கவிதை
எசப்பாட்டு – ஆண்களின் அவலம்

தேர்வு பலர் எழுதினாலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பது தேன் போன்ற மகளிரே தேடிப் பார்த்துப் புடிச்சாலும் தேசம் முழுதும் சலிச்சாலும் தேருவது ஆண் மகனின் தேக்க நிலை எங்குமே ! தேங்கும் நிலை தவிர்த்து தேம்பி அழுவது தொலைத்து தேர்ச்சி பெறுவது எந்நாளோ? வெ/ மதுசூதனன்.
மாரியால் மாறினோம்

மரத்துப் போன ஜனங்கள்
மடங்கிச் சுருங்கிய மனங்கள்
மானுடம் மறந்த தன்னலம் ; யாவும்
மாறிடக் கண்டோமே மாரியால்!!
மண்டியிருந்த பேதங்கள் மக்கிப் போயின!
மதர்த்திருந்த மதங்கள் மரித்துப் போயின!
கண்டறியா அண்டைமனிதர் கடவுளாயினர்;
கடல்கடந்த அன்னியமனிதர் வள்ளலாயினர்!
முதற் காதல்

எழுதி எழுதித் தீர்த்தாலும் இனி
எழுதுவதற்கு இல்லையென இருந்திட இயலாது….
அழுது அழுது தீர்த்தாலும் இனி
அழுவதற்கு ஏதுமில்லையென அமைந்திட இயலாது…
அரும்பாக இருக்கையிலே அழகாக அரும்பியது
துரும்பாக இருந்ததையும் தூசிதட்டி விரும்பியது
குறும்பாக நடந்ததெல்லாம் குறுகுறுத்துப் பருகியது
இரும்பான இதத்தையும் இளக்கிடவே திரும்பியது
எசப்பாட்டு – வெள்ளம்

தண்ணீர் தண்ணீரென்றே
தாகத்தோட அலைஞ்சோம் நாங்க
தரையத் துளைச்சாலும்
தாளாது இறைச்சாலும் வர்ல
சாமக்கவி

வாயு தேவனும் வருண பகவானும் சங்கமித்து இசை பயிலும் ஒரு பனிக்கால இரவின் முன்சாமப் பொழுதொன்றில் கட்டிலில் சாய்ந்தபடி கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை நீண்டு கதையாகிப் பின் தொடர்கதையாய் நீண்டது. சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன். தீபாவளிக்கு இல்லாத விடுமுறை திருக்கார்த்திகையில் வந்ததால் வானத்து விண்மீன்கள் நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட . ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது எழுந்து விளக்கை அணைத்தேன் வீணை மீட்டியபடி பாடத் தொடங்கினேன் ஒரு சாமகானம். ஊரவன் –
காகிதத்தின் வாக்குமூலம்

எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம் !!!
வேறுபட்ட கருத்துகளைத்
தன்னுள் விழுங்கி…
மக்களின் பார்வைக்கு
எவ்விதப் பாகுபடின்றிக் கொடுத்துத் …
திறம்படத் தன் பணி
செய்பவன் …..
எவனோ …..அவனே
காகிதம் …!!!!
காமத்தின் தொடக்கம்

அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?
செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?
எசப்பாட்டு

மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!