கிறிஸ்துமஸ்
கலிஃபோர்னியா பற்றி எரிகிறது
![கலிஃபோர்னியா பற்றி எரிகிறது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2025/01/firefighters-6689112_1280-240x180.jpg)
இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும் நேசத்துக்குரிய நினைவுகளையும் பாதுகாத்த பொக்கிஷங்கள் ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல பின்னே ஓடுகிறாள் ஒரு தாய் ஒரு சிற்பியின் கண்கள் கனவுகளின் […]
இறைத்தூதர்
![இறைத்தூதர் இறைத்தூதர்](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2023/12/statue-51320_1280-240x180.jpg)
அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க, அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]
இயேசு பிறப்பு நற்செய்தி
![இயேசு பிறப்பு நற்செய்தி இயேசு பிறப்பு நற்செய்தி](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2023/12/wreath-6873312_1280-240x180.jpg)
ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட ஆன்ம இசை விருந்துகள் ஆசையாய் அரங்கேற ஆகம வார்த்தையானவரை ஆனந்த பாசுரம் பாடி ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022
![மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022 மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2023/01/MMA-CHRISTMAS-PARTY-10DEC2022-_620-X-413-O40-240x180.jpg)
மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அமைப்பின் சார்பில் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதே போல் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர் சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் சீட்டேத் (James Chitteth) (Pastor St. […]
கிறிஸ்துமஸ் பெருவிழா
![கிறிஸ்துமஸ் பெருவிழா கிறிஸ்துமஸ் பெருவிழா](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2018/12/Christmas_Celebration_620x413-240x180.jpg)
எங்கும் சில்லென்ற குளிர், பனி படர்ந்த புல்வெளி. நீண்ட விடுமுறைக்காகவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளும் சாண்டா கிளாஸின் பரிசுக்காக ஆவலோடு காத்திருக்கும் குழந்தைகள்…!!! இவ்வாறு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிசம்பர் 25 ம் தேதி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும், இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை, பாவ நிலையிலிருந்து மீட்க மனித உருவத்தில் உலகத்திற்கு வந்தார். இவ்வுலகத்தில் ஒரு மனிதன் தனது வாழ்வை தொடங்கும் முதல் நாள்தான் அவர்களுடைய பிறந்த […]
நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….
![நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது……. நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….](https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2017/12/nativity_620x620-240x180.jpg)
டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம். நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது. டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள் எல்லாரும் இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன், மரியாள் என்ற ஒரு […]