இலக்கியம்
பாரிய இழப்பின் பின்னர் பிள்ளைகள் கதி (Survival)?
வடஅமெரிக்காவில் வாழும் வங்கக் கடலோரப் பிரதேசங்களில் பிறந்த விடமாகக் கொண்ட எங்களில் பலரும் கோடை விடுமுறை காலங்களில் இந்தியா,இலங்கை,மலேசியாவென்று சென்று வருகிறோம். அவ்வப்போது பொருளாதாரத் தாழ்மையுடன் அவ்விடம் வீதியோரம் பிச்சையெடுத்தும், தண்ணீர்ப் பாக்கெட், சிற்றுண்டி விற்றும், பசியினால் சிறுதிருட்டுக்களில் ஈடுபட்டும், குப்பை வாளிகளிலும் குப்பை மேடுகளிலும் தேடியெடுத்து உண்டும், உயிர்வாழும் பல வீதிப் பிள்ளைகளையும் கண்டிருப்போம். அபாயங்களில் கடுமையாக அவஸ்தைப்படுபவர் பிள்ளைகளே இந்த அருகதைச் சிறுவர், சிறுமிகளில் பலரும் விபச்சாரத்திற்கும், அடிமைக் கூலி வேலைகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் […]
மழைப்போல நான்
ஈரம் சுமந்த
மேகத்தாய் ஈன்றெடுக்கிறாள்
ஒரு நொடியில்
பல கோடி
நீர்த் திவலைகளை..
அதை
மழை என்றீர்கள்.
வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !
விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு, தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ ஐயா! வணக்கம். என் பெயர் தூங்கத் தேவர். எனத் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை ஐயா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னீங்களாம்” என்றபடி நின்றார். தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் […]
அம்மா அப்பா’ விளையாட்டல்ல
‘அம்மா அப்பா’ விளையாட்டல்ல! எதிர் வீட்டுப் பெண் நின்றிருந்தார். “எங்க வீட்ல வேலை செய்றவங்க நின்னுட்டாங்க. உங்க வீட்ல செய்றவங்க வருவாங்களான்னு கேக்க வந்தேன்.” இன்று கிளாரா அக்கா விடுமுறை. சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை நானே தேய்ப்பதற்கு நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சொன்னேன். “நம்பர் இருக்கா…ஃபோன் பண்றீங்களா? எனக்கு இப்போவே யாராவது வந்தா தேவலை. ரென்டு நாளாச்சு எங்க வீட்ல வேலை செய்றவங்க வந்து. ரொம்பக் கஷ்டமா டயர்டா இருக்கு.” அழுது விடுவாள் போலிருந்தது. நான்கு […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 4
ஏப்ரல் மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில பிரைமரி, காகஸ் நடந்து முடிந்து விட்ட நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் இன்னும் குழப்பங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் சார்பிலான அதிபர் வேட்பாளரை அடையாளம் காண்பதில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் விடை தெரியவில்லை. ஏப்ரல் ஐந்தாம் தேதி விஸ்கான்சின் மாநில பிரைமரியில், டெட் க்ரூஸ் வென்று 36 பிரதிநிதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். இதுவரையில் அக்கட்சியில் முன்னிலை வகிக்கும் டானல்ட் ட்ரம்ப், 6 பிரதிநிதிகளின் நம்பிக்கையையே பெற முடிந்தது. […]
அன்பை நேசியுங்கள் !
அன்பு
எல்லா பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக் கூட.
அன்பு
எல்லா கடிதங்களையும்
படித்து ரசிக்கிறது
சோகமாக இருந்தால் கூட.
அன்னைக்கு ஓர் அன்னையாக !
மழை நீரில் நான் நனைந்தால் ஜலதோஷம் வந்துவிடும் எனத் தன் முந்தானையால் தலை துவட்டினாயே… தாயே ! தோஷம் உனக்கு வராதா? கையளவு சோறு பானையில் இருக்க ஒருகவளம் தண்ணீரை தான் முழுங்கி – உன் பசியை மறந்து என் பசி போக்கினாயே … தாயே ! பசி உனக்கு வராதா? காய்ச்சலில் இரவெல்லாம் நான்பிதற்ற காத்துக் கருப்பு அண்டியதோ எனத் தன் குலதெய்வதிற்கு காசு முடிந்தவளே …. தாயே ! காய்ச்சல் உனக்கு வராதா? கல்தடுக்கி […]
ஆட்டிஸம் – பகுதி 5
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, தெரபி (therapy) முறையில் தொடர்பயிற்சி செய்வதே ஆட்டிஸத்தைக் கட்டுப்படுத்தும் ஒரே முறையாகும். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இவை போன்ற தெரபிகளும், அவற்றைக் கற்றுத்தரும் தெரபிஸ்ட்டுகளின் அறிவுரைகள் மட்டுமே வழி. பெற்றோர், தெரபிஸ்ட்டுடன் கைகோர்த்து, ஒவ்வொரு தினமும் எதிர்கொள்ளும் புதுவிதமான சோதனைகளைத் தொடர்ந்து சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்தத் தெரபிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு செய்வது என்பது குறித்தும், முக்கியமாக அவை குறித்துப் பெற்றோருக்கு இருக்க வேண்டிய புரிதல்கள் குறித்தும் […]
இன்னும் எத்தனை அமுதாக்கள்!!!
தினமும் பயணிக்கும் அதே சாலையாக இருந்தாலும் என்னுடைய ஒவ்வொரு நாளும் இந்தச் சாலையின் வழியாகப் பார்க்கப்படும் போது புதிதாக தான் காட்சியளிக்கிறது. எட்டு வருடங்களாக இதே சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகம் தான் என் பணியிடம். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று அல்லது நான்கு விவாகரத்து வழக்குகள். இவழக்குகளில் குடும்ப நல ஆலோசகராகப் பணியாற்றுவதில் இருக்கும் உண்மையான சிரமம் அவ்வழக்குக்காக வரும் பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்கும் போதும், அவர்களின் நியாயமான எந்த முடிவிற்கும் துணை […]
எதிர்பாராத முடிவு !
விநாயகர் படத்தின் அருகில், மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்தேன். திறந்தவள் திகைத்தேன். முன் பின் தெரியாத பெண் ஒருத்தி , என் எதிரே நின்று கொண்டிருந்தாள். ‘என்ன ?’ என்பது போல் அவளைப் பார்த்தேன். அவள் வெகு அலட்சியமாக “ உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “ என்று சம்மந்தமில்லாமல் என்னைப் பார்த்துக் கேட்டாள். நான் அவளைப் பார்த்து “ […]