கவிதை
கவித்துளி
கவித்துளி 1 இரவின் மடியில் இளைப்பாறுகையிலே இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே இதயத்தில் நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே இதழில் பழரசம் பருகிடக் காத்திருக்கவே இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!! கவித்துளி 2 […]
தாய்நாடு திரும்புவாய்..!.செல்லமகனே..!
எந்தன் தாயுன்னைத் தேடுகிறாள்
—-எங்கே சென்றாய் செல்லமகனே..!
தாய் நாட்டில் கல்வியறிவுபெற்று..
—-அயல் மண்ணில் பணியாற்றவா..!
இயந்திரமாய் எளிதில் பொருளீட்ட..
—-இயல் புக்கெதிராய் மாறினாயோ..!
நீவளர்ந்த ஊரிங்கே நித்தம்..
மீண்டு(ம்) வரும் சுதந்திரம்
விண்ணோர் போற்றிடும் வகைவாழ்ந்து
வியத்தகு சாத்திரம் பல படைத்து
மண்ணோர் வாழ்நெறி வரையறுத்த
மதிநிறை மக்கள் வாழ்ந்திட்ட தேசமிது!!
பல்லாயிரம் ஆண்டுகள் முன்னமேயே
சொல்லால் செயலால் நிலையுணர்ந்து
பொல்லாதது செய்யாது வாழ்ந்திருந்து
வெல்லாத துறையில்லாதிருந்த தேசமிது !
மோகத்தைக் கொன்றுவிடு !!
ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?
காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?
அ முதல் ஃ வரை …!
அ- அதிசயிக்க மறந்துவிட்டேன் அதிசயமே நீ என்பதால் ஆ- ஆர்ப்பரிக்க மறந்துவிட்டேன் அலைகடல் நீ என்பதால் இ- இரவை ரசிக்க மறந்துவிட்டேன் என் நிலவே நீ என்பதால் ஈ – ஈகை செய்ய மறந்து விட்டேன் ஈகையின் இருப்பிடம் நீ என்பதால் உ- உலகைக் காண மறந்துவிட்டேன் என் உலகமே நீ என்பதால் ஊ- ஊஞ்சலில் ஆட மறந்துவிட்டேன் என் தென்றல் நீ என்பதால் எ- எழுதுகோலைப் பிடிக்க மறந்துவிட்டேன் என் இறகு நீ என்பதால் ஏ- […]
கவிதையாய் நீ ….!!
சேமித்த காதலின் சிதறல்களாய் நீ …. கண்ணீர்க் குவளைகளின் கதறல்களாய் நீ …. எண்ண ஓட்டத்தின் சிறகுகளாய் நீ …. நினைவு அலைகளின் சின்னமாய் நீ …. ஆசைக் கடலின் ஓடமாய் நீ … கனவு ஆலையின் உறைவிடமாய் நீ….. கற்பனை ஊற்றின் பிம்பமாய் நீ ….. என்றுமே எந்தன் காதலாய் நீ ….!! – உமையாள்
கவிதைக்காக கவிதை
பரவசத்தில் தோன்றுமதைப் பற்பல எண்ணங்களோடு பக்குவமாய் ஒப்பிட்டு இயல்பாகவெழுதுவதே கவிதை! கவிதையென நினைத்து கனவில் தோன்றுவதையெலாம் யாருக்கும் புரியாமல் பாருக்குமொழிவதல்ல கவிதை..! முழுதும் படித்தாலும் முடிந்தவரை முயன்றாலும்-‑_ புரியாத கருத்தைப்பலர் அறியாதசந்தமென எழுதுகின்றார்..! அடுக்கான வார்த்தைகளை மிடுக்காக ஒன்றருகிலொன்றாக அள்ளியடுக்கி வைத்ததினாலன்றி அருங் கவிதையாகிவிடுமா?.. உலகிலில் அனைத்துக்குமோர் உருவமுண்டு…அதுபோல அகரமுதல எழுத்தனைத்துக்கும் அழகான கவிதைவடிவமுண்டு எதுகைமோனை நயத்தோடிசைபோல எளிதாய்விளங்கும் பொருளோடு சிந்தனைஊற்றில் பெருக்கெடுத்து சிறப்பாயெழுவதே கவிதையாகும் இயல்பாகவெழும் சிந்தனையோடு இறையருள் கொண்ட எழுத்தின் எழுச்சியேயொரு செந்தமிழ்க்கவிதையின் சிறப்பாகும்! […]
தந்தையெனும் உறவு
செல்வமெனக் குழந்தை ஜனித்த பொழுதில் சொல்ல வார்த்தையின்றி உருகிய உள்ளம்! செல்லச்சேய் கரங்களில் தவழ்ந்த பொழுதில் மெல்லப் பூத்திட்ட விழிநீரில் பெருமிதம்! தந்தை எனும் பொறுப்புயர்வு அடைந்ததும் சிந்தை எலாம் குழந்தை நினைந்து நிந்தை எலாம் புறந்தள்ளி உழலும் விந்தை பலபுரிந்து நிற்கும் நற்சொந்தம்! தான் காணப் பெறாத உலகத்தை வான் ஏறித் தொடாத உச்சத்தை சான்றோனாய்த் தன் பிள்ளை அடைந்து மாண்புற வேண்டி ஏங்கும் நெஞ்சம். நடை பயின்ற தளிர் பருவத்தில் கடை விரல்பிடித்துப் […]
கிராமத்துக் காதல் ….!!
ஏருபுடிச்ச மச்சானே ! மனசுல காதலை வெதைச்சவரே ! இந்தப் பூங்குயிலை ஏரெடுத்துப் பார்த்திடுங்க … பொத்தி வெச்ச ஆசையிங்கே அருவியா கொட்டு்துங்க…. ஒங்க நெனப்பில் மச்சானே துவச்ச துணியைத் தான் துவச்சேனே… இதுதான் சாக்குன்னு …என்னாத்தா வாயார திட்டித்தீர்த்தாளே … புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு சொன்னாளே… பேதலிச்சது புத்தியா? மனசா ? எல்லாமறிஞ்ச மச்சானே சட்டுனுதான் சொல்லிடுங்க … வெரசா வாரேனு சொல்லிப் போனீக வருசம் மூணாச்சு ! எங்கழுத்தில் தாலி ஒன்னைக் கட்டிடுங்க குலசாமியா […]
தொழிலாளர் தினம் – கவிதை
இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்
மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்
துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து