கவிதை
உலகம் செழிக்கும்

நதி!
நம் உறவுகளின் பாலம்,
ஊற்றாய்ப் பிறந்து!
விதம் விதமாய்ப் பெயர் கொண்டு
பெருக்கெடுத்து ஓடும்.
ஹைக்கூக் கவிதைகள்

பவள மல்லியாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
வானில் விண்மீன்கள்
இரவில் தூங்கி
பகலில் விழித்தது
அல்லி
கிராமத்துக் காதல் !!!

ஏரில் பூட்டிய எருதுகள்
களைப்படையும் முன்னமே
உழுது களைத்திருப்பார்
அப்பா …
அவர் வியர்வை நிலத்தில்
விழுமுன்னே முந்தானையால்
ஓற்றியெடுத்து நுகர்வாள்
அம்மா ….
கவித்துளிகள்

ஜன்னலின் சத்தங்கள்
கவனமற்று எதிர்நோக்கும்
அன்றைய ஒலியின்
ஆறாத் தனத்தின்
அலம்பலைக் கடக்க
வழி வேண்டா, மனம் வேண்டா
கடவுளின் அடி வயிற்று
வழியெனத் திறந்து கொண்டே
நகர்கிறது,
இந்திரிய இன்பம்

இரவினில் கட்டிலினில் இன்பக் களிப்பினில்
இருக்கும் உணர்வுகள் இறுதிகண்ட பின்னரே
இல்லாமல் போனதேன்? இதுவே மகிழ்ச்சியெனில்
இணைந்து முடிக்கையில் இலகுவாய் விலகுவதேன்?
ஆழ்நித்திரை

ஆழ்நித்திரை பகைவனும் இருக்கமாட்டான் நண்பனும் இருக்கமாட்டான் நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! பசியும் இருக்கமாட்டாது படுத்துயரமும் இருக்கமாட்டாது நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! செய்வினை மறந்திடும் அதன்பயனும் மறைந்திடும் நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! ஆழ்துயர் அகன்றிடும் அகந்தையும் விலகிடும் நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! சொந்தமது நினைவில்லிலை நினைவதுவும் துளியுமில்லை நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! கடந்தகாலம் கலைந்தநிலை எதிர்க்காலம் கவலையில்லை நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! உடலோடு உரிமமில்லை உயிரதனின் […]
அன்பை நேசியுங்கள் !

அன்பு
எல்லா பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக் கூட.
அன்பு
எல்லா கடிதங்களையும்
படித்து ரசிக்கிறது
சோகமாக இருந்தால் கூட.
அன்னைக்கு ஓர் அன்னையாக !

மழை நீரில் நான் நனைந்தால் ஜலதோஷம் வந்துவிடும் எனத் தன் முந்தானையால் தலை துவட்டினாயே… தாயே ! தோஷம் உனக்கு வராதா? கையளவு சோறு பானையில் இருக்க ஒருகவளம் தண்ணீரை தான் முழுங்கி – உன் பசியை மறந்து என் பசி போக்கினாயே … தாயே ! பசி உனக்கு வராதா? காய்ச்சலில் இரவெல்லாம் நான்பிதற்ற காத்துக் கருப்பு அண்டியதோ எனத் தன் குலதெய்வதிற்கு காசு முடிந்தவளே …. தாயே ! காய்ச்சல் உனக்கு வராதா? கல்தடுக்கி […]
தூங்கா நகரம்

சிலருக்கு தூக்கம் பலருக்கு துக்கம் ! தூக்கத்தை சிலர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் பணத்திற்காக …. சிலர் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் வாழ்வதற்காக ! தூக்கத்தை மறந்து பலருக்குப் புத்துணர்வூட்ட டீ போடும் டீக்கடைக்காரர் ! மொட்டு மலருவதற்குள் விற்றுவிடத் துடிக்கும் பூக்காரி ! பசியோடு வருவோரைப் பாங்குடன் பசியமர்த்தும் இட்லிக்கடைகள் ! நடுநிசியிலும் நிலவை வம்புக்கு இழுக்கும் காதல் கிறுக்கன் ! ஒலிப் பெருக்கிகளுக்கு இடையிலும் தூங்கும் தெருவோர வாசிகள் ! பேருந்தில் பயணிப்போரைப் பத்திரமாகக் கொண்டு […]
மழைப்போல நான்

ஈரம் சுமந்த
மேகத்தாய் ஈன்றெடுக்கிறாள்
ஒரு நொடியில்
பல கோடி
நீர்த் திவலைகளை..
அதை
மழை என்றீர்கள்.