\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

ஓவியா – தி பிக் பாஸ்

ஓவியா – தி பிக் பாஸ்

சமூக வலைத்தளங்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தித் தளங்கள் தினமும் இது குறித்த செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் குவிகின்றன. ஒப்பீட்டுக் கவிதை பரவலாகப் பரவுகிறது. மீம்ஸ் கொட்டுகின்றன. எல்லாம் ஸ்கிரிப்ட் தான் என்று சொல்லிக் கொண்டே, தவறாமல் பார்க்கிறார்கள். டிஆர்பி எகிறுகிறது. தியேட்டரில் கூட்டம் குறைகிறது. போட்டி சேனல்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவ்வேளையில் தினமும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், பிக் பாஸும் அதன் வெற்றியும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. டிவியில் இருந்து சிவகார்த்திகேயனைச் சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, […]

Continue Reading »

கண்ணம்மாவின் பாரதி

கண்ணம்மாவின் பாரதி

மாலைச் சூரியன் மஞ்சளாய் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சிங்காரச் சென்னையில் தினந்தோறும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கிட்டத்தட்ட அதே மணித்துளியில்தான்… மாலை 5.55 அல்லது ஓரிரு நிமிடங்கள் முன் பின்னாக இருக்கலாம். அந்த நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், சூரியனும் நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுப்பதற்காக மேகங்களுக்குப் பின்னே ஒளிந்து, வானத்தின் அடிப்பகுதி நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது மஞ்சள் கிரணங்கள், மெரினா கடற்கரையின் மணலையும் மஞ்சள் தூள் போலக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த மஞ்சள் கிரணங்களுக்கு […]

Continue Reading »

செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பைக் குறைக்குமா?

செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பைக் குறைக்குமா?

சென்ற சில வருடங்களாகக் கணனித் தொழில் நுட்பம் அதன் வளர்ச்சியில் முன்னணியை அடைந்துள்ளமை நாம் அறிந்த விடயம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் கணனிகள் தாமாகத் தகவல் ஆராயும் வல்லமையில் பல மடங்குகள் வளர்ந்துள்ளன என்று ஒப்பீட்டளவில் நாம் அவதானிக்கலாம். இந்த வளர்ச்சி கைத்தொலைபேசிக் கமெரா படமெடுப்பதற்கு நமக்கு உபயோகமாகும் போது யாவருக்கும் ஆட்சேபணை இல்லை. ஆனால் மனிதன் பகுத்து அறியும், மிகுந்த சம்பளத் தொழில் முறைகளாகிய மனித உரையாடல்களை வர்த்தக, நீதிமன்ற […]

Continue Reading »

பிக் பாஸ் சர்ச்சைகள்

பிக் பாஸ் சர்ச்சைகள்

‘பிக் பாஸ்’. தமிழ் தொலைக்காட்சியை, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை, உலகில் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழரை ஆட்டி வைக்கும் சொல்லாகி விட்டது பிக் பாஸ். யூ டுயூபில் கிளிக் செய்யும் லிங்க்கில் எல்லாம் சுத்தமாகச் சவரஞ்செய்து கண்ணாடி போட்ட கமல் மேதாவித்தனம் காட்டி முறைக்கிறார். ஜூலியானா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சினேகன், காயத்ரி, ஓவியா எனப் பலரது பெயரைக் கேட்டு, படித்துக் காதுகளும், கண்களும் சிவந்து விட்டன. ஜி.எஸ்.டி. புண்ணியத்தால் புதுத் தமிழ்ப்படம் ஏதும் வராமல் […]

Continue Reading »

கவிதையாய் நீ ….!!

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2017 0 Comments
கவிதையாய் நீ ….!!

சேமித்த காதலின் சிதறல்களாய் நீ …. கண்ணீர்க் குவளைகளின் கதறல்களாய் நீ …. எண்ண ஓட்டத்தின் சிறகுகளாய் நீ …. நினைவு அலைகளின் சின்னமாய் நீ …. ஆசைக் கடலின் ஓடமாய் நீ … கனவு ஆலையின் உறைவிடமாய் நீ….. கற்பனை ஊற்றின் பிம்பமாய் நீ ….. என்றுமே எந்தன் காதலாய் நீ ….!! – உமையாள்

Continue Reading »

நாங்கெல்லாம் அப்பவே அப்படி …

நாங்கெல்லாம் அப்பவே அப்படி …

“ஏங்க, வித்யா ஹஸ்பெண்ட் டெபுடேஷன்ல சிகாகோ போறாராம். அவர் கிட்ட ‘திவான் அவென்யுலேர்ந்து’ ரெண்டு கிலோ உளுந்தும், கார அரிசியும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அவரா சொமந்துகிட்டு வரப் போறார்.. கார் தானே சொமக்கப்போது”.     “சொன்ன ஒடனே திரும்பிப் பாக்காதீங்கோ.. பின்னாடி ப்ளு கலர் டி-ஷர்ட் போட்டுண்டு வராரே .. பாக்க நம்மவா மாதிரி தெரியறது .. பேச்சுக் கொடுத்துப் பாருங்கோ.” “அவன் ‘Straight from Bangladesh’ ன்னு டி-ஷர்ட் போட்டுருக்கானேடி” “இருந்துட்டு போறது […]

Continue Reading »

ஒரே ஒரு சந்திரன் ..

ஒரே ஒரு சந்திரன் ..

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத,  ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி  பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் […]

Continue Reading »

மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு Minneapolis Convention Center

மினியாப்பொலிஸ் மாநாட்டு அரங்கு Minneapolis Convention Center

மாநில விருந்தாளிகளையும், உள்ளூரவரையும் பல கண்காட்சிகளுக்கும், கலைக்கூடங்களுக்கும், மாநாடுகளுக்கும் வரவேற்கிறது மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபம். மினியாப்பொலிஸ் நகரமும் இதன் அரங்குகளும் மற்ற பெரும் நகரங்கள் போன்றல்லாது, வருவோர் இலகு பாவனை கருதித் திட்டமிட்டு அமைக்கப்பட்டது.   மினியாப்பொலிஸ் நகரத்தின் வர்த்தக மையம் நிக்கலெட் மால் (Nicollet Mall) ஆகும். இந்த மாலிற்கும் மினியாப்பொலிஸ் இசையரங்கிற்கும் (Orchestra Hall) அருகே அமைந்துள்ள அரங்கே மினியாப்பொலிஸ் மாநாட்டு மண்டபமாகும்.     முகவரி 1301 2nd Ave S, Minneapolis, […]

Continue Reading »

சிரத்தை

Filed in இலக்கியம், கதை by on June 26, 2017 0 Comments
சிரத்தை

”ஆச்சு.. இன்னையோட சரியா ஏழு வருஷம் முடிஞ்சுது…. இப்போதான் நடந்ததுபோல இருக்கு…” படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே நினைவு கூர்ந்தான் கணேஷ்… “ஆமாம்… நேக்கும் அதே நெனப்புத்தான்…” அவன் முழுதாக விளக்கியிருக்காவிடினும், எதைப்பற்றிச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட லக்‌ஷ்மி, அவனுக்கு விடையளித்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் அருகருகே அமர்ந்துகொண்டு ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்த அவர்களின் மௌனத்தைக் கலைத்தது அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்து படுக்கையில் ஏறிக் குதித்த சிறியவளின் ஆர்ப்பாட்டம். பெற்றோர் இருவரும் பேசாமல் […]

Continue Reading »

மோகத்தைக் கொன்றுவிடு !!

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2017 0 Comments
மோகத்தைக் கொன்றுவிடு !!

ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?

காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?

Continue Reading »

ad banner
Bottom Sml Ad