கவிதை
அமுதூட்டிய அம்மா

மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .
பூவே… பனிப்பூவே…

இலக்கியத்தென்றல்வீசும்,
இனியச்சாளரம்
எங்கள்பனிப்பூக்கள்….
பண்பாடும்கலாச்சாரமும்,
பாடங்களில்மட்டுமேகாணாமல்,
பார்வைக்குக்கொண்டுவந்து
பாரோரைப்பார்க்கவைத்தது,
இப்பனிப்பூக்கள்….
எசப்பாட்டு – நடிகன்

எவனோ கதையெழுத எவனோ படமெடுக்க எவனோ கவியெழுத எவனோ இசையமைக்க எவனோ பாடிவைக்க எவனோ ஆடவைக்க எவனோ எழில்கொடுக்க எவனோ உடையமைக்க
விதி

விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!
உழைப்பு

ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை
உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…
நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்
உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…
தீங்கற்ற வீட்டு விலங்கு

நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…
கணவரை இழந்த பெண்ணே

வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்
தொலைத்து விட்ட நாட்கள்

ஆடித்திரிந்த வண்ணத்துப் பூச்சி
அழகாய் விரித்த இறகினில்
அடையாய்ப் பொழிந்த மழையிலும்
அழியா திருந்த ஓவியத்தில்
அகலா திருந்த மனம் ….
மேய்ப்பனை இழந்த மந்தைகள்

காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.