கவிதை
பாதச்சுவடுகள் !
ஒளி பொருந்திய பாதையில்
விழி திறந்து பார்க்கையில்
என்னிலும் உன்னிலும்
நம் நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
விரிந்து கிடக்கும்
எண்ண முடியாத
எண்ணிக்கையில்லாத
இனிய பாதச்சுவடுகள் !
எது பிரதானம்?
எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!
சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?
சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?
தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?
காதல் கொண்டேனடி !
நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று
நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்
சாலையோர அனாதையாய் நான்
கண்டதும் காதல் கொண்டேன்!
கள் குடித்த மந்தி போல்!
இல்லான் உனை ஏற்க!
என் இல்லத்தார் எதிர்ப்புரைக்க!
உற்றோறும் பெற்றோறும் உறங்கும்
ஓர் இரவில் இல்லம் நீங்கி!
கவித்துளிகள்
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் …
முதலாய் வெட்கப்பட்ட
பெண் !
தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் காதல் வயப்பட்ட
பெண் !
சுதந்திர தேவி
ஆரவார மில்லா அட்சன் ஆற்றில்
ஆர்பாட்டா மில்லா அலைகள் நடுவே
அகிலம் போற்றும் விடுதலைச் சின்னமாய்
அகவை மறுத்து நிற்கிறாள் அந்நங்கை.
ஆணவமிகு ஆதிக்க ஆட்சியாளர் ஒழிந்திட
ஆற்றல்மிகு ஆதவனின்கீழ் அனைவரும் சமமெனும்
ஆவணமதை ஒருகையிலும் அடிமையிருளைப் போக்கிட
ஆழிகாற்றும் அணைக்காவிளக்கை மறுகையிலும் ஏந்தியிருப்பாள்.
பாலை தேசத்தில் கருநிற ஓவியம்!
பாலை தேசத்தில் பகலெல்லாம் காய்ந்து
நிசியில் தோன்றும் வெண்மதி வேளை
கண்டேன்!; கண்டேன்!
காதல் கன்மணியின் கருநிற விழியை
கண்டேன்! கண்டேன்!
உலகம் செழிக்கும்
நதி!
நம் உறவுகளின் பாலம்,
ஊற்றாய்ப் பிறந்து!
விதம் விதமாய்ப் பெயர் கொண்டு
பெருக்கெடுத்து ஓடும்.
ஹைக்கூக் கவிதைகள்
பவள மல்லியாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
வானில் விண்மீன்கள்
இரவில் தூங்கி
பகலில் விழித்தது
அல்லி
கிராமத்துக் காதல் !!!
ஏரில் பூட்டிய எருதுகள்
களைப்படையும் முன்னமே
உழுது களைத்திருப்பார்
அப்பா …
அவர் வியர்வை நிலத்தில்
விழுமுன்னே முந்தானையால்
ஓற்றியெடுத்து நுகர்வாள்
அம்மா ….