புத்தகம்
புத்தகத் திறனாய்வு – பெர்முடா
பெர்முடா முக்கோணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். பக்கத்தில போனவன் எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்திடும்; காரணமே புரியாமல் காணாமல் போனவர்கள் அதிகம் பேர். அப்படிப்பட்ட ஒரு கதைக்களம் தான் இது. “பெர்முடா” – இதுதான் கதைத் தலைப்பு. களம் என்று பார்த்தால் பொருந்தாக் காமம்; மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமம் இதுதான் கதையின் கரு. சில புத்தகங்களைப் படிக்கும் போது, ஏன்தான் இதைப் படித்தோம் என்று தோன்றும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அப்படித் தான் தோன்றியது. […]
நீர்த் திவலைகள் – சிறுகதைத் தொகுப்பு
தமிழ் இலக்கியங்களில், சிறுகதைகளுக்குச் சிறப்பான, பிரத்யேகமான இடமுண்டு. கவிதை நடையிலிருந்து வேறுபட்டு உரை வடிவில், புனைவுகள் சுருக்கமாக இருப்பதால், வாசகர்களால் சிறுகதைகள் பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகமாக உருவாக்கப்படாத காலத்தில், வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை வாசிப்பதற்காகக் காத்திருந்த பெண்கள், இளைஞர் கூட்டங்கள் ஏராளம். தொழில்நுட்பக் கலாச்சார மாற்றங்களினால் புத்தக வாசிப்பு ஓரளவு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும், அண்மைக்காலப் புத்தகக் கண்காட்சி விற்பனைப் புள்ளி விவரங்கள், சிறுகதைத் தொகுப்புகளுக்கான வரவேற்பு அதிகரிப்பதாகச் சொல்வது மகிழ்ச்சி தருகிறது. சிறுகதை […]