என்று இன்னொரு அறிக்கை வந்து விழுந்தது. அதைப் […]
இலங்கையில் தைப் பொங்கல்
தைப் பொங்கல் என்பது தமிழர்களின் பெருவிழா என்றே பொதுவாக அர்த்தப்படுத்தப்பட்டாலும் சிறப்பாக இவ்விழா விவசாயத்தோடும் விவசாயிகளோடும் தொடர்புள்ள ஒரு பண்டிகையாகவே ஈழத்து தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. விவசாயத்தை மையப்படுத்திய பண்டிகையாக தைப் பொங்கல் அடையாளப்படுத்தப் பட்டாலும் சர்வதேச ரீதியாகவோ அல்லது இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலோ தைப்பொங்கல் என்பது விவசாயம் சார்ந்த ஒரு பொது விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. சங்க இலக்கிய காலத்தில் இருந்தே தைப்பொங்கல் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மழைக்கு அதிபதியாகிய இந்திரனைக் குறிக்கும் […]
எதிர்பாராதது…!? (பாகம் 8)
( * பாகம் 7 * ) டச் அப் பாயை அழைத்தான். கண்ணாடியைப் பிடுங்கி முகத்தைத் துடைக்கப்போனான். அப்படித் திடீரென்று துடைப்பதற்கு என்ன வந்தது? அப்படியானால் அன்று படப்பிடிப்பு அவ்வளவுதானா? தன்னை நம்பிக் காத்திருக்கும் மொத்த யூனிட்டும் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? கண்ணாடியில் முகம் வித்தியாசமாய் இருப்பதை அப்பொழுதுதான் கூர்ந்து உணர்ந்தான் பிரேம். உண்மையிலேயே தன் முகம் முற்றி விட்டதா என்ன? வயதான கதாபாத்திரத்திற்கு இப்படிப் பொருந்துகிறது? இரட்டை வேடத்தின் இன்னொரு பாத்திரமான […]
எதிர்பாராதது…!? (பாகம் 7)
( * பாகம் 6 * ) ரங்கபாஷ்யம் ஏன் இப்படி விருட்டென்று காரை எடுத்துக்கொண்டு போனார் என்று புரியாது நின்றாள் நந்தினி. பார்கவி உட்கார்த்தி வைத்து விட்டு வந்ததாகச் சொன்னவுடனே, கிளம்ப முடியலைதான். பாதியில் நிற்கும் ஷாட்டை விட்டுவிட்டு எப்படி வருவது? அதுவும் அதே மேக்கப் டிரஸ்ஸோடு? தொடை தெரியும் இந்த உடையில் அவர் முன்னால் போய் நிற்க முடியுமா? மேக்கப் அறைக்குள் நுழைந்து வெளியே வந்திருக்கிறேன். அதற்குள் போய்விட்டார்களே? உடன் ஒருவரும் வந்திருக்கும்போது எப்படி? […]
குளிர் படுத்தும் பாடு
இடம் – மின்னியாபொலிஸ் சென்ற வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் மக்கள் ஜாகிங் போய்க் கொண்டிருந்ததைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. குளிர் காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. சில நாட்களே குளிர் இறங்கி அடித்தது. இந்த வருடம் அப்படி இல்லை. டெம்ப்ரேச்சர் முள், ஃபாரன்ஹீட்டில் சைபருக்குக் கீழேயே காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவெங்கும் இந்த நிலைமையே. ஏன், இந்தியாவிலும் இதைத் தான் சொல்கிறார்கள். நூறாண்டு காலச் சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய பல குளிர்ந்த நாட்கள், கடந்த […]