இலக்கியம்
வாய்ப்புகள் திரும்புவதில்லை
நூறாவது தடவையாக திலகவதி கதிர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள். சுற்றி வளைத்துப் பேசினாலும் கடைசியில் அவன் பேசிய மொத்தப் பேச்சின் அடக்கமும் அந்த ஒரு வாக்கியத்தில்தான் முடிவு பெற்றது. ‘நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?’ என்ன துணிச்சல்? என்ன ஒரு துரோகம்? திலகவதி ஒரு அறிவுஜீவி. தான் படிக்கும் இரசாயனப் பாடம்தான் அவளது முதல் காதல். அதில் முனைவர் பட்டம் பெற்று மேல் படிப்புக்கு வெளிநாட்டுப் பல்கலையில் நுழைய வேண்டும் என்பதுதான் […]
ஒற்றைப் பார்வையால் ….!!
வைகறைப் பொழுதினில் ஜன்னலிடை நுழைந்து எனை இழுக்கும் காலைக் கதிரவனின் கண்கூடக் கூசும் ஒரு நிமிடம் உந்தன் ஒற்றைப் பார்வையால் …..! அதிகாலை உறைபனியில் புல்நுனியில் படர்ந்திருந்த பனித்துளியாய் எனை என்னுள் உறைய வைத்தாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! யாமத்தைக் கூட்டவே கனவினில் புன்னகையைத் தெளித்தே பூக்கோலமிட்டு பல வண்ணங்களை என்னுள் தீட்டினாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! மழையின் ஸ்பரிசத்தை நடுநிசியில் அறிந்திட மின்சாரத்தை என்னுள் பாய்ச்சியே தென்றலின் தீண்டலைத் தந்தாயே உந்தன் ஒற்றைப் […]
கறுப்பு வெள்ளி ( Black Friday ) பதினேழு பாங்கான பரிகாரம்
“கறுப்பு வெள்ளி” எனப்படும் வர்த்தக விழுபடிச் சலுகை நாள் அமெரிக்க இணைதள வியாபாரிகளை இவ்வருடம் இன்புற வைத்துள்ளதாம். நுகர்வோர் பலரும் தமது கைத்தொலைபேசிகள் மூலமே பல்வேறு பண்டங்களையும் பெரும் விழுபடி (deep discount) உடன் வாங்கிப் புதிய சாதனையை உண்டாக்கியுள்ளனராம். இது வருடம் முழுவதும் ஆயுத்தமாகி ஆவலோடு எதிர்பார்த்திருந்த வர்த்தரர்களுக்கு இறுதியாண்டில் வரவுள்ள பரிகாரம் என்கிறது “ரயிட்டேர்ஸ்” செய்திதாபனம். இதுவரை சேகரிக்கப்பட்ட தரவு தகவல்களின் படி “சாமரின்” சில்லறை வியாபாரிகள் இணைதள விற்பனைகளில் $7.9 பில்லியன் வருமானத்தை […]
கந்துவட்டி
அசல் பெற்ற பிள்ளையா? அசலின் நகலா? வட்டி! தனிவட்டி கூட்டுவட்டி தெரியாதவனுக்கு கந்துவட்டிக் கணக்கு யார் சொல்லிக் கொடுத்தது? கந்துவட்டி எண்ணெயில் கொப்பளிக்கிறது ஏழைகளின் உடல்கள்! வட்டியில் பிழைப்பவர்களே! நீங்கள் சம்பாதிப்பது பணத்தையல்ல… பாவத்தை! பல ஏழைகளின் உடல்களை எரித்துத் தின்கிறது உங்கள் குடல்கள்! வட்டிமேலே வட்டி போட்டு கழுத்தை இறுக்கும் கந்துவட்டிக் கயிறு… பல தாலிகளைத் திரித்து உருவான கயிறு! மஞ்சள் கயிறு நிறம்மாறிப் போகுது! ஏழைகளின் அழுகையைக் குடித்துக் குடித்து தினம் வாழுது! ஏதுமில்லா […]
மாயாஜால உலகம்
இருபது, முப்பது வருஷங்களுக்கு முன்பு வாழ்க்கை என்பது எப்படி இருந்தது? எழுவோம், தயாராவோம், பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ, கடைக்கோ செல்வோம், வீடு திரும்புவோம், இடையில் சாப்பிடுவோம், உறங்குவோம். கரண்ட் பில் கட்டுவதற்கு லைன், ரயில் டிக்கெட் எடுப்பதற்கு லைன், சினிமா டிக்கெட் எடுப்பதற்கு லைன். சாயங்கால வேளைகளில் தெருவில் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருப்போம். இன்று? வாழ்க்கை எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது? நிற்க. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்று புலம்பும் கட்டுரை அல்ல இது. […]
கேள்வி
ஒரு கேள்வி.. பூமி எங்கும் குளிர் பரப்பி, வெளிச்சத்திற்காக மட்டும் சுடாத சூரியனை எழுப்பி, விடிந்திருக்கிறது இந்த நாள். தன் வாழ்வின் இறுதி நாளை வண்ணங்கள் பரப்பிக் கொண்டாடிவிட்டு, நளினமாகக் காற்றில் ஆடி, விழுதலை வெற்றியாக்கி, நிலத்தை அடைகிறது ஒரு பழுத்த இலை.. மரத்திலிருந்து நிலம் பார்த்த இலை, இப்பொழுது நிலத்தில் இருந்து மரம் பார்க்கிறது. உறவல்ல.., பிரிவு உணர்த்தும் பிரம்மாண்டம்… சருகிடம் அந்த மரம் கேட்கும் ஒரு கேள்வி அதனை மீண்டும் இலையாக்கும். அந்தக் கேள்விக்காக […]
எதிர்பாராதது…!? (பாகம் 1)
“ஒரு வீடு நல்லாயிருக்கணும்னா அந்தக் குடும்பத் தலைவன் சரியா இருக்கணும்….எல்லா விஷயத்துலயும், தான் சரியா இருக்கிறது மூலமா மற்றவர்களுக்கு அவன் ஒரு வழி காட்டியாகவும், தவறுகள் நடக்கக் கூடாதுங்கிறதைப் பாதுகாக்கிறதாகவும் அமையும். அப்பத்தான் குடும்பத்துல இருக்கிற மற்ற உறுப்பினர்களுக்கு அவன் மேல ஒரு மரியாதையும், மதிப்பும், அவரவர் செயல்கள் மேலே ஒரு பயமும், கருத்தும், கரிசனமும் இருக்கும்….” சொல்லிவிட்டு கங்காவின் முகத்தை உற்று நோக்கினார் தாமோதரன். எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள் அவள். பதில் சொன்னால் மேலும் […]
கார்மேகங்கள்
பகலிலும் குளிருதோ கதிரவனுக்கு… போர்த்திக் கொண்டான் கார்மேகப் போர்வையை! நனையாமலிருக்க எவர் பிடித்த குடை கார்மேகங்கள்! பூமிக்கு முகங் காட்டிய மேகப் பெண்கள்… வானுக்கு முகங் காட்ட திரும்பிக் கொண்டதோ! அதன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்களோ மழைத்துளிகள்! கூந்தலின் வாசந் தானோ மண் வாசனை! கதிரவ மன்னனின் மனைவிமார்களோ இம்மேகங்கள்! அவன் நோய்வாய்ப்பட்டதால் கூடி அழுகிறார்களோ? இம்மேகப்பெண்கள்! ஆடையிழக்கும் பூமிப்பெண்ணிற்குப் பச்சை சேலை வழங்கும் கருமைநிற மாயக் கண்ணன் இக்கார்மேகங்கள்! வான் காரிகையின் மார்பகங்கள் மேகங்கள்! தாய்மையடைந்த […]
அடிப் பெண்ணே…!!
மழைத் தூரலில் வானம் இலைகளின் உரசலில் மரம் உறைபனியிலும் மலரின் மணம் அடை மழையிலும் உறை பனியிலும் என்னவளின் ஆலய தரிசனம் ….!! எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!! இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில் தென்றலும் சங்கீதம் இசைக்க ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க … மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …! அருகினில் நீ … குளிர்காய்கிறேனே நான் …!! உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….! மின்னல் இடையசைவில் […]