கதை
வாங்க ப்ரீயா பேசலாம் !!

என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]
மனப் போராட்டம்

“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”
வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.
இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.
ஓய்வு

”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்” தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, என்றைக்கும் போல் அன்றைக்கும் அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் இறைத்து கிணற்றடியைக் கழுவி விட்டுக் கொண்டே குளித்து முடித்தார் கோவிந்த ராஜய்யர். பாதிக் குளியலில் துவங்கிய மந்திர உச்சாடனங்கள் பூஜை அறையைச் சுத்தப் படுத்தும்பொழுதும் தொடர்ந்து, சாமிப் படங்களிலிருந்த நேற்றைய பூமாலைகளை அகற்றுகையில் உடன்வந்து, தீபம் ஏற்றுகையில், ஊதுபத்திக் […]
கனவு மெய்ப்பட வேண்டாம்

பிரீமியர் டைட்டில் கம்பெனியில், கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டு முடித்தான் தினேஷ். “எக்ஸ்செல்லன்ட … யூ ஆர் டன் வித் ஆல் சைனிங்க்ஸ் .. யுவர் ஹவுஸ் இஸ் சோல்ட் அண்ட் க்ளோஸ்ட் நவ் .. ஹியர் இஸ் யுவர் செக் ..” எனச் செக்கைக் கொடுத்தாள் லிண்டா. செக்கை வாங்கிப் பார்த்தான். “யூ கேன் கிவ் த கீஸ் டு ஹிம்” எனச் சொல்லிக்கொண்டே அனைத்துக் காகிதங்களையும் ஒரு நீளமான கோப்பில் போட்டு, தினேஷிடம் கொடுத்துவிட்டுக் […]
நான் நாத்திகன்

“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”… எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக […]
காய்கறித் தோட்டம்

பக்கத்தில் படுத்திருந்த, முன்தூங்கி பின் எழும் பத்தினி இடுப்பில் குத்தினாள். “ஏண்டி உயிர வாங்கற.. கொஞ்ச நேரம் தூங்க விடு …” “இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஹோம் டிப்போவில கார்டனிங் வொர்க் ஷாப் .. மறந்துட்டேளா?” என்றவாறு வசதியாகத் திரும்பிப் படுத்து கொண்டாள். ஓ… அந்த நாள் வந்து விட்டதா? மினசோட்டாவில் ஏன் பன்னிரண்டு மாதங்களும் பனிக்காலமாகவே இருக்கக் கூடாது என்று தோன்றியது எனக்கு. “காப்பின்னு ஏதோ ஒண்ணு குடுப்பியே, அதையாவது கலந்து குடேண்டி” “ஏன்? […]
குழந்தை மனசு

விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை நாங்கள் யாழ்ப்பாணத்திலை நிப்போம் என்னப்பா…” நான் ஆம் என்பதற்குப் பதிலாகத் தலையை ஆட்டினேன். அவளும் […]
சொர்க்கத்திலே முடிவானது

அதிகப் பரபரப்பில்லாமல் இருந்தது நெடுஞ்சாலை. துலூத் – 94 மைல்கள் எனக் காட்டியது வண்டியிலிருந்த ஜி.பி.எஸ். அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ரத்தன். முன்னால் செல்லும் வண்டி மெதுவாகச் செல்வது போல தோன்றியது. பொதுவாகச் சாலையில் குறிப்பிட்ட வேகத்துக்கும் குறைவான வேகத்தில் செல்வோர் இடத்தடத்தில் சென்றால் அவர்கள் மீது அவனுக்கு கடுங்கோபம் வரும். அதுவும் அவர்கள் கையில் கைப்பேசியோ, உதட்டுச்சாயக் குச்சியோ இருந்துவிட்டால் அவர்களைக் கடக்கையில் கண்களில் கோபத்தைக் காட்டிச் செல்வான். இன்று அப்படியில்லாமல் வலத்தடத்துக்கு மாறி […]
மனசாட்சி

விடிந்தும் விடிந்திராத காலைப் பொழுது.. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் தன் தலையில் இடி விழுந்தது போன்றதொரு பெரும் சத்தமொன்றை உணர்ந்தான். மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அவனுக்குள் ஏதோவொன்று தூங்காமல் விழித்துக் கொண்டு நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருக்குமாம், அதனால்தான் பத்துக் குழந்தைகள் அடுத்தடுத்துப் படுத்து தூங்கும் கல்யாண மண்டப வராந்தாவில் கோபியின் அம்மா வந்து “கோபி, கோபி” என்றழைக்கும்போது கோபி மட்டும் எழுகிறான், மற்ற ஒன்பது சிறுவர்களும் நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்கின்றனர். உறங்கும் கோபியினுள்ளே உறங்காமல் விழித்துக் […]
இரையைத் தேடி

விமானம் சிகாகோ ஓஹேர் எர்ப்போர்ட்டில் இறங்கிய போது மணி சரியாக 6.20 ஆகியிருந்தது. சிறிய, டி.சி. 9 வகை விமானம் என்பதால் பயணிகள் அதிகமில்லை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் விமானத்தை விட்டு வெளியில் வந்தான் ராகவ். துபாய்க்குச் செல்லும் விமானம் இரவு பத்து பத்துக்குத் தான். நிறைய நேரமிருக்கிறது. லேசாகப் பசிப்பது போல் உணர்ந்தான் ராகவ். மினியாபொலிஸில் விமானத்தைப் பிடிக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. சாப்பிடக் கூட நேரமில்லை. அவசர அவசரமாகத் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு […]