இலக்கியம்
மஹாகணபதிம் ஆவாஹயாமி……
”ஏன்னா….. நாளைக்குச் சத்த ஆஃபீஸுக்கு லீவு போட்றேளா?…. “ கேட்ட லக்ஷ்மியைச் சற்றுக் எரிச்சலுடன் பார்த்தான் கணேஷ். “ஏன், என்னத்துக்காக லீவு போடணும்?” என்று கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு சாதாரண தொனியில் கேட்க, “நாளைக்கு கணேஷச் சதுர்த்தின்னா…. ஆத்துல பூஜை பண்ணணும், இது ஆம்பளேள் பண்ற பூஜை”…. என்று இழுக்க, “நோக்குத் தெரியாதாடி, நேக்கு இந்த பூஜை புனஸ்காரத்துலெல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்லடி.. என்ன விட்டுடேன்….” என்று கெஞ்சத் தொடங்கினான். “நான் உங்கள எப்பப்பாத்தாலுமா தொந்திரவு […]
மன்னிப்பாயா ..
நிரஞ்சனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்க முடியவில்லை. படுக்கையை ஒட்டிய மேஜை மீதிருந்த செல்ஃபோனை எடுத்தான். பளீரென ஒளிர்ந்து கண்ணைக் கூசியது. கண்களை இடுக்கிப் பார்த்ததில் மணி 3.17 am என்று காட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தான். கால்களில் துணி விலகியதைக் கூட உணராமல், குழந்தை போல் குப்புறப் படுத்து, நித்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஷர்மி. தூக்கத்திலும் முகத்தில் மெலிய புன்னகை. விலகிக் கிடந்த நைட்டியை இழுத்துவிட்டு, பக்கத்திலிருந்த போர்வையைக் கழுத்து வரையில் போர்த்தி […]
மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்
காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் என்றான் ஓர் கவிஞன் கவிதைக்குப் பொய் அழகு என்றான் இன்னொரு புலவன் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒருவர் இன்று அந்த உறவு கடல் கடந்து போய் விட்டது கணினித் தொடர்புடன் இந்தியாவின் இதயம் கிராமங்களில் என்றார் ஒரு கிழவர் அந்த இதயத்தை விட்டு நகர்ந்து வருபவர்தான் இன்று நான் காணும் தலைமுறை மனதை ஒருமிக்க மதம் என்றனர் ஆன்றோர் ஆனால், மதத்தின் பெயரால் மதம் பிடித்து […]
அறிவுள்ள காகம் !
காகம் ஒன்று பறந்து திரிந்தது
கோடை வெயில் தீயாகச் சுட்டது
தாகம் தீர்க்க அலைந்து வாடியது
காகம் குடிநீருக்காகத் தவித்தது !
குளம் குட்டையெல்லாம் சுற்றியது
களைப்பில் மரத்தில் நின்றது
எல்லாமே வறண்டு கிடந்தது
தாகம் தீர்க்கத் தண்ணீர் எங்கே ?
நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?
உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடந்தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் […]
இளைஞர்களே இனி அவசரம் வேண்டாம்..!
இன்றிருக்கும் இளைஞருக்கு ஈடில்லா அவசரம்.. இல்ல மொன்றிருப்பதை யுமறவே மறந்தனர்.! என்றும் மெல்லத் தூங்கியே எழுவர்…எழுந்தபின்.. வெல்லத்தான் நினைப்பார் எதையும் எளிதில்,! ஒருவரியில் முழுவதையும் படிப்பதிலே அவசரம்.! படித்து முடிப்பதற்குள் படுக்கச்செல்ல அவசரம்.! பருவம் வருமுன்னே பாழுங்காதலிலும் அவசரம்.! பணிசெய்யும் இடத்திலே பதவிக்கும் அவசரம்.! சிட்டாகப் பறக்க வேண்டுமெனும் எண்ணம்.. எந்நாளும் வேண்டா மெனும்நிலை வேண்டும்.! மொட்டாகும் முன்னே பூப்பூக்க நினைத்தால்.. பூவுலகில் எல்லாமே தலைகீழாய் மாறிடாதோ.! கட்டான இளைஞரின் கட்டுக்கடங்கா வேகமது.. காதல் கனிந்திருக்கும் வரைப் […]
கவித்துளி
கவித்துளி 1 இரவின் மடியில் இளைப்பாறுகையிலே இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே இதயத்தில் நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே இதழில் பழரசம் பருகிடக் காத்திருக்கவே இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!! கவித்துளி 2 […]
அனாமதேய ஆபத்து
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இணையங்களிலும், சமூகத் தளங்களிலும் காட்டுத் தீயெனப் பரவிவரும் சொல் ‘சரஹா’. இது புதிய சமூகப் பிணையப் பயன்பாட்டு மென்பொருள் (Social networking apps / Social networking software). வாட்ஸப், ட்விட்டர், ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட் போன்று பல பயன்பாட்டு மென்பொருட்கள் இருக்கும் பொழுது, இதென்ன புதுசா சரஹா? சரஹா (Sarahah) சவூதி அரேபியரான, ஜெயின் அல்-அபிதின் டாஃபிக் சரஹாவை உருவாக்கியுள்ளார். அரேபிய மொழியில் ‘சரஹா’ என்றால் வெளிப்படை, நேர்மை என்று […]