கவிதை
தந்தையெனும் உறவு

செல்வமெனக் குழந்தை ஜனித்த பொழுதில் சொல்ல வார்த்தையின்றி உருகிய உள்ளம்! செல்லச்சேய் கரங்களில் தவழ்ந்த பொழுதில் மெல்லப் பூத்திட்ட விழிநீரில் பெருமிதம்! தந்தை எனும் பொறுப்புயர்வு அடைந்ததும் சிந்தை எலாம் குழந்தை நினைந்து நிந்தை எலாம் புறந்தள்ளி உழலும் விந்தை பலபுரிந்து நிற்கும் நற்சொந்தம்! தான் காணப் பெறாத உலகத்தை வான் ஏறித் தொடாத உச்சத்தை சான்றோனாய்த் தன் பிள்ளை அடைந்து மாண்புற வேண்டி ஏங்கும் நெஞ்சம். நடை பயின்ற தளிர் பருவத்தில் கடை விரல்பிடித்துப் […]
கிராமத்துக் காதல் ….!!

ஏருபுடிச்ச மச்சானே ! மனசுல காதலை வெதைச்சவரே ! இந்தப் பூங்குயிலை ஏரெடுத்துப் பார்த்திடுங்க … பொத்தி வெச்ச ஆசையிங்கே அருவியா கொட்டு்துங்க…. ஒங்க நெனப்பில் மச்சானே துவச்ச துணியைத் தான் துவச்சேனே… இதுதான் சாக்குன்னு …என்னாத்தா வாயார திட்டித்தீர்த்தாளே … புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு சொன்னாளே… பேதலிச்சது புத்தியா? மனசா ? எல்லாமறிஞ்ச மச்சானே சட்டுனுதான் சொல்லிடுங்க … வெரசா வாரேனு சொல்லிப் போனீக வருசம் மூணாச்சு ! எங்கழுத்தில் தாலி ஒன்னைக் கட்டிடுங்க குலசாமியா […]
தொழிலாளர் தினம் – கவிதை

இலக்குகளை நோக்கிய பயணத்தில்
அடி சறுக்கி மூச்சு முட்டி வாய் மண்தொட்டு
உதடு சிதறுண்டு செங்குருதி சிந்திடினும்
இலக்கே கொள்கையென்று நேர்வழியில் வீறுகொண்டு
தொழில் முடித்து காத்திருப்போம் தொழிலாளர் நாங்கள்
மழை – வெயில் – மூடு பனி தாண்டி வரிசைகள் நீண்டாலும்
காத்திருத்தல் ஒன்றே நேரிய வழியென்று காத்திருப்போம் கூலிக்காய்
‘செய்யாதே’ என்றால் செய்யாமல் இருப்பதற்கும்
‘செய்’ என்றால் செய்வதற்கும் பழக்கப்படுத்தப்பட்டு
பலமாய் சபிக்கப்பட்ட பூமிப் பந்தில் நாதியற்று நாட்கள் கழிப்போம்
துரதிர்ஷ்டவசமாக எம் வாழ்வை உம்மிடம் ஒப்படைத்து
உமக்கான பயணத்தில் எம்மை நாம் தொலைத்து
அன்பின் அகிலம்

அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
ஹைக்கூ கவிதைகள்

முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]
இளவெயினிற் காலம்

சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே
காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே
அவள் ஆத்திச்சூடி

அவள் அழகை விரும்பு
ஆணவம் கொள்ளாதே
இன்னலிலும் மறவாதே
ஈடு இணையின்றிக் காதலி
உயிரினுள் கலந்தவளே
ஊடலிலும் கைவிடாதே
எண் உலகமும் அவளே
பொன் மானே ..!

பெண் மானே ..! விடியாத இரவினிலே கலையாத உன் நினைவு நித்தம் வேண்டியே பாவிமனம் தவிக்குதடி ! மடியாத நெஞ்சினிலே முடியாத என் ஆசைகளைக் களவாடிட வேண்டியே பாவிமனம் துடிக்குதடி ! படிப்பறிவு இல்லாததாலே அறியாத என் காதலை சொல்லிட வேண்டியே பாவிமனம் பறக்குதடி ! அறியாப் பருவத்திலே அக்னியாய் எனைச் சுட்டவளே நீயருகிருக்க வேண்டியே பாவிமனம் ஏங்குதடி ! என் பொன் மானே ..!!
மார்கழியும் தையும்

எழுந்தீரோ எம்பாவாய் ! மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே … ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும் முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே… பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே … பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே …. தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே … உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே ! உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே … […]
பெண்களை அடிமைப்படுத்தாதே !

பொய்யானதே பெண் வாழ்வு பொய்யானதே! கேட்பதற்கு நாதியில்லாஇனமாகிப் போனதே பெண்ணினம்! கேட்பதற்கு நாதியில்லா இனமாகிப் போனதே பெண்ணினம்! வயது ஐந்து கொண்ட சின்ன வண்ணக்குயில் கூட உன் கண்ணிற்குப் பதினெட்டாய்த் தெரிவதேன்? பதினெட்டாய்த் தெரிவதேன்? மன்னன் அந்தப்புர மகளிராய் அடிமைப்படுத்தப்பட்டோம் இன்று வரை அடிமை ஆனோம் இன்று வரை அடிமை ஆனோம்! அரசியல் மேடை ஏறி வென்றால் உன் காமப் பார்வையை பாய்ச்சுகின்றாய் பள்ளியிலும் இதுதான் செல்லும் வீதியிலும் இதுதான் எங்கும் இதுதான் உன்னைப் பெற்றவளும் பெண்தானே […]