இலக்கியம்
வீரத்துறவி சுப்பிரமணிய சிவா
Courtesy: Wikipedia.org அக்டோபர் மாதம் இந்திய சுதந்திரத்திற்கும், நாட்டின் மேம்பாட்டிற்கும் ஒரு பெரிய புண்ணிய காலம் என்றே சொல்ல வேண்டும். இந்திய நாட்டிற்காகச் சேவை புரிந்த ஒப்புயர்வற்ற பலர் உதித்த சிறந்த மாதம் இதுவென்றே தோன்றுகிறது. அண்ணல் காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் நாள் உதித்தது உலகம் அறிந்த ஒன்று. பெருந்தலைவர் என்றும், கர்ம வீரர் என்றும் போற்றப்பட்ட காமாராஜரின் நினைவு நாளும் இந்த இரண்டாம் திகதியே. இவர்களிருவர் தவிர, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பதவி வகித்து, […]
பண்டிகைகள் – அங்கேயும் இங்கேயும்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது. அதற்கேற்ப வழிபாடுகள், தெய்வங்கள், பண்டிகைகள் போன்றவை வேறுபடும். ஆனால், யோசித்துப் பார்த்தால் இந்தப் பண்டிகைகளிடையே சில ஒற்றுமைகளைக் கவனிக்கலாம். ஹாலோவீன் (Halloween) – ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வந்த இந்தப் பண்டிகை, தற்சமயம் உலகமெங்கும் பரவி வருகிறது. உலகமயமாக்கத்தால் இந்திய நகரங்களுக்கும் இது அறிமுகமாகி உள்ளது. இது குளிர்காலத்தை வரவேற்பதற்கான, இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான, குழந்தைகளிடம் பயத்தைப் போக்குவதற்கான ஒரு பண்டிகை. அக்காலத்தில் மக்கள் பழங்களை இத்தினத்தில் பரிமாறிக் கொள்வர். […]
கல்லூரி நுழைவுத் தேர்வுகள்
அமெரிக்காவில் கல்லூரி வாசலை மிதிக்கவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் தொக்கி நிற்கும் கேள்வி ‘சாட்’டா அல்லது ‘ஆக்டா’ என்பது தான். பல வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரித் தேர்வு முறைகள் அவரவர் சேரவிருக்கும் கல்லூரியைப் பொறுத்து வேறுபட்டு வந்தது. கிழக்கு, மேற்கு விரிகுடாப் பகுதிகளில் இருந்த கல்லூரிகள் சாட் தேர்வையும், மத்திய மேற்குப் பகுதியில் இருக்கும் கல்லூரிகள் ஆக்ட் தேர்வையும் ஏற்றுக் கொண்டன. ஆனால் சமீப காலங்களில் சாட் மற்றும் ஆக்ட் தேர்வு மதிப்பெண்கள் பெரும்பாலும் […]
மானிடம் கண்ட (ஏ)மாற்றம்
காட்டிலே வேட்டையாடி கண்ணில்பட்டதைத் தின்று அறத்துடன் வாழ்ந்தவன் இன்று நாகரிகம் எனும் போர்வையில் மனிதத்தை மறந்துவிட்டானே! ஆக்கத்திற்குக் கருவிகளைத் தோற்றுவித்தது போதாதென்று அழிவிற்கும் உருவாக்கி அண்டத்தை அலறவிடுகிறானே! சொந்த பந்தங்களுடன் அன்று அனுசரித்து வாழ்ந்தவன் இன்று சுற்றி நிற்கும் உறவுகளைக் கத்தரித்து நிற்கிறானே! அடுக்குமாடி வாழ்க்கையின் விளைவால் அண்டை அயலாருடன் சகவாசம் கொள்வதை அருவெறுத்து ஒதுக்குகிறானே! முப்பொழுதும் கைத்தொலைபேசியில் மூச்சுவிடாது உரையாடுபவன் அருகிலிருப்பவர்களுடன் சிறிதும் அளவளாவ விரும்புவதில்லையே! காலத்தின் கோலத்தால் […]
கர்ம வீரர்
வீணர்களால் ஜலியன் வாலாபாக்கில் விளைந்ததந்தக் கொடுமை கேட்டு வீறுகொண்டு எழுந்திட்ட வியத்தகு வீர்ர்கள் பல்லாயிரம் நாட்டினிலே! விருதுப்பட்டிச் சிற்றூரில் வித்தாயுதித்து விரைவாய்ப் போராட்டக் களம்புகுந்து விருட்சமாய் வளர்ந்து வெள்ளையனை விரட்டியடித்த அஹிம்சாவாதி கருப்புகாந்தி!! சுதந்திர இந்தியாவைக் கட்டிக்காக்க சுயநலமின்றி உழைத்திட்ட தலைவர்பலர்! சுகமாக மக்கள் வாழத்தம்மைச் சுருக்கிய ஒருசிலருள் முதன்மையானார்! அரசியல் என்றாலே பொய்யும்புரட்டும் அடாவடியும் என்றாகிய இந்நாளில் அனைவரின் நலமொன்றே நாடிவாழ்ந்த அற்புதத் தலைவர் […]
எக்குவாஃபேக்ஸ்
ஒருபுறம் ஹார்வி, எர்மா, மரியா என சூறாவளிக் காற்று, பேய்மழை, வெள்ளம் என இயற்கை அன்னை, பல மில்லியன் அமெரிக்கக் குடிகளைப் பாதித்தாள். அதே சமயத்தில் நடந்த எக்குவாஃபேக்ஸ் நிறுவனத்தில் நடந்த கணினி ஊடுருவலில், பல கோடி மக்களின் தனிப்பட்ட, வர்த்தகத் தகவல் சூறையாடப்பட்டுள்ளது. தனிநபர்களின் கடன் வாங்கும் ஆற்றலைக் கணிக்கும் நிறுவனத்தின் தகவல் சூறையாடல் வருமாண்டுகளில் பல வகையிலும் சீரழிவுகளைக் கொண்டு வரலாம் இந்தச் தகவல் கொள்ளை, இதுவரை அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட சூறாவளிகள், நில […]
எட்டாக் கனியாகுமோ மருத்துவ நலன்?
அமெரிக்காவில் ஆண்டு தோறும் மருத்துவத்துக்காக மட்டும் செலவிடப்படும் தொகை $3.2 ட்ரில்லியன். அதாவது தனி நபர் ஒருவருக்குச் சராசரியாக $10 ஆயிரம் டாலர்கள்; நாட்டின் மொத்த உற்பத்தியில் இது 18%. உலகிலேயே மருத்துவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு அமெரிக்காதான். இருப்பினும், உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) கணக்குப்படி மருத்துவ நலனைப் பொறுத்தவரையில் அமெரிக்கா 37 ஆவது இடத்தில் தான் உள்ளது. அதாவது மற்ற நாடுகளை விடவும் அதிகம் செலவழித்தும், உடல் / மருத்துவ நலனில் […]