இலக்கியம்
தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]
தப்புத் தாளங்கள்
”அம்மா, சுரேஷ் ரொம்ப நல்லவர்மா…. நன்னா பழகுவார், மரியாதையா நடந்துப்பார், எல்லாரண்டயும் பாசத்தோட இருப்பார்… என்ன, ஒரு நிரந்தரமான வேலை கெடையாது, சம்பளம் கெடையாது, மத்தபடி ஒரு குறையுமில்ல… நம்ம ஜாதி இல்ல… அதுனால என்ன?”…. சாருலதா தன் அம்மாவிடம் தனது காதலனைக் குறித்து வர்ணித்துக் கொண்டிருந்தாள். “நீ சொல்றது நேக்கு நன்னாப் புரியர்துடி… வேலை பாக்காட்டா என்ன, பொம்மணாட்டிய வச்சு நன்னா குடும்பம் நடத்தினாக்காப் போறாதா? …. ஜாதி கீதியெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறா… […]
வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)
இந்த ஆண்டு 2017 இல் மார்ச் 20ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). ஏன் அனைத்து நாட்களிலும் இரவும், […]
சர்வதேச மகளிர் தினம்
மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம். ‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் […]
வினா வினா ஒரே வினா
இட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், […]
நிலவும் வசப்படும்
ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ! ……. ……… அடி கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…? உனது புன்னகை போதுமடி ! ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர் ரகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலைப் பளு […]
ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்
அரசியல்வாதிகள் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் காலரைத் தூக்கி விட வைப்பது இஸ்ரோ (ISRO) வின் வழக்கம். ஃபிப்ரவரி 15ஆம் தேதி அன்றும் இந்தியர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இஸ்ரோவின் இந்திய விஞ்ஞானிகள். அன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 9.28 க்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய பிஎஸ்எல்வி விண்கலம், அடுத்த அரை மணி நேரத்திற்குள், ஏற்றிச் சென்ற 104 செயற்கைக்கோள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் […]
எனக்கு ஒரு மகன் பிறந்தான்
நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூடப் பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் […]
அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்
2017 இல் வந்திருக்கும் அமெரிக்கத் தலைமைத்துவ மாற்றம் சனவரி 20 ஆம் திகதியிலிருந்து பல்வேறு வகை மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளது. புதிய அமெரிக்க சனாதிபதி தமது வாக்காளர்களுக்குக் கூறியதை உடன் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார். இவற்றில் பல அமெரிக்க நுகர்வோர் மற்றும் அவர் அன்றாட வாழ்க்கை போன்றவற்றில் அசௌகரியங்களைத் தர வாய்ப்புக்கள் உண்டு. புதிய அமெரிக்கத் தலைமைத்துவம் பொதுவான வர்த்தக உலக மயமாக்குதல் அமெரிக்கரின் வயிற்றுப் பிழைப்பிற்குச் சாதகமானதல்ல என்றும் இதனால் பல குடிமக்கள் சென்ற பல தசாப்தங்களாகப் […]
இளவெயினிற் காலம்
சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே
காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே