கதை
ஓட்டு வீடு

காசி வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்தார். அந்தச் செங்கல் சுவர், பெயிண்ட் எல்லாம் இறுக்குவது போல இருந்தது. வீட்டின் வாசல் நோக்கி நடந்தார். மனைவி சுபா புரிந்தது போல ஒரு குவளை தண்ணீரைக் கையில் ஏந்தியபடி அவரைத் தொடர்ந்தார். அந்த வீட்டின் வாசலில் உள்ள சிறிய வராந்தாவில் அமர்ந்தார். வெளிக் காற்று, ஏதோ இறுக்கத்தைக் குறைத்தது போல இருந்தது. ஆனாலும் முழு அமைதி இல்லை. “சுபா .. மனசுக்கு கஷ்டம் குறையல.. அம்மா திடீர்னு இப்படி போவான்னு […]
அம்மா கடை காப்பி…

”ம்ம்…. ஏண்டா அம்பி… எங்க உங்கப்பா… “ கேட்டுக் கொண்டே அந்தத் திண்ணையின் தாவி அமர்ந்து கொண்டார் பக்கத்து வீட்டு கஸ்தூரி மாமா. “தெர்ல மாமா, எங்கயோ போயிருக்கா…” என்று பதில் சொல்லி விட்டு, அந்த இத்துப் போன ரப்பர் பந்தைச் சுவற்றில் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான் கணேசன். இவன் பதிலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் மடியில், வேஷ்டி மடிப்பில் சுற்றி வைத்திருந்த வாழைப்பட்டையை வெளியில் எடுத்துப் பிரித்து, அதிலிருந்து டி.கே.எஸ். பட்டணம் பொடியை, ஆட்காட்டி விரல் […]
கண்ணம்மாவின் பாரதி

மாலைச் சூரியன் மஞ்சளாய் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சிங்காரச் சென்னையில் தினந்தோறும் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் கிட்டத்தட்ட அதே மணித்துளியில்தான்… மாலை 5.55 அல்லது ஓரிரு நிமிடங்கள் முன் பின்னாக இருக்கலாம். அந்த நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால், சூரியனும் நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுப்பதற்காக மேகங்களுக்குப் பின்னே ஒளிந்து, வானத்தின் அடிப்பகுதி நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவனது மஞ்சள் கிரணங்கள், மெரினா கடற்கரையின் மணலையும் மஞ்சள் தூள் போலக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த மஞ்சள் கிரணங்களுக்கு […]
சிரத்தை

”ஆச்சு.. இன்னையோட சரியா ஏழு வருஷம் முடிஞ்சுது…. இப்போதான் நடந்ததுபோல இருக்கு…” படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டே நினைவு கூர்ந்தான் கணேஷ்… “ஆமாம்… நேக்கும் அதே நெனப்புத்தான்…” அவன் முழுதாக விளக்கியிருக்காவிடினும், எதைப்பற்றிச் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட லக்ஷ்மி, அவனுக்கு விடையளித்துக் கொண்டிருந்தாள். படுக்கையில் அருகருகே அமர்ந்துகொண்டு ஒன்றும் பேசாமல் சற்று நேரம் இருந்த அவர்களின் மௌனத்தைக் கலைத்தது அவசர அவசரமாய் உள்ளே ஓடிவந்து படுக்கையில் ஏறிக் குதித்த சிறியவளின் ஆர்ப்பாட்டம். பெற்றோர் இருவரும் பேசாமல் […]
கர்மா….

”ஏன்னா, நம்ம ஷாலு சொல்றதக் கேட்டேளா?” சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் காஃபியைக் கையில் கொடுத்துக் கொண்டே, கேட்டாள் சாரதா. “எதப்பத்தி சொல்றே?” அவளின் கேள்வியில் பெருமளவு ஆர்வம் காட்டாமல், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேம். “அதான்னா… நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை… நான் சொன்னாக்கா, கேக்க மாட்டான்னு தோண்றது.. நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்கோளேன்.”` “என்னம்மா பிரச்சனை? நம்மதான் அவ்வளவு பேசினோமே, இன்னுமென்ன… நீயுந்தான் அவளோட சாய்ஸ்க்கு […]
தாய்மை

கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல் கதவைத் திறந்தாள் அகல்யா. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள். “ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.” அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப் படுக்கையில் […]
தலைக்கு மேல வேல….

ஞாயித்துக் கெழம காலங்காத்தால……. மனைவியின் “எழுந்திருங்கோ….. எட்டு மணி ஆயிடுத்து” குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் ஒலித்தது எனக்கு… அதனை இக்னோர் செய்துவிட்டு புரண்டு படுத்தேன். பாத்ரூமிலிருந்து எட்டிப்பார்த்த சகதர்மிணி, “சொல்லிண்டே இருக்கேன்… அப்டி என்ன இன்னும் தூக்கம்? என்னமோ வெட்டி முறிச்சாப்போல…. நேக்கு மாத்திரம் சண்டே சாட்டர்டே எதுவுமில்ல….” என்று விரட்டிக் கொண்டிருந்தாள். எனக்கு ஏதோ வேலை வைத்திருக்கிறாள் என்பதைவிட, தான் எழுந்துவிட்டோம் இன்னும் இவன் மட்டும் தூங்குகிறான் என்ற பொறாமைதான் அதிகமாய்த் தொனித்தது. […]
தப்புத் தாளங்கள்

”அம்மா, சுரேஷ் ரொம்ப நல்லவர்மா…. நன்னா பழகுவார், மரியாதையா நடந்துப்பார், எல்லாரண்டயும் பாசத்தோட இருப்பார்… என்ன, ஒரு நிரந்தரமான வேலை கெடையாது, சம்பளம் கெடையாது, மத்தபடி ஒரு குறையுமில்ல… நம்ம ஜாதி இல்ல… அதுனால என்ன?”…. சாருலதா தன் அம்மாவிடம் தனது காதலனைக் குறித்து வர்ணித்துக் கொண்டிருந்தாள். “நீ சொல்றது நேக்கு நன்னாப் புரியர்துடி… வேலை பாக்காட்டா என்ன, பொம்மணாட்டிய வச்சு நன்னா குடும்பம் நடத்தினாக்காப் போறாதா? …. ஜாதி கீதியெல்லாம் இந்தக் காலத்துல யாரு பாக்குறா… […]
வினா வினா ஒரே வினா

இட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், […]