இலக்கியம்
புத்தக மூட்டை
” அம்மா வலிக்குதே …”
பச்சிளம் குழந்தையாக இருந்தேன்
பார்த்துப் பார்த்து வளர்த்தாய்
மூன்று வயது ஆனேன் என்
முதுகில் சுமையை ஏற்றி வைத்தாய்
பள்ளிப் பாடங்கள், புத்தகங்கள் என்றாய்
பளுவை ஏற்றிக்கொண்டே போனாய்
வலிக்குதே அம்மா என்றேன் வழியெல்லாம்
பழகி விடு என்று ஏற்றாய் என் பழியெல்லாம்
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 1
அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா.. “அந்த மூஞ்சியைப் பாரு .. யாராவது அதுக்கு ஓட்டுப் போடுவாங்களா? இந்த மூஞ்சிக்கு அடுத்த ஜனாதிபதி ஆகத் தகுதி இருக்கா?” “மெய்யாலுமே என் சொந்த மயிரு தான் .. பாக்கறியா.. பாக்கறியா .. தொட்டு வேணாப் பாக்கறியா?” ‘சும்மா அங்கனக்குள்ளயே எதுக்கு நோண்டிக்கிட்டு இருக்கிற? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ இவையெல்லாம் கவுண்டமணியோ, வடிவேலுவோ பேசிய திரைப்பட வசனங்கள் அல்ல. வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவில் 2016ம் ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் […]
பாலிவுட் டான்ஸ் குழுவினருடன்….
(Click here for English Version) டிசம்பர் 12, 2015; மெல்லிய பனிச்சாரல் கலந்த இதமான மாலைப் பொழுதில் நமது பனிப்பூக்கள் குழுவினர் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவினருடன் கலந்துரையாட டேபஸ்ட்ரீ ஃபோல்க் டான்ஸ் மையத்திற்கு (Tapestry Folk Dance Center) சென்றிருந்தோம். உள்ளே நுழையும் ஒவ்வொருவரின் முகத்திலும் சுறுசுறுப்புப் பொங்கியது. குழுவின் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியைக் காண்கையில் இன்று 2015ன் கடைசி வகுப்பு என நம்ப முடியவில்லை. சில அறிவிப்புகள், நடன ஆசிரியர் அறிமுகம், தயார்ப் […]
ஆதாம் ஏவாள்
அந்தகாரச் சூனியத்தில்
அச்சுக் கொண்ட இரண்டாய்
நாம்…
வழியெங்கும் திசை
மாறும் பாதம்
நமக்கானது…
மழலை
நம்முகம் பார்த்து
நயமுடன் நகைக்கையில்
நானிலம் முழுவதும்
நம்வசம் வந்ததன்றோ !
பூமுகம் மலர்ந்து
புன்னகை புரிகையில்
புவிதனில் நம்வாழ்வின்
புளகாங்கிதம் விளங்குதன்றோ !
ஆட்டிஸம் – பகுதி 3
(ஆட்டிஸம் – பகுதி 2) இந்தப் பகுதியில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களைப்பற்றி பார்க்கலாம். அவர்களுக்குப் பொருத்தமான உணவு வகைகள் பயோமெடிக்கல் சிகிச்சை முறை பொருத்தமான உணவு வகைகள் ஆட்டிஸம் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த உணவு என்னவென்பதில் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட GFCF (Gluten Free Casein Free) வகை உணவுகளையே எங்களது மகனுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். முதலில் […]
“குத்துக்கல்…!”
அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 4
(பகுதி 3) எம்.எஸ்.வி. என்ற மாமேதை படைத்த இசைச் சாம்ராஜ்யத்தில் இறைந்து கிடக்கும் நவரத்தினங்கள் தான் எத்தனை? மேலாகப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் புலப்படாத பல நுணுக்கங்கள் கவனத்துடன் அணுகினால் ஆச்சரியமேற்படுத்துகின்றன. தோண்டத் தோண்ட பொங்கி வரும் இசை ஊற்றில் தான் எத்தனை பாவங்கள், ராகங்கள். உணர்வுப்பூர்வமாக காதல், சோகம், தத்துவம், மகிழ்ச்சி, வீரம், ஆற்றாமை என்று மட்டுமே மேலோட்டமாக அவற்றைப் பிரித்துவிட இயலாது. ஒரு சில கடடுரைகளில் அவரது இசைச் சிறப்புகளை விவரித்துவிடலாம் என்று […]
மழைத் துளிகள்
மழையின் கேள்வி !!!
விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!
மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?
எசப்பாட்டு – ஆண்களின் அவலம்
தேர்வு பலர் எழுதினாலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பது தேன் போன்ற மகளிரே தேடிப் பார்த்துப் புடிச்சாலும் தேசம் முழுதும் சலிச்சாலும் தேருவது ஆண் மகனின் தேக்க நிலை எங்குமே ! தேங்கும் நிலை தவிர்த்து தேம்பி அழுவது தொலைத்து தேர்ச்சி பெறுவது எந்நாளோ? வெ/ மதுசூதனன்.