இலக்கியம்
மினசோட்டாவின் கதை
ஏறத்தாழ ஒரு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் இருந்து மினசோட்டாவின் கதையை ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் பூகோளத்தின் கால் பகுதியைக் கவர்ந்து காணப்பட்டது. இதுவே ஆழ்ந்த உறைபனியின் வடதுருவம் மாத்திரமல்ல அதன் வட நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளும் மூடப்பட்டிருந்தது. இக்காலம் பனியுகம் எனப்படும். அக்காலத்தில் வடதுருவமானது பலதட்டுப் உறை பனிப்பாறைகளினால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் பனியுருகி நீர்த்தேக்கங்களும்,காடுகளும், விலங்குகளும் செழித்தன. ஆயினும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளின் ஆழ்ந்த உறைபனி மீண்டும் திரும்பி உயிர்த்த யாவற்றையும் குளிரில் உறைத்து […]
ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்
ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை. ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம். ஒரு பவுண்ட் ஆப்பிள் – வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா – வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு […]
மினசோட்டா மக்கள் அறிகுறி
உங்கள் பக்கத்து ஐஸ்கிரீம் கடை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடுத்த மேமாதம் வரை மூடியிருந்தால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் சில சமயம் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு ஜாக்கட்டு அணிந்து ஒரே தரம் வெளியே போய் வரப் பாவித்தீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்கள் பயணங்களை மணித்தியாலக் கணக்கில் மாத்திரமே ஒப்பிடுவீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்களுக்குத் தெரியாதவர் தவறாகத் தொலைபேசியில் அழைத்தும் பலமணி நேரம் முகம் முறிக்காது பேசியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக […]
காமத்தின் தொடக்கம்
அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?
செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?
நிலாவரை
யாழ்ப்பாணத்தில் உள்ள நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் […]
தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்
அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம். காது வலி – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும். குமட்டல் (Feeling to vomit )– […]
அந்தமும் ஆதியும்
இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1
Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது. Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க […]
எசப்பாட்டு
மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!
கொலைபேசி
உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]