கவிதை
ஆசை

உறங்கிடா உள்ளத்தில் எண்ணிலா ஆசை
உறவன்றி உருவின்றி உயிர்பெற்ற ஆசை.
உருக்குலையுமுன் உயர்வுடனே உரைத்திட ஆசை
உயிரோயுமுன் அத்தனையும் அடைந்திட ஆசை
வலி சுமந்த பயணம்

விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…
மதுவின் இரு பக்கம்

அச்சம் நீக்கும் நம்மில் உறவாடும் கவிதை
ஆழ்ந்த துயரை துரத்தும் அருமை அன்னை
இன்பம் தரும் பாதகம் இல்லாக் கணிகை
ஈதல் வளரச் செய்யும் பண்பான தாதை
உளரல் தந்து மழலை ஆக்கும் தாய்மை
வாலி

வில்லாடி வெல்ல முடியாததை ஒளித்து மறைந்தாடி வதைத்தாய் வாலியை அன்று! சொல்லாடி வெல்ல இயலாததை நினைத்து நோயாடிக் கொண்டாயோ வாலியை இன்று? விண்ணுலகில் வாழ்த்திசைக்க இசை வித்தகரை வரிந்து வாரங்களாகவில்லை! விளைந்த சோகம் விலகுமுன், அவர்உனை வாழ்த்தும் பாடலுக்கு வரியெழுத விரைந்தழைத்தாயோ எங்கள் வரகவியை? தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதந்தான்! மனம்போன போக்கிலே மனிதனவனும் போனான்! அளவோடு ரசித்து அளவின்றிக் கொடுத்தான்! ஊனக்கண்ணால் பார்த்து யாவும் குற்றமென்றாயே! மெய்யென்று மேனியை யார் சொன்னது? மூன்றெழுத்து மூச்சு முடிந்தாலும் […]
நட்பு

உடுக்கை இழந்தவன் கைதானோ – உள்ளக் கிடக்கை உணர்ந்தவன் அவன்தானோ படர்க்கை நிலையினில் வாழ்ந்திடிலும் நெஞ்சப் பதைப்பை உணர்ந்திடும் செவிதானோ! இடுக்கண் களைவானோ இடித்து உரைப்பானோ எடுத்த வினைகளெலாம் எதிர்த்து வெற்றியுற மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!! – மதுசூதனன் வெ. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவிழும் உடுப்பணிந்த அந்தக் காலத்தில் அமிழ்தும் இருந்தது நீயுரைத்த நட்புறவில்! அழிந்துவரும் இன்றைய அவசரக் கோலத்தில் அழகான அவ்வுறவுஇல்; அவிழா உடையணிகிறோம்! – ரவிக்குமார் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ […]
அன்னை மண்ணே…

அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண […]
கடவுள்

கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் […]
வ(ச)ந்த காலம் மாற்றம்

நேற்றைய மாலைப் பொழுதில்
என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி
துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி
குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .
வசந்தகாலத்தின் வரவுக்கண்டு
மரங்கள் குருத்தெறிந்து
மொட்டுவிட்டுக் கருத்தரிக்க
கொட்டும் மழையில்
தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து
அம்மணமாக நின்றன.
அன்னையர் தினக் கவிதை

கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்

வந்தோரை வாழவைத்தாய், பழையதையும் பகிர்ந்துண்டாய்
வான்முட்ட சின்னங்கள் வனப்பாக நீயே செய்தாய்
விண்மீன்கள் தோற்கடித்துக் காவியங்கள் பல படைத்தாய்
வீரத்தின் விளைநிலமே, பலபோரை கண்டுவிட்டாய்
உன் படைப்பில் நீ மெச்சும் ஒன்றேதென்றால்
ஊனுருக்கி நீ செய்த உன் குழந்தைதானே என்பாய்