புத்தகம்
யுவல் நோவா ஹராரியின் ஆபத்தான பார்வை

கணினி நுண்ணியல் AI இன் ஆபத்துகள் பற்றிய அவரது எச்சரிக்கை ஆபத்தானது, ஆனால் அவற்றைத் தவிர்க்க இது நமக்கு உதவுகிறதா? “சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பொருள், ஆற்றல், நேரம் மற்றும் இடம் தோன்றியது.” இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரியின் Sapiens: A Brief History of Humankind (2011) தொடங்குகிறது, மேலும் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் வியக்க வைக்கும் கல்விப் பணிகளில் ஒன்றாக இது தொடங்கியது. Sapiens பல்வேறு மொழிகளில் 25 […]
ஆரூர் பாஸ்கர் எழுதிய “வனநாயகன்’’ இது ஒரு சதிவலை

உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் […]
எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]
தீபச்செல்வனின் ‘நடுகல்’ பின் குறிப்புக்கள்

இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து […]
உலக புத்தக தினம் – திருமதி. பிரசன்னாவுடன் உரையாடல்

உலக புத்தக தினத்தையெட்டி திருமதி. பிரசன்னா அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்.
அம்மா வருவாயா? – நூல் விமர்சனம்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து வரும் ராஜி ராமச்சந்திரன், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “அம்மா வருவாயா” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பயண அனுபவம், செய்தி கட்டுரை, வாழ்க்கை அனுபவங்கள் என வெவ்வேறு வகையான 12 கட்டுரைகள், நூறு பக்களுக்குக் குறைவான இப்புத்தகத்தில் நிறைந்திருக்கிறது. கட்டுரையின் அளவும், அமைப்பும் தலைப்பையொட்டி வேறுபடுகின்றன. அதனால் இப்புத்தகத்தை ஒரே அமர்வில் வாசித்தாகிவிட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பயணங்கள் மீதான ஆர்வம் காரணமாக, காசுமெல் தீவுக்கு […]
நல்லெண்ணங்கள் நாற்பது

“கடுகு சிறிதானாலும் காரம் பெரிது” என்றொரு பழமொழி உண்டு. பிரபா அனந்த் அவர்களின் “நல்லெண்ணங்கள் நாற்பது” என்ற கைக்குள் அடக்கமான மிகச் சிறிய நூல் நிறைந்த கருத்துக்களுடன் ஒரு “கையேடு” போலத் திகழ்கின்றது. ஒரு நூல் நயம் அல்லது திறனாய்வு என்றால் அந்த நூல் பற்றிய சில பல விளக்கங்களுடன் ஒரு சில எடுத்துக்காட்டுகளையும் தர வேண்டும். திருக்குறள் போல , ஒரு துளிக் (ஹைக்கூ) கவிதை போல நல்லெண்ணங்கள் நாற்பதில் எதைத் தொடுவது எதை விடுவது […]
ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி – நூல் நயம்

கவிதை மொழியை அமைக்கும் ஆற்றல் பற்றி சொற்களால் விளக்குவது கடினம். அது வியக்க வைக்கும் வகையில் நம் உணர்ச்சியைத் தூண்டி, சத்தமே இல்லாமல் எம்மிடம் ஒருவகையான சலனத்தை அல்லது கிளர்ச்சியை உண்டாக்கி விடுகிறது. 2009 இல் எனது முதுகலைப் பட்டப் படிப்பு ஆய்வின் ஒரு பகுதியாக புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை ஆய்வு செய்திருந்தேன். பெரும்பாலும் தாய்நாட்டிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த நிலத்தை விட்டுப் புலத்துக்குப் பெயர்பவர்கள் தங்கள் நிலம் சார்ந்து எழுதுவதைக் காட்டிலும் புலத்தில் சந்திக்கும் அல்லது […]
பெயல் நீர் சாரல் – நூல் நயம்

ஒரு நல்ல கவிதைக்கு உடல், உயிர், உள்ளம், உயிர்த்துடிப்பு எல்லாமே இருக்கிறது. உள்ளடக்கத்துக்கு தகுந்த வடிவமும் (form) வடிவத்துக்கு தகுந்த உள்ளடக்கமும் (content) பொருத்தமுற அமைந்து விட்டால் அது சிறந்த கவிதையாக அமைந்துவிடும். இந்த வகையில் 42 தனிக் கவிதைகளைக் கொண்டு தொகுத்த கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்களின் “பெயல் நீர் சாரல்” கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதும் அருவியாக விழுகிறது. எனக்கு தமிழ்க்கவி பிரமிள் அவர்களை மிகவும் பிடிக்கும். `காவியம்’ என்ற தலைப்பில் பிரமிள் […]
புத்தகத் திறனாய்வு – மாயப்பெருநிலம்

சென்பாலனின் முன்னைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களம்; ஈழப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில் தமிழகத்திற்குக் கடத்தப்படும் 40 கிலோ தங்கம் அங்கு விற்கப்பட்டு அந்தப் பணம் அன்று வெளிநாட்டிலிருந்த இயக்கப் பொறுப்பாளருக்கு மாற்றப்படுகிறது. அவர் அந்தப் பணத்தினை “பிட் கொயினாக” மாற்றி இரகசிய கணக்கில் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 21000 கோடி ரூபாக்கள் அந்த இரகசிய கணக்கினைத் திறப்பதற்கான குறிச்சொல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் தெரியும்; அவர்களில் ஒருவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன். அவரை நம்ப வைத்து […]