\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதை

ஒரு நாள் போதுமா?

ஒரு நாள் போதுமா?

சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே! அன்று தொடங்கி அந்தம் வரையில் என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட இன்றொரு நாள் மட்டும் போதுமா? உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன் சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும் சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே! துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா […]

Continue Reading »

விடியும் நல்ல நாளை

விடியும் நல்ல நாளை

விளம்பி  வருடம் வரும் நேரம் விளிம்பில் வெதும்பி நிற்கிறது தமிழகம்! விரும்பியோ விரும்பாமலோ தமிழ் எனது விலாசம் விருந்தினரை வந்தாரை வாழவைப்பது எம் கலாச்சாரம்!   விளம்பரத்திற்காக இந்தியனை வேற்றுமைபடுத்தி வீண் கலகம் செய்து  விஷத்தை கக்கும் விஷமிகளின் வஞ்சனை வலையில் வீழ்ந்து விந்தைகாரர்களின்  வசீகரத்தில் கட்டுண்டுக் கெட்டது!   வினோதமாய் அன்னியமானது என் தமிழகம் இன்று! வீறுகொண்ட தன்னலமற்ற தலைவனைத் தேடுகிறது விவேகமான விவேகானந்தரின் இளைஞனுக்கு ஏங்குகிறது! வித்திட்டவரல்லவா நாம்? நாகரீகத்துக்கு வித்திட்டவரல்லவா நாம்   […]

Continue Reading »

முதுமைக் காதல்

முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள் மருவற்ற முகத்திற்கு அழகு சேர்க்க!!   மொழிபேசும் உன் இதழை மெய்மறந்து நான் பார்த்திருக்க வளையோசை கேட்டுக்கொண்டே மடிமீது தலை சாய்க்க!!   அசைந்தாடும் கூந்தல்; அதில் அலைபாயும் காற்று இசையாவும் உந்தன் கால்கொலுசில் விளையாடும் அழகே!!   கதைபேசும் கவிதையே கைகோர்க்கும் தாரகையே விலைபேசும் உன் கண்ணோடு உரையாடல் நான் தொடங்க!   வார்த்தைகள் தடுமாறி குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின! எதைச் சொல்லி மறைப்பேன் – நான் உன் சிரிப்பொலியில் […]

Continue Reading »

புன்னகை

புன்னகை

வரிகள்  இல்லாத பொது மொழி வார்த்தைகள் சேராத வாய்மொழி உதடுகளின் விரிப்பில் மனதை மயக்கிய மாய மருந்து…   சில காலடித் தூர நடை ஒரு சிறு சுவர் தாண்டல் உதிர்த்த சிறு புன்னகை பகை மறந்த கை குலுக்கல்   ஒற்றை மரம் நடுதல் சுயம் இழக்காத உறவாடல் அத்தனையும் சேர்ந்து அறுத்ததெறிந்தது ஆறாப் பகையை     தியா –    

Continue Reading »

கவித்துளிகள் சில…

கவித்துளிகள் சில…

  அம்மாவின் ஓயாத இருமல் கண்ணீராய் வெளிவரும் ஆண்டுகள் கடந்த தாய்ப்பால்   ***** கோடை வெயில் நிழலை அழித்தது திடீர் மழை ***** தப்பித்த சிறு பூச்சி பேருருவாய் மேல் விழுந்தது மின்விளக்கின் மேல் தஞ்சம் ***** தென்றலின் இனிமைப் பேச்சு விழுந்து சிரிக்கும் சருகுகள் அச்சத்தோடு மனிதன் ***** அகன்ற கருப்புத்தாள் கண்மூடி எழுதுகிறேன் இரவுக் கவிதை   சா. கா. பாரதி ராஜா        

Continue Reading »

அம்மா

அம்மா

தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]

Continue Reading »

விடியல் ..

விடியல் ..

ஒவ்வொரு காலையும் இதழோடு முட்டிக் கொண்டதன் ஈரம் காணாத சூடான கதகதப்பில்   குடுவையில் அடைத்த தேன் துளிகள் போல பருகப் பருக இன்பமாய்   முகரும் மூக்கின் நுனியில் வாசம் படர்ந்திடும் இயற்கையின் விடியலாய்   ஒவ்வொரு முறையும் பருகுகையில் விழிகள் அழகாய் விழித்திடும் தூக்கத்திலிருந்து!   நானருந்தும் தேநீர்! – ந. ஜெகதீஸ்வரன்

Continue Reading »

மன்மதனே …!!

Filed in கவிதை, வார வெளியீடு by on February 25, 2018 0 Comments
மன்மதனே …!!

தாவணிக் கனவுகளில் மனதில்‌ நுழைந்தவனே தலையிலே‌ பூச்சூட்டி  எனையாட் கொண்டவனே தனிமையில் தளர்ந்த தருணத்தில் உயிர்த்தவனே தந்திரத்தால் மனதில் தஞ்சம் அடைந்தவனே‌..!   மேகக் கூந்தலில் விரலால் கோதியவனே மேனியில் வேதியியல் மாற்றம் செய்தவனே ‌ வேதனையின்‌ வேஷம் தனைக் களைத்து வேந்தனாய் மாறி எனை ஆள்பவனே‌ …!   வயக்காட்டில் வம்பு செய்த மன்னவனே வரப்பில்  அத்துமீறி வரம்பு மீறியவனே ‌ வயலில் செங்கமலமாய்ப் பூத்தவளை வஞ்சனையால் மயக்கி மஞ்சத்தில் சாய்த்தவனே…!   காதலில் எனைக் […]

Continue Reading »

நீரைத் தழுவும் காற்றின் சுகம்

Filed in கவிதை, வார வெளியீடு by on February 11, 2018 0 Comments
நீரைத் தழுவும் காற்றின் சுகம்

நீரைத் தழுவும் காற்றின் சுகம் நெடுங்கோண இதழ்களால் சுட்டி நிற்கும் பிஞ்சுக் குழந்தையின் சிற்றொலி… இலவம் பாதம் நெகிழும் காற்றின் புல்வெளி … காலசைத்த புது உயிரின் விட்டம் பார்க்கும் சுட்டுவிழி…. எல்லாமாய் இயங்கும் புதிய சூரியனை கரங்களில் ஏந்துதல் உலகின் அப்பாக்களுக்கு நீரைத் தழுவும் காற்றின் சுகம். – முனைவர் சு.விமல்ராஜ்

Continue Reading »

பூனை

Filed in கவிதை, வார வெளியீடு by on December 31, 2017 0 Comments
பூனை

காலத்தை வெல்ல வேண்டுமே ! கால்களில் காகமும் குருவியும் — காலையில் கிழக்கு நோக்கி பணிக்குப் பறக்கும் தந்தை – வேகுமோ அரிசியும் பருப்பும் வேகத்தில் நடக்கிறது சமையல் – அவகாசம் கொடுக்காத அவசரம் – வேலைக்கு நேரமாகிறதே – மேற்கே பறக்கும் தாய் – ஓ ! குட்டிப்பூனையே ! அந்தக் குழந்தையிடம் அன்பு காட்ட , பாசம் பொழிய , உன்னைத்தவிர யாரிருக்கார் இந்த பொருள்சார் உலகில் ? –         கவிஞர் டாக்டர் எஸ். […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad