இலக்கியம்
அன்பின் பெருமை
அன்பு என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல அவசியமானது. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது “ என்பது வள்ளுவர் வாக்கு. இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா. நமது ஆற்றல், மன வலிமை, உடல் வலிமை, அறிவாக்கம் இவற்றுக்கு உறுதுணையாக நிற்பது அன்பே. நமது வாழ்க்கை ஒரு கணித மேடை போன்றது. நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் கூட்ட வேண்டும் (+) பகைவரை விலக்க வேண்டும் (-) […]
தீபாவளி ஃப்ளாஷ்பேக்
கொளுத்திப் போட்ட பட்டாசு கதைகள் பலவும் சொல்லிடுது….. குழந்தைப் பருவ தினங்களிலே குதூகலம் நிறைந்த தீபாவளி…. மாதம் இரண்டு முன்னமேயே மாறாது மலர்ந்திடும் கனவதுவே…. முழுதாய் நீளும் கால்சட்டையோ முன்னம் போலே அரைக்காலோ தந்தை சற்று மனம்வைத்து தனக்குப் பிடித்ததைத் தருவாரோ? விரும்பி வாங்கிய துணிமணியை விரைவாய் டெய்லரும் தைப்பாரோ… தினமும் அவரின் கடைசென்று திரும்பி வந்தோம் வெறுங்கையாய் !! முந்தைய தினத்தின் நள்ளிரவில் முடித்தே கொடுக்க, மகிழ்ந்தோமே !! தெருவில் முதலாய் நம்வீட்டில் தெறிக்க வேண்டும் […]
கவித்துளிகள்
இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]
க்ளோத்திங் ஆப்ஷனல்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது…. எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 9 கடந்த சில வாரங்களாக, ஏணிகளும், பாம்புகளும் கொண்ட பரமபத விளையாட்டைப் போன்று அமைந்திருந்தது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களின் நிலை. இந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதியில், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாகவும், இந்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடும் என்றும் முடித்திருந்தோம். செப்டம்பர் மாத மத்தியில் நிலைமை மாறி, டானல்ட் ட்ரம்ப் வெகுவாக முன்னேறி, இரண்டு புள்ளிகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியிருந்தார். பின்னர் நடந்தேறிய […]
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு நோபல் இலக்கிய விருது மினசோட்டா மாநிலத்தின் மைந்தரான ஆங்கில இசைக் கவி திரு. பாப் டிலன் அவர்கட்கு, சுவீடிஷ் அக்காடமி, 2016ம் ஆண்டு அகில உலகப் புகழ் வாய்ந்த நோபல் இலக்கிய விருதினை அக்டோபர் மாதம் 13ம் திகதி 2016 வழங்கியுள்ளது. பாப் டிலனிற்கு வயது 75. நோபல் இலக்கிய விருதினை வாங்கிய இரண்டாவது இசைக் கவிஞர் இவரே. இதன் முன்னர் 1993ம் ஆண்டு இலக்கியப் பரிசினைப் பெற்றவர் திரு ரோனி மோரிசன். […]
தரவுத் திருட்டுகள்
பழங்காலங்களில் ஒரு பொருளுக்கு ஈடாக இன்னொரு பொருளைப் பரிமாறிக் கொள்ளும் ‘பண்டம் மாற்றும்’ முறை வழக்கத்தில் இருந்தது. தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் தேவையான அனைத்தையும் தானே தயாரிக்க முடியாமல் போன பொழுது, மனிதனுக்கு அடுத்தவரிடமிருந்து பொருளை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது தான் தயாரிக்கக் கூடிய அல்லது தனக்குக் கிடைக்கக் கூடிய பொருளை அடுத்தவரிடம் கொடுத்து, அவரிடமிருந்து தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டான். பிற்காலங்களில் பரிமாறப்படும் பொருட்களின் தேவை மற்றும் உற்பத்தி இப்பரிமாற்ற முறைக்கு ஒரு […]
புத்தகம் சேகரிப்பது எப்படி?
நவீனம் என்ற ரீதியில் பல மின்பலகைகள் (e-readers) தற்போது புழக்கத்தில் வந்திருப்பினும், கையில் புத்தக அட்டை இதழ்களை வருடி எங்காவது ஒரு மூலையில் இளைப்பாறி வாசிப்பதோர் தனிச்சுகம். பண்டைய தமிழ் வீடுகளில் மண் திண்ணையில் புல், ஓலைப் பாய், மர வாங்கினால் ஆன ஊஞ்சல் மஞ்சம், மினசோட்டா மாநிலத்தில் கோடைகாலத்தில் வலையிலான தூங்கு மஞ்சம், அல்லது குளிர்காலத்தில் மெத்தை தைத்த ஆசனம் இவற்றிலெல்லாம் தரித்து வாசிப்பதோ மற்றொரு சுகம். இந்த உடல் உள இளைப்பாறலைத்தரும் அச்சுக் கோர்வைப் […]
மனித வாழ்வின் தத்துவம்
“அன்னை” என்பதும் மூன்றெழுத்து
“தந்தை” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்களுக்கு பிறக்கும் “மகன்” அல்லது
“மகள்” என்பதும் மூன்றெழுத்து
ஆவர்கள் பேசும் மொழி
“மழலை” என்பதும் மூன்றெழுத்து பெற்றோர்
மானிட வாழ்வின் நெறி
அன்பை வளர்க்க வேண்டும்
ஆணவத்தை ஒழிக்க வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
ரூடவ்கைகுணம் வளர வேண்டும்
உண்மை பேச வேண்டும்