இலக்கியம்
உலகத் தாய்மொழி தினம் – 2016
அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் […]
கவித்துளிகள்
பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !
வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !
தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி
தனிமை தரும் சமூகவலயமா?
சமூகவலயம் தனிமை தருமா? இந்தக் கட்டுரையின் தலைப்பே சரியாகப் படவில்லையே என்று நீங்கள் எண்ணலாம். வாருங்கள் இதைப் பற்றி மேற்கொண்டு அலசுவோம். சுமார் பத்து வருடங்களின் முன்னர் நியுயார்க் நகரத்திற்கு அருகாமையில் கனக்டிக்கட் மாநிலத்தின் கீரீன்விச் எனப்படும் ஒரு நகரத்தில் நடந்த சம்பவம். கீரீன்விச் அமெரிக்காவிலேயே மிகவும் வசதி மிகுந்த மத்திய அத்திலாந்திக் சமுத்திரக் கடற்கரையோர நகர் எனவும் கூறிக்கொள்ளலாம். இந்த நகரில் ஒரு சம்பவம் யாவரையும் பேச வைத்தது. பாரிய சொத்துடைய செல்வந்தப் பெண்மணி ஒருவர் […]
கண்டுபிடி மிஸ்டர் ஸ்லையை!!
ஊடக அறம் என்ற வார்த்தை பிரயோகம், சமீப காலங்களில் அடிக்கடி நம்மிடம் அடிபடுகிறது. ஊடக நிறுவனங்களின் வியாபார வெறியினால் பலமாக அது மிதிபடுவதினால் ஏற்படும் சத்தம் காரணமாக இருக்கக்கூடும். தொலைகாட்சிகள், டிஆர்பிக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைக் கோர்த்துவிட்டு, தூண்டிவிட்டு, குழாயடிச் சண்டையை ஏற்படுத்துகிறார்கள் என்றால், பத்திரிக்கைகள் சர்குலேஷனைக் கூட்ட கருத்துக் கணிப்பு, புலனாய்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்கிறார்கள். சர்குலேஷனைக் கூட்ட, பத்திரிக்கைகள் கடைபிடிக்கும் பல யுக்திகளைக் கண்டிருக்கிறோம். உற்பத்திச் செலவுக்கு கீழே பத்திரிக்கையை விற்று, வாசகர் […]
மனிதனாக இரு !
சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?
மறதிக்குப் பின் வருவதே மரணம்
படுத்த படுக்கையாகி
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…
தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
வேலையில்லாப் பட்டதாரி !
நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !
என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றது !
ஆணவம் கொ(ல்)ள்வோம்
உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !
காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !