இலக்கியம்
அழகே உன்னை ஆராதிக்கிறேன்
சோழர் கல்வெட்டில்
உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்…..
பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
சங்கம் வளர்த்த மதுரையை
தீக்கிரையாகாமல் காத்திருக்கலாம் ….
பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்
பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் […]
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?
தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]
நவராத்திரி
பாட்டி கொடுத்த முப்பெரும் தேவி செட், போன முறை திருச்சி போனபோது வாங்கின கிருஷ்ணர் உறியடி செட், மைசூர் சாலையில் அத்தை வாங்கித் தந்த அஷ்டலக்ஷ்மி செட். இப்படி ஒவ்வொண்ணும் பரணிலிருந்து இறங்க ,இறங்க நவராத்திரி களை கட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் காலிறுதித் தேர்வுக்கு இறுதியில் வரும் அந்தப் பத்து நாட்கள் நவராத்திரி விடுமுறை மறக்க முடியாத ஒன்று. ஒரு ஓரமாக டப்பாக்கள் எல்லாம் அடுக்கி, இந்த முறை வித்தியாசமான முறையில் படி செய்ய முயற்சி […]
முகமறியாக் காதல்
முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!
மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற முப்பத்தியொன்றாம் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்கத் தேர்தல் களத்தின் உஷ்ணத்தைச் சற்றுக் குறைத்தது அல்லது ஊடகக் கண்களின் பார்வைக் கூர்மையை மழுங்கடித்தது எனலாம். இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டு, இரண்டு வேட்பாளர்களும் அனல் பறக்க மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் மாதம், அரசியல் களத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகப் பரபரப்பின்றி கடந்து சென்றது. இருப்பினும் அவ்வப்போது சில அதிர்வலைகள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமலோ, அல்லது அமெரிக்கா அதிகப் போட்டிகளில் […]
ஏண்டியம்மா எங்க போற?
வயக்காட்டில உழைச்சுக் களைச்ச
மாமன் மனசை விரசாப் போயி
முந்தானையில் அள்ளி முடிய
முந்திட்டுப் போறியோ….
ஏக்கங்களை நெஞ்சில் வச்சு
எட்டி நின்னு பார்த்த பொண்ணு
மாமன் கையில் தாலி வாங்க
துள்ளிக் குதிச்சு போறியோ…
கவிதைக் கண்கள் !
உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !
என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !
எங்கெங்கும் ஏரி…
நியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!! ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது – “இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?”. நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு […]
ஆட்டிஸம் – பகுதி 9
(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]