போட்டிகள்
வெறுப்பு சூழ் உலகு
‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]
வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்
மிக்சியில் ஏதோ அரைக்கப்போனவள் வலது புறம் திரும்பி முன்னறையை ஏன் பார்க்க வேண்டும்? அப்படியே பார்த்தாலும் அந்தக் காட்சி ஏன் என் கண்களில் பட வேண்டும்? ஒரு கையில் காப்பி கோப்பை. மறுகையில் படிக்க வசதியாக நான்காக மடக்கியபடி செய்திகளைச் சுடச்சுடத் தரும் The Straits Times செய்தித்தாள். கால்கள் இரண்டும் கீழே இருந்திருந்தால்கூட என்னோட கிறுக்கு புத்திய அடக்கி வச்சிருப்பேன். காப்பி டேபிள் கால்கள் டேபிளாகி இருந்தது. தொலைக்காட்சியில் உலக நடப்புகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் CNN […]
பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்
சென்ற ஜனவரி மாதம், பனிப்பூக்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியினை அறிவித்திருந்தோம். ‘மனித உறவுகள்’ என்ற கருவின் அடிப்படையில் ஏராளமான கதைகள் எமக்கு வந்து சேர்ந்தன. உலகெங்கிலுமிருந்து அருமையான படைப்பாற்றலுடன், சிரத்தையெடுத்து போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பனிப்பூக்களின் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்து படைப்புகளை அளித்திடவும் வேண்டுகிறோம். போட்டிக்கு வந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் உறவுகளின் பரிமாணத்தை வெவ்வேறு கோணங்களில், யதார்த்தத்துடன், மிக நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருந்தன. கதைகளை வாசித்த எமது நடுவர் குழுவினர், வார்த்தைகளால் […]
பனிப்பூக்கள் 2021 சிறுகதைப்போட்டி முடிவுகள்
இந்த வருட சிறுகதைப் போட்டியில் உலகளவிலிருந்து பல அருமையான படைப்புகள் கிட்டின. இவற்றிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவெ இருந்தது. இருப்பினும் எமது சிரேஷ்ட நடுவர்களால் நான்கு கதைகள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே ஒரு வகையில் மிகவும் சிறப்புடன் அமைந்திருந்தாலும் நூலிழையில், குறுகிய இடைவெளியில் வெற்றி வாய்ப்பைத் தவற நேர்ந்தன. இந்த போட்டியின் மூலம் உலகளவில் இருந்து பல எழுத்தாளர்களும் வாசகர்களும் கிடைத்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றோம். இந்தியாவிலிருந்து இரண்டு […]
பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி முடிவுகள்
பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர் அறிவிப்பு இந்த வருட சிறுகதைப் போட்டியில் உலகளாவில் இருந்து கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளில் இருந்து எமது சிரேஷ்ட நடுவர்களால் மூன்று கதைகள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன. இந்த போட்டியின் மூலம் உலகளவில் இருந்து பல எழுத்தாளர்களும் வாசகர்களும் கிடைத்திருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம். இந்தப் […]
சிறுகதைப் போட்டி
கதைகளைச் சமர்பிக்க வேண்டிய இடம் அமெரிக்கச் சூழலில் தமிழ் இலக்கியத்தைத் தழைக்கச் செய்யப் பனிப்பூக்கள் முயன்று வருவது நீங்கள் அறிந்ததே. அம்முயற்சியின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் நடைபெறும் சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் தொடர்கிறது. அண்மையில் இயற்கையெய்திய கவிஞர் நா. முத்துக்குமார் எண்ணற்ற திரைப் பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றில் பல பாடல்கள் நம் நெஞ்சை மயிலிறகால் வருடுவது போன்று இதமளித்தவை; சிந்திக்கச் செய்தவை ; ஆழ்ந்த பாதிப்புகளை உண்டாக்கியவை. அப்படி நம் அனைவருக்கும் பிடித்த கவிஞர் நா. […]
முழுவல்
வழக்கம் போல அதிகாலை மூன்று மணிக்கு முழிப்பு வந்தது நடேசனுக்கு. மெதுவாக எழுந்து அந்த சுத்தமான அதிகாலைக் காற்றைச் சுவாசித்தார். எவ்வளவு ஜனத்தொகை பெருகினாலும், காலையில் வாகனங்கள் சத்தம் தொடங்கும் முன், மாசு உலகை சூழும் முன், அந்த அதி காலை மூன்று மணி ஒரு பெரிய சந்தோசம் தான் அவருக்கு. அந்த அமைதி, எங்கேயோ கூவும் ஒரு குருவி, பாதித் தூக்கத்தில் ஊளையிடும் பக்கத்துத் தெரு நாய், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சூரியன் உதிக்கும் […]
இதுதான் காதலா !!!
“ஏம்மா அகல்யா… முற்போக்குச் சிந்தனை தேவைதான்.. அதற்கென்று இப்படியா??? நிச்சயதார்த்தம் முடிஞ்சி ரெண்டு பேரும் வேலை செய்ய அமெரிக்கா போனீங்க! உங்கப்பா எத்தனை முறை உங்கிட்ட சொன்னாரு.. இந்தப் பையன் வேணான்னு.. கேட்டயா நீ… இப்போ பாரு.. அங்கு போன ஒரே மாதத்துல அந்தத் தம்பி செழியன் கார் விபத்துல இறந்துடுச்சி… நீயும் இங்க வந்திடுனு சொன்னா… … ரெண்டு மாதம் கழிச்சி வருவதா..சொன்ன…! ஆனா, இப்போ ஒரு வருடம் கழிச்சி வந்து மூன்று மாத கர்ப்பம்னு […]
உனக்கென உனக்கெனப் பிறந்தேனே…
தன்னை இடித்துத் தள்ளிவிட்டு ஓடிய ஒரு பெண்ணை, முறைத்துக்கொண்டிருந்தான் ஸ்ரீராம். நெற்றியில் சுருக்கம் விழ, ‘யாரிவள்? கொஞ்சம் கூட நாகரிகம் அறியாதவள்’ என்று மனதில் அப்பெண்ணைத் திட்டித் தீர்த்தான். அப்படி என்ன அவசரம் என்று அப்பெண் ஓடிய திசையைப் பார்க்கையில், அங்கோ தடுமாறியபடி சாலையைக் கடக்கக் காத்திருந்த ஒரு வயதான பெண்மணிக்கு, சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக, பெயர் தெரியாத அப்பெண்ணிடம் மனதில் மன்னிப்பு வேண்டினான். ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு விதமாக ஸ்ரீராமின் மனதைக் கவர்ந்தாள். […]
புத்தொளி பிறந்தது !
வாசலில் இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன். கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின் பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். […]