கவிதை
ஓட்டம்

கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெரு ஓட்டம் நடு நடுவே சிற்சில சில்லறை ஓட்டங்கள் பத்து மாதத்தில் உலகைத் தொட்டுவிட ஒரு ஓட்டம் பிறந்த எட்டு மாதத்தில் அடி எடுத்துவைக்க மறு ஒட்டம் இரட்டை வயதிற்குள் மழலையைக் கொட்டிவிட குட்டி ஒட்டம் பால்குடி மாறா வயதில் பால்வாடிக்கு ஒரு குறு ஓட்டம் பள்ளிக்கு சித்தம் கலங்கிட நித்தம் ஒரு ஓட்டம் கன்னியரும் காளையரும் கரைகாணா பேரின்ப பெரு ஓட்டம் நிலையில்லா மாந்தர்க்கு நிலையான ஆஸ்திக்கு நிகரில்லா […]
என் காவியம்

கையுயர்த்திப் பேசுகையில் மெய்வாய் மூடிக் கேட்டிருந்தேன் !! கண்விழித்துப் பார்க்கையிலோ கடைவிழிப்பார்வை விழக் காத்திருந்தேன் !! காலெடுத்து நடக்கையிலே என்வாசல் வந்திடத் துடித்திருந்தேன் !! களைமுகம் சிரிக்கையில் எனைப்பார்த்ததால் என மகிழ்ந்திருந்தேன் !! கவனமாய் அழகுதீட்ட காளையெனக்காக என்ற கனவிலிருந்தேன் !! கண்மூடித் தூங்குகையில் கனவினில் நானென எண்ணியிருந்தேன் !! கைகழுவிப் போனதனால் காவியம் பல தீட்டியவாறுள்ளேன் !!! வெ. மதுசூதனன்.
பெற்றோர்க்காக!!

அன்பில் எனை ஈன்றெடுத்து
ஆசையாய் வளர்த்தெடுத்து
இம்மையில் மறுமை சேர்த்து
ஈகையின் பெருமை வார்த்து
சுமக்கும் நினைவுகள்

தளிர்க் கரங்கள் பற்றி நின்ற
தண்மை இன்றும் நினைவை வருடுது
சற்றே ஒதுங்கிய வெண்ணிறப் பற்கள்
சடுதியில் வந்து சாகசம் புரியுது….
எசப்பாட்டு – வாழ்க்கைச் சக்கரம்

இருவர் புரிந்திட்ட காமத்தின் விளைவோ?
இறைவன் அருளிய இணையிலா விதியோ?
இயற்கை ஊன்றிய இன்பமான விதையோ?
இயல்பாய் உயிரினம் ஆற்றிய வினையோ?
தமிழே அமுதம்

மலைகடைந்த மலையமுதம் அருவி தன்னில்
மனங்குளிர மாந்திநின்று குளித்துப் பார்த்தேன்
மலைமுகட்டில் கொம்புத்தேன் அமுதம் மொத்தம்
மலையளவு நான்பருகி சுவைத்து உண்டேன்
சுகம்

பறவைகளின் கீச்.. கீச்..
இதமான காலை வெயில்
கதிரவனைக் கண்டு உருகும் பனித்துளி
கோப்பையில் தேநீர்
”அம்மா” வென்று துயில் எழும் மகன்
தாவியணைக்கும் மகள்
உறங்கியபடியே பள்ளிக்குச் செல்லும் மகன்
ஆர்வத்துடன் செல்லும் மகள்
பிரியா விடையளிக்கும் தாய்
காலை நேரம் – சுகமோ சுகம்!
எசப்பாட்டு – வயல்வெளி

வெள்ளி யோடைச் சரிகை சீண்ட
பச்சைப் பட்டுச் சேலை பூண்டு
வெட்கி நாணிய கதிரைக் கண்டு
இச்சை நானும் கொண்ட துண்டு
சுவரோவியமாகி தொங்கிய வயல்வெளி மீது!
முதுமை

காலையில் முன்னெழுந்து கடவுளரைத் துதிபாடி
கால்நடுங்க நடைநடந்தே கடைத்தெரு வந்தவரின்
காட்சியினை நான்காண கண்களது குளமாகும்
காரணம் தேடுகின்றேன், கணக்கெதுவும் விளங்கவில்லை!!
எசப்பாட்டு – உயிர்

அன்னையின் தயவாலே அகிலத்தில் வந்துதித்து
முன்வினைப் பயனாலே முழுதான வாழ்வுபெற்று
தன்வினைச் செயலாலே தரைமீது இன்னலுற்று
நல்வினை எதுவென்றே நயமாக உணரமுனைந்து