இலக்கியம்
பகுத்தறிவு – 9 – மாதமோ மார்கழி….
( * பாகம் 8 * ) பகுத்தறிவு குறித்த நமது தொடரைச் சற்று, காலங்களுக்கொப்ப திருப்பிச் செல்லலாம் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் மார்கழி மாதத்தைத் தொடர்புபடுத்தி எழுதலாம் என்று தோன்றியதன் விளைவே இந்த வாரப் பகுத்தறிவுக் கட்டுரை. தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பானது என்று போற்றப்படும் மார்கழி என்ற உடனே, அந்த அதிகாலைப் பொழுது நம் மனதை ஆக்கிரமித்து விடும். குழந்தைப் பருவத்தில், நம் கிராமத்து அக்கிரகாரத்து வாசலில் […]
மணியோசை
அறையில் ஏர் கண்டிஷனர் ‘ஹுஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சவிதாவின் நீள விரல்கள் லேப்டாப்பில் சடசடவென்று தட்டிக் கொண்டிருந்த சத்தமும் கூடவே சேர்ந்து கேட்டது. அவ்வளவு ஏன், அடுத்து என்ன எழுதுவது என்று சவிதா தன் கட்டைவிரல் நகத்தால் தனது லிப்ஸ்டிக் உதட்டை வருடியது கூட தெளிவாகக் கேட்டது. ‘ட்ரிங்… ட்ரிங்…’ …காலிங்பெல். யாராக இருக்கும்? ரூம் சர்விஸ் கூட எதுவும் சொல்லவில்லையே. ஒரு வேளை விஸ்வா ஏதாவது சொல்லியிருப்பானோ? ‘ட்ரிங்…. ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…’ […]
‘உலகச் சாலைகளின் சந்திப்பு’ எதுவென்று தெரியுமா?
அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள ‘டைம்ஸ் ஸ்கொயர்’ தான் உலகச் சாலைகளின் சந்திப்பு (Cross Roads of the World) எனப்படுகிறது. புதுவருடம் பிறந்து விட்டது என்று அறிவிக்கும், உலகப் புகழ்பெற்ற ‘பால் டிராப்’ நிகழ்வு நடைபெறுவது இங்கு தான். இன்று மன்ஹாட்டன் நகரின் பிராட்வே சாலையும், ஏழாவது அவென்யுவும் சந்திக்கும் இடம்1880 களில், வெட்ட வெளியாக, குதிரைகள் வாங்கி விற்கும் பெருஞ்சந்தையாக இருந்தது. அக்காலத்தில் இந்த இடம் லாங் ஏக்கர் சதுக்கம் (Long […]
வந்தார் ரஜினி!!
கடந்த ஒரு வாரமாகத் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவந்த ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதியன்று தனது அரசியல் நிலைபாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதனால் 31 தேதியன்று ரஜினி அறிவிக்கப்போகும் முடிவின் மீது மீடியா மற்றும் அவரது ரசிகர்களது பார்வை குவிந்து இருந்தது. இதுவரை பலமுறை தனது அரசியலைக் குறித்துச் சூசகமாகப் பேசிவந்த ரஜினிகாந்த், இந்த முறையாவது அழுத்தம்திருத்தமாக ஏதேனும் கூறுவாரா அல்லது நழுவும் மீனாகவே இருந்துவிடுவாரா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இதுவரை அரசியல் […]
விடைபெறும் 2017
‘காய்ந்த நிலங்கள் கருகும்; காலத்தே வெள்ளம் பெருகும்; லண்டன், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெருவாரிநோய் பரவும்; வல்லரசு நாடொன்று போர்த் தாக்குதலால் நிலைகுலையும்; சில காலம் உலகில் நோய்கள் ஒழியும், அமைதி பரவும்; மீண்டும் போர் துவங்கும்; அரசியொருத்தியின் ரகசியங்கள் வெளிவரும்; இரண்டு முறைகள் தவறி மூன்றாவது முறை மேற்கத்திய நாடொன்று கிழக்கத்திய நாடுகளால் வீழ்ச்சியுறும்’ இந்த வரிகள், நாஸ்டிராடாமஸ் ஐநூறு ஆண்டுகளுக்கு முன், தனது ‘தீர்க்கதரிசனங்கள்’ என்ற புத்தகத்தில், 2017ஆம் ஆண்டுக்கான கணிப்புகளாக எழுதியவை. உலகில் […]
எதிர்பாராதது…!? (பாகம் 6)
( * பாகம் 5 * ) இன்று பிரேம்குமாருக்குப் படப்பிடிப்பு எதுவுமில்லை. நாளை காலையில் ஊட்டியில் இருக்க வேண்டும். ஃப்ளைட் பிடித்து கோவை சென்று, அங்கிருந்து காரில் உதகமண்டலம் சென்று விடலாம். அதுதான் அவன் பிளான். ஆனால் நந்தினியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாயிருந்தது முதலில். இப்போது அது மாறிவிட்டது. அவளாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டாள். இப்போதுதான் சூடு பிடிக்கிறது விஷயம். மனசு ஏன் இப்படிப் பறக்கிறது? . திருமணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகக் […]
பூனை
காலத்தை வெல்ல வேண்டுமே ! கால்களில் காகமும் குருவியும் — காலையில் கிழக்கு நோக்கி பணிக்குப் பறக்கும் தந்தை – வேகுமோ அரிசியும் பருப்பும் வேகத்தில் நடக்கிறது சமையல் – அவகாசம் கொடுக்காத அவசரம் – வேலைக்கு நேரமாகிறதே – மேற்கே பறக்கும் தாய் – ஓ ! குட்டிப்பூனையே ! அந்தக் குழந்தையிடம் அன்பு காட்ட , பாசம் பொழிய , உன்னைத்தவிர யாரிருக்கார் இந்த பொருள்சார் உலகில் ? – கவிஞர் டாக்டர் எஸ். […]
நியூ இயர் ரெஸொல்யூஷன்
”ஏன்னா… அடுத்த வாரம் வருஷப் பொறப்பு… என்ன ரெஸொல்யூஷன் எடுக்கறதா இருக்கேள்?..” ஏதோ பொடி வைத்துக் கேட்கிறாள் என்பதாக உணர்ந்த கணேஷ், உஷாரா இருக்கணும் என்ற உள் மனக் குரலுக்கு மதிப்பளித்து, “ஏன்.. ஏன் கேக்குற?” என்று பொதுப்படையாகக் கேட்டு வைத்தான். ”இல்லன்னா.. எல்லாரும் ஏதேதோ ரெஸொல்யூஷன் எடுத்துக்கறாளே.. அது போல நீங்களும் ஏதாவது கெட்ட பழக்கத்த விடப்போறேன்னு சொல்லுவேளோன்னு பாத்தேன்” என்றாள் லக்ஷ்மி. ”ஏண்டி, நோக்கு ஏன் இந்த வம்பு? நான் பாட்டுக்கு தேமேனு டி.வி. […]
எம்.ஜி.ஆர்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் சிறந்த வெற்றிப்பட நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர். அவருக்கு நடிப்பும், அரசியலும் இரு கண்களாக அமைந்திருந்தன. இளமைக் காலத்திலேயே, பல நாடகக் குழுக்களில் பிரபலமாகத் திகழ்ந்தார். காந்தியடிகள் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிதும் பற்றுக் கொண்டு, இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டவர் எம்.ஜி.ஆர். அநேக சிரமங்களுக்கிடையில் திரைப்படவுலகில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ஆர், முதல் சில படங்களுக்குப் […]
பிட் காயின் அலை
சென்ற வருடம், ஏறத்தாழ இதே சமயம், இந்தியாவில் பலர், திருவோடு ஏந்தாத குறையாக ஏ.டி.எம்.களில் ஸ்தலவாசம் செய்திருந்தனர். ‘கேஷ்லெஸ் எகானமி’ என்ற பொருளாதாரத் தத்துவம் தலை தூக்கியது. ஒரு வேளை அப்படி நடந்துடுமோ என்று வயிற்றில் புளி கரைய, பணத்தைச் சேமிக்க, மாற்று வழி தேட ஆரம்பித்தனர் சிலர். சில மாதங்களுக்கு முன்பு ‘வான்ன க்ரை’ (wanna cry) எனும் ‘ரான்சம் அட்டாக்’ நடத்தியவர்கள் தாங்கள் கேட்ட மீட்புத் தொகையை கரன்சி எனும் நாணய வடிவில் […]