சித்திரக் கதை
‘பண்ணு’ தமிழ் தவிர்ப்போம்
“இப்ப பாத்தீங்கன்னா பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு இஷ்யூ நடந்திட்டிருக்கு.. அதையொட்டி நேத்து அந்த பார்ட்டிலேர்ந்து ஒரு கண்டன கூட்டம் ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க.. அதுல பெர்பார்ம் பண்றதுக்காக சில ஆர்டிஸ்டையும் இன்வைட் பண்ணியிருக்காங்க.. அவங்களும் பல மணிநேரம் டிராவல் பண்ணி நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க.. கூட்டம் கொஞ்சம் டல் அடிக்கிறதைப் பாத்துட்டு அவங்க கேஷுவலா பேசலாம், மக்களை கவர் பண்ணி அட்ராக்ட் பண்ணலாம்னு நெனச்சு பேசத் தொடங்கனப்போ ஒரு வார்த்தையை விட்டிறாங்க.. அதைக் கேட்டதும் அங்கிருந்தவங்க ஷாக் ஆகி மைக்கை […]
நெருக்கடியில் வீட்டுக் காப்பீடு
‘யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்’ என்ற பழமொழியைப் பலர் அறிந்திருக்கக் கூடும். வெவ்வேறு பொருள் தரக்கூடிய இப்பழமொழி, வீடு கட்டுவது பெரும்பாடென்றால், அதனைப் பழுதில்லாமல் பராமரிப்பது அதனினும் சிரமம் எனுமொரு கருத்தையும் தெரிவிக்கிறது. தலைக்குமேல் ஒரு நிரந்தரக் கூரை என்பது சாத்தியப்படும்பொழுது, கனவு வசப்பட்ட சந்தோஷம் வழிந்தாலும், அரும்பாடுபட்டு கட்டிய அல்லது வாங்கிய வீடு பல ஆண்டுகள் பாதுகாப்பாக நிலைத்திருக்க வேண்டுமென உள்ளுக்குள் அச்சமும் தொற்றிக் கொள்ளும். ஒரு காலக்கட்டம் வரையில், வீட்டுக் காப்பீட்டுத் […]
வெறுப்பு சூழ் உலகு
‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]
சித்திரக் கதை – பூதன் – கதை
1. பூதம் ஐந்தும் பதமாய்ச் சேர்ந்த பலவான் பூதன்….
2. வியர்வை சிந்தி வேட்டை முடித்ததும் விசனமற்ற ராத்தூக்கம்
3. பொழுதது புலர்ந்திட, பிறவிடம் விட்டு பிறப்பிடம் திரும்பினான்..
4. திரும்பிய பூதன் திடுக்கிடும் வகையில் திக்கெல்லாம் அழிவு