கவிதை
சோர்ந்து போகாதே ! மனமே !

துச்சினான் இறைமகன் இயேசு, சிலுவை மரத்திலே வஞ்சிமகன் அவள் கன்னித்தாய் பார நெஞ்சினிலே.. கெஞ்சிய நெஞ்சத்தோடு பரனைப் பார்க்கையிலே.. எஞ்சிய வார்த்தை “இதோ உன் மகன்” கேட்கையிலே தஞ்சியே வாழ “இதோ உன் தாய்” அரவணைப்பிலே வாழு மனிதா ! வாழு ! உலகம் எஞ்சிய அளவிலே உயிர்த்தார், ஜெயித்தார் ஜெயராஜன் உனக்கே !!! – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
தொலைந்து போன சுகங்கள்

காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.
எசப்பாட்டு – அக்கரை பச்சை

காசு பணம் அதிகமாக கைகளிலே புரளுமுன்னு காடு கழனி எல்லாம் விட்டு காத்துப் போல பறந்து வந்தோம் அசல் நாட்டு வாழ்க்கையிலே அமைதிக் கொரு பஞ்சமில்ல அன்பாகப் பழக வுந்தான் ஆளுக்கொரு குறைவும் இல்ல கொஞ்ச நாள்ல போயிரவே நெஞ்சு முழுசும் ஆசையிருக்க பிஞ்சுப் புள்ளைகள நினைக்கயிலே அஞ்சும் நம்மனசு மறுக்கவில்ல நம்மப் பெத்தவுக நடுத்தெருவுல நிக்க விட்டு நாம பெத்தவுக நலம் நெனக்கும் செய்கையிதோ? – வெ. மதுசூதனன். […]
நிலையாமை

இடுப்பு வலியால் இல்லாள் துடிக்க இங்கும் அங்கும் இவன்நடை பயில இருக்கும் அனைத்து இதந்தரு மனிதரும் இதமாய் வருடி இவர்கட்கு உதவிட இரவு முழுவதும் இடையறாத் துடிப்புடன் இழுத்துப் பிடித்த இவளின் உறுதியும் இறைவன் அருளும் இணைந்து செயல்பட இவ்வுலகு தோன்றிய இணையிலாப் பிறப்பு இனிய குழந்தை இன்னல் துரத்தி இன்பம் கொடுத்து இமைக்கும் முன்னரே இரத்தம் கொதித்து இளமை எய்திட இரவு பகலென இருபொழுதிலும் உழைத்து இரந்து பிழைத்திடும் இழிநிலை ஒதுக்கி இகத்தில் அனைத்தும் […]
எசப்பாட்டு – உலகக் கோப்பை

உலகக் கோப்பையென உலாவரும் ஆட்டம் உழைப்பவன் படைப்பவன் அனைவரின் நாட்டம் உண்மையில் பார்க்கையில் உழன்றிடும் தேட்டம் உயர்வறுத்து பந்தயமே பெரிதாக்கும் கூட்டம் !! திறமைமிக்க அணியே தேர்ந்து வென்றிடுமென திடமாய்ச் சொல்லிடவியலா திறனற்ற அவலம் திக்கெட்டும் புகழ்மணந்த தீர்க்கமான ஆட்டமது திசைதவறிப் போனதோவெனத் திகைத்தழியும் தருணம் !!! ஆடுபவன் அனைவருமே அறிவில்லா மடையனாகும் ஆட்டத்தைக் களித்திடும் அண்டமெலாம் மூடர்களாம் ஆங்காரமாய்ச் சொல்லிட்ட அறிவாளி சரியெனவே ஆக்கியது இவர்களின் அளவற்ற பணத்தாசை !!! […]
நிதர்சனம்

சரமென பொழிந்த நீர்த்துளி ஓடையில்
சுகித்து மகிழ்ந்து நீராடி ஓய்கையில்
சிப்பியென் இதழோரம் தங்கிய ஓர்துளியை
சிதறாது துடைத்திட ஓர் பணிப்பெண்!
புதுமைப் பதுமை

வழிமீது விழிவைத்துக் காத்திருந்தாள், கன்னல்
மொழிபேசி மனங் கவரும் ஏந்திழையாள்
களிபாடிச் சேர்ந்திருக்கப் பார்த்திருக்கும், சிற்பி
உளிபேசும் சிறப்பான கற்சிலையாய்…
நீ இங்கு நிஜமானால்…

ஒத்தயில நிக்கும் புள்ள
ஒளிவிளக்கில் ஒளிரும் முல்ல
சித்தமெல்லாம் கலங்கிப் போக – என்
சிந்தையிலே வந்தாய் பெண்ணே
என் காதலி

தூரிகையில் தோன்றிய தேவதையே!
சிலர் காதலிக்க கவிதை எழுதுவர்!
சிலர் காதலித்து கவிதை எழுதுவர்!
நான் கவிதை எழுத உனைக் காதலித்தேன்!!!
யோகியின் சித்ததில் உதித்து
கணினியில் வளர்ந்தவளே!
கனை எடுத்து உனை வெல்லேன்!
என் கவி கொண்டு உனைக் கொள்வேன்!!!
கண்கள் இல்லாக் காதல்

கண்கள் இல்லாக் காதல் கண்கள் காணாக் காளையர் தமக்கும் கருத்தில் வந்து தோன்றும் காதல் பெண்கள் உறவு புரிந்தவர் எவர்க்கும் புறத்தில் நின்று போற்றும் காதல். தேசம் விட்டுத் தேசம் பெயர்ந்து காசது தேடிக் கடலும் கடந்த பாசம் மிக்க பலரும் போற்றும் சுவாசம் ஒத்த உணர்வே காதல். இளமையில் தோன்றி பூரித்து நின்று இனிமையே என்றும் வலம்வர இயைந்து வளமையும் தாண்டி வறுமையே வரினும் தனிமையது இன்றித் தழுவுவதே காதல். உடலின் அழகை உணர்வில் […]