இலக்கியம்
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 10
(பகுதி 9) மாதக்கணக்கில் திரும்பிய பக்கமெலாம் பரபரப்பான விவாதங்களும், சர்ச்சைகளும், அறிக்கைகளும், திருப்பங்களும் கொண்டிருந்த அதிபர் தேர்தல் இன்னும் பத்து நாட்களுக்குள் நடைபெறவுள்ளது. பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதிகள் இருப்பதால் லட்சக்கணக்கானோர் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். (மினசோட்டா, மினியாபோலிஸ் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இவ்வசதியைப் பயன்படுத்த விரும்பினால், https://vote.minneapolismn.gov/www/groups/public/@clerk/documents/webcontent/wcmsp-185726.pdf என்ற சுட்டியில் விவரங்கள் அறியலாம்). இருந்தாலும், கடந்த சில நாட்களில் நடைபெற்ற விஷயங்கள், நாம் சரியான முடிவைத் தான் எடுத்தோமா என்ற சந்தேகத்தை இவ்வாக்களர்களுக்கு எழுப்பக் கூடும். […]
வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள்
வட அமெரிக்காவில் வாழும் நாம் அனைவரும் வேளாவேளைக்கு மளிகைக்கடை, காய்கறிக்கடை போய் வருகினும் நாம் வாங்கும் நான்கு காய்கறி பொட்டலங்களில், பைகளில் ஒன்றை வழக்கமாக குப்பையில் எறிந்து வருகிறோம் என்றால் நம்புவீர்களா? மேலும் நாம் வருடத்தின் பண்டிகை காலங்களை அனுகுகிறோம். எனவே நாம் பல்வேறு கொண்டாட்டங்களையும் கோயில், தேவாலயங்கள், மண்டபங்கள், உணவகங்கள், வீடுகளிலும் விருந்தாளிகளை வரவேற்று களிப்புடன் விருந்துணவில் பங்குபற்றிக் கொள்வோம். எனவே சூழல் – சுகாதாரம் பேணுவதையும், நடைமுறை எரிபொருள் உற்பத்திச் செலவுகளையும் எவ்வாறு பொறுப்பறிவுடன் […]
கணனிக் கணிப்புக்குக் கொத்தடிமையாலாகாது
இன்று கணனித் துறையில் கற்சிலைக்கும் கற்பூர வாசனையறியாத கழுதைக்கும் கதர் வேட்டி கட்டியது போல ஏந்திரக் கற்றல் (அனுமானிப்புக் கற்றல்) Machine Learning எனப்படும் பல்லாண்டு கால அனுமானிப்பு புதிய பொலிவைப் பெற்றுள்ளது. சேவை வர்த்தகத்தில் புதிய மென்பொருள் உருவாக்குதலிலும், புதிய வர்த்தக, சூழல் புதிர்களை புதிய – புதிய அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புக்கள் மூலம் தீர்க்காமல் வழித் தேங்காயை எடுத்து தெருச்சாமிக்கு அடிக்கும் பலரையே வர்த்தகக் கணனித் துறையில் காணக்கூடியக் கூடியதாகவுள்ளது. ஆடம்பர உடை உடுத்தலில் […]
காகிதக் கப்பல்கள் !
குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !
காணாத அழகு
அவளின் உதட்டுச் சிவப்பைக் கண்டிருந்தால்
இளங்கோ சிலப்பதிகாரம் எழுதாமல்
சிவப்பதிகாரம் எழுதியிருப்பாரோ ?
அவளின் குரலைக் கேட்டிருந்தால்
வள்ளுவன் குறளை எழுத மறந்து
குரலை ஆராய்ந்து எழுதியிருப்பாரோ?
மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?
பொறுப்புத் துறப்பு – இது தனிப்பட்ட, சொந்த அனுபவம் சார்ந்து எழுதபட்டது. ஆளாளுக்கு வேறுபடலாம். ஓட்டுனர் உரிமம் வாங்க, கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. அது ஓரளவுக்குச் சுலபம். வாகனத்துறை தேர்வாளரைத் திருப்திபடுத்துமளவுக்கு, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் சிரமம். தேர்வாளர் மனதிற்குள் வைத்திருக்கும் அளவுகோல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஆளாளுக்கு மாறுபடும். அது புரிபட்டு விட்டால், உங்களுக்கான லைசன்ஸ் தயார். மேலோட்டமாகச் சொல்லுவது என்றால், கார் லைசன்ஸ் என்னும் மாயக் கிளியை […]
மனிதத் தத்துவம்
மனிதனே…
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்….
இருப்பது பொய்
போவது மெய்
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்….
ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை
பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் தம்பி சஞ்சித் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தப் பத்து வருட காலத்தில், பல ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையிலே, ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போன்ற ஒரு தம்பி கிடைத்தது தவறு என்று எண்ணியதில்லை, இனிமேலும் எண்ணப்போவதில்லை என்பது உறுதி. அன்பான, அறிவான, பாசம் மிகுந்த அற்புதக் குழந்தை என் தம்பி, வாழ்க்கையில் ஒரு நாள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. […]
காதல் பிசாசே ..
ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY
இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை ஆன காந்தியின் 147 ஆவது பிறந்த நாளை “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) முதன் முறையாக மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டா இந்துக் கோவில்இரண்டும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா மாநில அமைப்பு சார்பில் மாநில உறுப்பினர்கள் […]