கவிதை
யாக்கை நிலையாமை

பகலவன் எழுந்தாட
பனித்துளி பறந்தது
புள்ளினம் இசைபாட
புதுதினம் உதித்தது
கடிகாரம் வசைபாட
கனவு கலைந்தது
கலாம்

அறிஞரை மதிக்கலாம்; அன்னையைத் துதிக்கலாம்! அறிவியல் பெருக்கலாம்; அழகுகள் சமைக்கலாம்! அறநெறி உரைக்கலாம்; அல்லவை தவிர்க்கலாம்! அறிவாட்சி சிறக்கலாம்; அசதியைத் துறக்கலாம்! அறிவை வளர்க்கலாம்; அழிவைத் தடுக்கலாம்! அன்பைப் போதிக்கலாம்; அநீதியை எதிர்க்கலாம்! அணுவைப் படிக்கலாம்; அகிம்சை பழக்கலாம்! அக்னியை ஏற்கலாம்; அவனியை அணைக்கலாம்! கற்பதை நினைக்கலாம்; கசப்பதைத் தொலைக்கலாம்! கருணையில் திளைக்கலாம்; கர்வத்தை மறக்கலாம் களைப்பினைத் துடைக்கலாம்; களிப்புடன் சிரிக்கலாம்! கண்ணியம் வரிக்கலாம்; கடுந்தவம் தரிக்கலாம்! கழனியில் உழைக்கலாம் ; கணினியில் கதைக்கலாம்! கன்னித்தமிழ் கற்கலாம் […]
எசப்பாட்டு

எசப்பாட்டு என்பது ஒரு கருத்தினை விவாதிப்பது போல இரு தரப்பினர் பாடும் பாடல் வடிவம். மிகப் பழமையான பாடல் முறைகளில் இதுவும் ஒன்று. கிராமப்புறங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும், கடுமையான வேலை செய்பவர்களும் உடல் அசதி தெரியாமல் இருக்க இவ்வகை பாடல்களைப் பாடுவார்கள். ஒருவர் பாடலின் ஒரு பகுதியைப் பாடியதும், அதற்குப் பதிலளிப்பது போல ஏளனம் செய்தோ, பதில் கொடுக்கும் வகையிலோ மற்றவர்கள் பாடுவார்கள். லாவணி பாடல் என்பதும் எசப்பாட்டின் ஒரு வகை. திரைப்பாடல்களிலும் இது கையாளப்பட்டிருக்கிறது. […]
காதல்

சிந்தும் மழைத்துளி போலே சந்தம் பொழியுது உள்ளே எதிலும் அழகைக் கண்டேன் மண்மேலே காணும் கனவுகள் மெல்ல வானம் தழுவுது இங்கே நெஞ்சம் நிறைகிறதின்பம் தன்னாலே பூக்கள் பொழிந்திடும் என்னுயிர் வாசம் வீசும் மரங்களும் செம்மொழி பேசும் கொஞ்சும் பறவைகள் கண்ஜாடை பேசும் மலைதனில் நதி வந்து ஜதிகளைப் போட, கரைதனில் நுரைவந்து அலைகளைத் தேட துளிர்விடும் நினைவுகள் தொடுவானம் சேரும் சரணம் 1 விண்ணோடு மேகம் வந்தாடும் நேரம் மண்ணோடு வாசம் என்மீது வீசும் கண்ணோடு […]
வந்த காலம் இது வசந்த காலம்

சித்திரை தாண்டி வைகாசி வந்ததும் – நம்மூர்
கத்திரி வெயில் தான்
பட்டென மனதில் தோன்றி மறைகிறது
இது இப்போது இனிய வசந்த காலம்
புல்வெளி மூடிய பனிப்புயல் போய்
புல்நுனி தூங்கும் பனித்துளி பார்க்கிறேன்
கொட்டும் மழையில் வட்டக் குடைபிடித்து
வசந்தத்தை நான் வரவேற்புச் செய்கிறேன்
இது குற்றமில்லை! வெறும் பருவமாற்றம்!

பட்டமரங்கள் துளிர்த்திடக் கண்டேன்!
கலி முற்றிட வில்லை!
காய்ந்த புல்வெளி பிழைத்திடக் கண்டேன்!
இது அதிசய மில்லை!
வெண்ணிறச் சாலைகளவை கறுத்திடக் கண்டேன்!
அடைந்ததென்ன? இழந்ததென்ன?

இலவசம் – அடைந்ததென்ன? இழந்ததென்ன?
சந்தையிலே விற்பதற்கு – மண்ணெண்ணை இலவசம்
சாதிச்சலுகை பெயரில் – வேலையுமே இலவசம்
மின்னிணைப்பு இல்லை – தொலைக்காட்சி இலவசம்
மீளாத்தடங்கல் என்றும் – மின்சாரம் இலவசம்
உன்னுரிமை வாக்களிக்க – ஐநூறு இலவசம்
ஊன்வளர்க்க அரிசிகூட – மலிவுவிலை இலவசம்
மினசோட்டா

கனடாவின் எல்லைக் கோடாய்
அதன் உறவுப் பாலமாய்
கனடாவுடன் இணைத்தும் பிரித்தும்
அழகான அமைவிடத்தில் மினசோட்டா
இது கவிதைக்கான வெறும்
கற்பனைச் சிதறல்கள் அல்ல
உண்மை ஊற்றுக்களின் பிரவாகம்
பகுத்தறிவு

பகலிரவு கண்விழித்துப் பலகாலம் தவமிருந்தேன்
சகம்முழுதும் காத்தருளும் சர்வேசன் வரவுநோக்கி!!
தகதகக்கும் பிரகாசமாய்த் தன்னிகரிலாக் கருணையுடன்
அகமுவந்து முன்னுதித்து அன்புடனே வினவிட்டான்