கவிதை
அழகே..

குளுகுளு காற்று அழுவது கேட்டேன் உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம் சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன் உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம் பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன் உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம் பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன் உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம் வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன் உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம் தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன் உன் சிலைவடிவைக் […]
காளிங்க மர்த்தனம்!!

கண்களுக்கு இனியவனாம் கண்ணன் காட்சிக்கு இனியதுவாம் கடவுள் கண்களால் ரசிப்பதுவோ கண்ணன் – அகக் காட்சியாய்த் தொழுதிடவோ கடவுள் ஆயர்பாடி மாளிகையில் அயர்ந்திருந்த கண்ணனவன் வாயதனில் மண்ணுண்டு தேயத்தைக் காட்டியவன் மாயங்கள் பலசெய்து நியாயத்தை நாட்டியவன் தாயங்கள் ஒழித்தழித்த தர்மங்கள் மீட்டவனவன்!! காளிங்கன் என்றொரு கடும்விஷப் பாம்பு கலக்கிய விஷமது யமுனை வியாபித்து காகம் குருவிமுதல் கருடன் போன்றவையும் கடல்வாழ் உயிரினமும் கருக்கிச் சரித்தது!! இன்னுயிர் அனைத்தும் இன்னலைத் தழுவ மன்னுயிர் பலவும் மாண்டொழிதல் மாற தன்னுயிர் […]
மழை இரவு !

மழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா ! மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு ! மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு ! மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]
இனவாதமே பிணமாகு

கண் எட்டும் தூரம் கரையுமில்லை! கரையைத் தேடவே துடுப்புமில்லை! நீந்தி ஓடத்தான் மீனுமில்லை! மீனாய் வாழவே வழியுமில்லை! தன்னந் தனியே தத்தளிக்கிறான் – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே! கறுப்பு வெள்ளைத் தோணியிலே! இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே! எமனின் மனமாகும் இனவாதமே பிணமாகு! குயில் ஓசை இங்கே புயல் பாசை பேசுதுவே! மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே! எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்! அறிஞரின் […]
நட்புக்கான நந்நாள்

பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!! படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும்!! மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!! வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!! வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!! பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!! அன்பிற்குச் சிலநாள் […]
பள்ளிக்கூட வழித்தடம்

ஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு… ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும்!! குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும்! கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]
ஆசை…

வண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல்! எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை! நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம்!! கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம்! ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம்! இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம்! ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம்! உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம்! ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! என்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம்! ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்! […]
முடிவில்லாப் பயணம்!!

மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்…! கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …? காதல் நெஞ்சில் கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …! மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன் மனதாலே ..! இன்னிசை மழையில் நனைந்து […]
எனைப் பெத்தவளே …!!

இருட்டு அறையின் இதயத் துடிப்பில் இன்பமாய் உறங்கினேன் இனி வேண்டினாலும் கிடைக்குமோ ..! கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே குலசாமியா காத்தவளே ..! அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே ..! உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே ..! எனைப் பெத்தவளே ..!! நீ ஆண்டு நூறு வாழவேணும் …!! எனைப் பெத்த மகராசி ..!! […]