கதை
வினா வினா ஒரே வினா

இட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், […]
நிலவும் வசப்படும்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ! ……. ……… அடி கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…? உனது புன்னகை போதுமடி ! ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர் ரகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலைப் பளு […]
சிதம்பரம் – பாகம் 2

(பாகம் 1) அமலா கண் இமைப்பதைக் கூட மறந்து, நீலவேணி சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டாள். நீலவேணி சொல்லியதாவது: “முப்பது வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதைக் கண்ட மக்கள் சிலர் அவரைத் துரத்தினர். அவரும் சிதம்பரநாதர் சந்நிதியில் ஒளிந்து கொண்டார். மக்கள் தேடிக் களைத்துச் சென்ற பின்னர், இருட்டில் எங்கு செல்கிறோம் என்று கூடத் தெரியாமல் சிதம்பர ரகசியம் என்று போற்றப்படும் குகைக்குள் நுழைந்தார். அங்கு மின்னிக் கொண்டிருந்த […]
யாரடியோ?

கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !
வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!
பக்குவக் காதல்

சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் […]
சிதம்பரம் – பாகம் 1

“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் […]
அஞ்சலம்மா

ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது. சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். […]
பீனோ க்ரிஜோ…

விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், […]
அனுபவ வாழ்க்கை

வண்டியை நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும் எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார். வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கருமையான நிறத்தில் ஒரு “ஃபார்மல்” பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் […]
கிறிஸ்மஸ் கிஃப்ட்

வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]