\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கதை

புதுமை

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 1 Comment
புதுமை

அது ஒரு மார்கழி மாத அதிகாலை நேரம். சூரியன் முழுவதும் எழுந்திராத துணிவில், மூடுபனி படர்ந்து கடல் அலையையும் அதனையடுத்த மணற்பரப்பையும், தலைவர்களின் சிலைகளையும் மூடி ஆட்கொண்டிருந்த காலம். மூடுபனியை ஊடுருவிக் காணும் அழகை ரசித்த இளஞ்சூரியன் அந்த அழகு கெடாமல் சிறிது நேரம் இருக்கட்டுமென தனது சூடான கிரணங்களைச் சுருட்டி மறைத்தது போல ஒளி குன்றியிருந்தான்…… அவன் ஒளி குன்றியிருப்பது தலைவர்களின் சிலை மீது பறவைகள் கழித்த எச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாமலிருப்பதற்காகக் கூட இருக்கலாம்… […]

Continue Reading »

உறவுகள்

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 3 Comments
உறவுகள்

அது ஒரு சனிக்கிழமை. நவம்பர் மாத மினசோட்டாக் காற்று அந்த இளங்காலையைத் தொடர்ந்து குளிரூட்டிக் கொண்டிருந்தது. சற்றுத் தூக்கம் கலைந்தும் கலையாத ஒரு மோன நிலை. அடுக்களையில் மாலினி வெண்பொங்கலுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வாசனை எழுந்திருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. இருந்தாலும் அந்தச் சனிக்கிழமை காலையை வீணடிக்க மனமின்றி, ரஜாயை நன்றாக இழுத்துப் போர்த்தித் தாளிக்கும் வாசம் மூக்கைத் தாக்காதவாறு திரும்பிப் படுத்தேன்.   ‘ஏங்க.. எழுந்திருங்க .. ’, மாலினியின் குரல் கேட்டது.   ‘கொஞ்ச […]

Continue Reading »

கனவுகள் வாழ்கின்றன

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 0 Comments
கனவுகள் வாழ்கின்றன

தென்றல் காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது.  கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது.  தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின் வழியே இழுத்து ஆசை தீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக் கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்து நீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின் பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து […]

Continue Reading »

பதிவுகள்

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 1 Comment
பதிவுகள்

வீட்டுக்குள் நுழையும் போதே ஒரே சத்தமாக இருந்தது. ஸ்பின் சைக்கிளில் வாஷிங் மெஷின் வீட்டையே லேசாகக் குலுக்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் இரண்டு நாட்களில் இட்டிலியாகப் போகும் மாவு அரைபட்டுக் கொண்டிருந்தது. டீ.வி யில், ‘அய்யய்யோ ஆனந்தமே’ என யானையுடன் ஹீரோ ஆடிக்கொண்டிருந்தார். பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த திவ்யா என்னைப் பார்த்ததும் கழுவிய டம்ளரை ‘நங்’கென்று சத்தம் வருமாறு ஸ்டாண்டில் வைத்தாள். ’காப்பி குடிக்கிறீங்களா?’ ’இல்லம்மா.. வேணாம்’. ’அதானே … இன்னைக்கு காப்பி தேவைப்படாதே உங்களுக்கு..’ கிராதகி எப்படித்தான் […]

Continue Reading »

மரியாதைச் செலவு

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 0 Comments
மரியாதைச் செலவு

சனிக் கிழமை இரவு 9 மணி… பாரி முனையிலுள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம். தோளில் மாட்டிய ஒரு லெதர் பாக் நழுவி விழாமல் நொடிக்கு நூறு முறை சரி செய்து கொண்டு, இடது கையில் தட்டைப் பிடித்துக்கொண்டு இரண்டாவதாக ஆர்டர் செய்த முட்டைத் தோசையின் வருகைக்காக கையேந்தி பவனின் முன் நின்று கொண்டிருந்தான் நம் நாயகன் கணேஷ்… சொந்த ஊரில் அவன் பெயர் கணேசன்.….. முட்டைத் தோசைக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்….. கணேஷ் வீட்டில் படு ஸ்ட்ரிக்ட் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad